உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 710 செல்லமே என் செல்வமே சிந்திடும் புன்னகையால் உள்ளம் பூரிக்குமே உதிர்க்கின்ற சொல்லாலே செவிகளில் அமுதூறுமே கடைச்சிரிப்பால் உடலுள்ளே உயிரும் சிலிர்த்திடுமே தடைப்பட்ட சந்தோசத்தை மழலைமொழி பொழிந்திடுமே செல்லமே செல்வமே அள்ளிக்கொள்ள வாராயோ உள்ளத்தில் உவகையை மொத்தமாய்த் தாராயோ சித்திரமும் உயிர்பெற்று அழகாக அசைவதென்ன நித்திரையில் கனாக்களிலும் குறும்புகளைப் புரிவதென்ன கன்னக்குழி அழகினை விபரித்திட வார்த்தையில்லை உன் செயலோ விழிகளிற்கு சொர்கவெல்லை தூங்குகின்ற அழகைப்பார்க்க கோடிக்கண்கள் வேண்டுமன்றோ ஏக்கங்களும் கவலைகளும் மனதைவிட்டு நீங்குமன்றோ சொர்க்கத்தின் உச்சமதை உணர்வும் அடைவதென்ன பக்கத்தில் நீயிருந்தால் பசிக்க மறுப்பதென்ன குழந்தையாய் அருகிரிந்து குதூகலிக்க வைக்கின்றாய் புலர்ந்திடும் பொழுதுகளில் நினைவுகளை மொய்க்கின்றாய் விம்மிவிம்மி அழும்போதும் அதுவுங்கூட அழகு அம்மாவின் அரவனைப்பால் ஒளிர்ந்துவிடும் நிலவு மண்ணிலே உதித்திட்ட புதியதொரு விண்மீனே ஜென்மமிது நிறையுமட்டும் என்னுலகம் நீதானே ஜெயம் 08-02-2024 https://youtu.be/d3CO1CtOSvs?si=vL0rNp5I_rXReg5w