உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைத்தேவன்

“முள்ளிவாய்க்கால்” முள்ளிவாய்க்கால் நினைவு முகிழுகின்ற போதெல்லாம் உள்ளூரும் உன் நினைவு உள்ளத்தை வாட்டுகுது. எழுபத்து ஏழில் எழுந்த இன கலவரத்தில் அடிபட்டு வந்த உன்னை அகதியாய் முதல் கண்டோம். பெற்றோர்க்கு மூத்த பிள்ளையாய் பொறுப்போடு மற்றோர்க்கும் உதவும் மனதால் எமை கவர்ந்தாய்! கம்பன் காவியத்தில் கண்ட சீதையைப்போல் அம்பாள் குளத் இருந்த அன்பான சீதா நீ. காந்தீயம் இயக்கத்தின் கடமைகளில் துடிப்போடு ஈய்ந்த சேவையினால் ஈர்த்தாய் எம் மனதை. எண்பத்தி மூன்றில் எழுந்த இன கலவரத்தில புண்பட்டு வந்தோர்க்கு புகலிட முகாம் அமைத்து றோட்டறி கழகத்தால் கிளிநொச்சி நகர் அருகே ஆதரித்து நாம் இயக்க ஆண்டு இரண்டாய் உழைத்தவளே! ஜெயபுரத்தில் குடியேற்ற சீவித்து அகதிகளின் அகம் நிறைந்த உறவாக அவர்களுடன் வாழ்ந்தவளே! அள்ளுண்டு போன ஆயிரமாம் உறவோடு முள்ளி வாய்க்கால் போக முன்னமே மடிந்தவளே! ஷெல் விழுந்து உன்னையும் சேர்த்தே உன் தந்தையையும் கொல்வதென விதி எழுத்தோ கொடுங்கோலர் பலி எடுப்போ? ஜயா தம்பு சைவன் ஆலயத்தை அமைத்து நிதம் செய்த பூசை தொண்டை சிவன் கூட மறந்தாரோ! கொள்ளி குடம் உடைக்க கூட ஒருவர் இன்றி அள்ளி மணல் கொட்டி அடக்கத்தை செய்த உந்தன், சிதறுண்ட உடல் சாபம் சீரளிக்கும் சிங்களத்தை இதயத்தில் எம்மோடு இறவாது நீ வாழ்வாய்! -எல்லாளன்-

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to