உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

போற்றப்பட வேண்டியவர்

போற்றப்பட வேண்டியவர்

கவி 706 போற்றப்பட வேண்டியவர் கவிதை இவர் படைப்பார் கவிதை இவரைப் படிக்கும் ஆளுமை விண்ணைத் தொட்டும் எளிமை இயல்போடு கூடுகட்டும் மொழியை சுவாசித்தார் என்பேனா அதற்குள்ளே வசித்தார் என்பேனா அனுபவத்தை அழகாக வரிசமைப்பார் வரிகளுள் தத்துவத்தை பிரசவிப்பார் இவர் இரசித்தால் கவிதை உயிர்பெறும் இவர் உச்சரிப்பாலே மொழி உச்சம்பெறும் பூத்துக்கொண்ட கவிகளுக்கு வாசத்தை சேர்த்துக்கொண்டவர் வார்த்தைகளை வசப்படுத்தும் சிந்தனாவாதி கற்பனாவாதி சமுதாய சீர்கேடுகளை துணிவாக உரைத்திடுவார் வினாக்குறியாய் வளையாது வியப்புக்குறியாய் நிமிர்ந்திடுவார் பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கிடும் புலவரல்ல அன்னை மொழியையும் மண்ணையும் கண்ணாக்கியவர் வைரமுடி சூடினாள் தைரிய சிங்கப்பெண் பாமுகம் கண்ட பார்புகழ்பெற்ற புதுமைப்பெண் நம்மவர் மத்தியில் மண்மேல் புதையல் இவர் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அமிர்தம் பலருக்கு முகவரிதந்த ஒரேயொரு முகவரி உற்சாக வார்த்தைகள் ஆக்கும் சொல்வளங்கள் இவர் காலத்தில் பயணிப்பது பாவலரின் பாக்கியமே ஆக்கிவிட்ட கவிகளெல்லாம் உச்சரிக்கும் இவர் பெயரே ஜெயம் 10-01-2024 https://youtu.be/YoMoBcw3cyw?si=ywnTPjXCy1owuvfm

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to