உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

Kavi 634 போதையின் பாதையின் வாதை அடிமுதல் நுனிவரை ஆடுது உலகம் குடித்திடும் மாந்தரால் குடிக்குள்ளே கலகம் எடுத்துமே சொன்னாலும் ஆயிரம் விளக்கம் அடிமையானோர் அடிமையாக மயக்கத்தின் பழக்கம் புத்தியைக் கெடுத்து மரியாதை கெடுக்குமது சிந்தையை சிறைப்படுத்தி வாழ்க்கையை சீரழிக்குமது சத்தியத்தைச் செய்துவிட்டு தப்பைச் செய்யுமது சொத்தை அழிக்கவைத்து ஓட்டாண்டி ஆக்கிவிடுமது குடிப்பவருக்கே தெரியாது வாழ்க்கையைக் குடிக்கும் குடிபெயரா பழக்கமாகி காலத்திற்கும் பிடிக்கும் படிப்படியாய் கரைந்துகொண்டு கல்லீரலும் துடிக்கும் முடியாத நிலைதள்ளி மரணத்தில் முடிக்கும் உழைக்கும் ஒருநாள் கூலியைக் கொண்டு அழையா விருந்ததாம் மதுவினை உண்டு களைப்பை போக்கிடும் ஒளடதம் என்று பிழைப்பது தொடரலாமா நிம்மதியைக் கொன்று கசந்த திரவத்தைக் குடித்து மயங்குவது நிசத்தை புரிந்துகொண்டால் தீரும் மயக்கமது உசத்தியாக நினைக்குமது விஷத்திற்கு சமமானது வசப்படுத்திய குடிவிட்டால் கூடாதோ சுகமானது ஊர் உலகிற்கெல்லாம் காட்சிப் பொருளாகி பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் இவர் கோமாளி சேர்ப்பார்களில்லை தெரு நாய்களிற்கு பங்காளி யாரிவரோ பூமிவிட்டு சீக்கிரமாயிவர் காலி குடும்பம் மனைவி குழந்தைகுட்டிகள் இங்கே நடுரோட்டில் குடும்பத்தலைவன் குடிமகனாக அங்கே தடுமாறி தள்ளாடியபடியே தந்தையவர் அங்கே கொடுமையிது தனயனுக்கும் வரலாமோ இங்கே அஞ்சாது துணிந்து அயலட்டம் மறந்து கஞ்சாவைப் புகைத்து சிறகின்றிப் பறந்து பிஞ்சிலே பழுத்து விடுகாலியாய்த் திரிந்து கொஞ்சியவரையும் தள்ளி வாழ்க்கையில் பிரிந்து அளவுகடந்தே போதைப்பொருட்கள் உலவும் தேசமிது பழகவைத்து சீர்குலைத்தே செய்யும் நாசமிது களவு வன்கொடுமைகள் பண்பை கேள்விக்குறியாக்குமிது இளையவர் பாதையில் போதைப்பழக்கம் தப்பாயது அடுத்த சந்ததியையும் சீரழிக்கும் போதைகலாச்சாரம் தடுத்ததை நிறுத்தும் பொறுப்பு எமைச்சாரும் கெடுத்திட வைக்காது எம்மினப் பேரும் எடுத்துச் சொல்லிடுவோம் போகாது தொலைதூரம் ஜெயம் தங்கராஜா 14-12-2022 https://youtu.be/IeXmQUgluH0

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to