பவானி மூர்த்தி Swissபவானி மூர்த்திஎழுத்தின் வித்தே, பூத்தெழும் தமிழே எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே ----- எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே . பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய் ----- பாரில் ஓங்கிப் பருவம் பார்ப்பாய் . விழுந்த இடத்தில் விதையாய் முளைப்பாய் ------ விருட்சம் நீதான் விரைந்து வளர்வாய் . முழுதும் போற்ற முத்தம் இடுவாய் ----- முத்தாய் மின்னி முகப்பாய் நிற்பாய் . ஒழுக்கம் தன்னை ஓதும் தமிழே ----- ஒன்றும் மக்கள் ஒன்றச் செய்வாய் இழுக்கோ உனக்கும் இல்லை இல்லை ----- இன்சொல் தானே உன்றன் எல்லை . விழுப்பம் தரவே விரைந்து வாராய் ------ வீடும் நாடும் விரவி வாராய் . எழுத்தும் வித்தும் என்றும் இணைய ------ ஏற்றம் பெற்றாய் என்றன் உயிரே .