போனும் போராட்டமும்தங்கராஜாகவி 755 போனும் போராட்டமும் நாகரீக உலகத்தின் நாயகனாய் இதுவே ஆசைதீர பாவிக்கும் கருவியாய் இதுவே அடிமையாக்கி மனிதரை ஆளுவதும் இதுவே குடித்திடும் மதுவைவிட போதைதரும் இதுவே ஆக்கங்கள் தேங்கியும் கிடப்பது இதனாலே தூக்கத்தின் அளவும் குறைந்துபோனதும் இதனாலே உரையாடும் திறமை பாதிப்படைந்ததும் இதனாலே அரைவாசி நாளும் இரையாகிப்போவதும் இதனாலே குண்டாகி உடலும் பருமனானது எதனாலே உண்டுவிட்டு கைபேசியுடன் விளையாடுவதால் அதனாலே குடும்ப உறுப்பினர்கள் அந்நியர்களாகியதும் எதனாலே உடும்புப்பிடி பிடிச்ச கைத்தொலைபேசி அதனாலே படிப்பை பாதியில் பாழாக்கிவிடும் சாதனம் அடித்து அந்தவிடத்தில் அமர்த்திவிடும் நூதனம் உள்ளங்கையில் உலகம் இருப்பதாக பெருமை உள்ளபடி சொல்லப்போனால் ஆறறிவு அடிமை கடிகாரம் கடிதம் எல்லாமும் போச்சு முடிவுரை நாட்காட்டிக்கும் கமராக்கும் எழுதியாச்சு அலாரம் வைக்கிற மணிக்கூடும் போச்சு உலாவந்த காற்றலையும் இதற்குள் முடங்கியாச்சு இன்னும் என்னென்னதான் போனால் போச்சு கண்ணின் ஒளியும் மெல்லனவே மங்கிப்போச்சு வேண்டினாலும் நீளாத ஆயுளும் போச்சு நோண்டுவதே போனை வாழ்க்கையில் பிரதானமாயாச்சு ஜெயம் 09-01-2025