உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 170 12/04/2022 செவ்வாய் “அல்லாடும் எம் அரும் நாடு” ——————————— அழகு மிகுந்த நம் நாடு அன்பால் இணைந்த ஒர் கூடு பழகு தமிழும் சிங்களமும் பாங்குடன் உலவிய நல் வீடு! அரசியல் புகுந்து விளையாடி ஆணவம் மிகவும் தலைக்கேறி உரசல் களையே உண்டாக்கி உள்ளங்களை மாற்றி கல்லாகி! உணர்வுகள் எல்லை மீறியதால் உயிர்கள் போயின ஆயிரமாய் கனவுகள் யாவும் கருகியதால் கழிந்தது காலம் கண்ணீரில்! “தாமே” என்ற நினைப்பதனால் தப்புக் கணக்கும்போட்டதனால் நாடே இன்று நடுத் தெருவில் நாயாய் அலையுது நம்முன்னால்! விளக்கு ஏற்றவும் நெய்யில்லை விடிந்தால் சமைக்க வாயு இல்லை தலைக்கு மேலே கடன் தொல்லை தாண்டி விட்டதே தன் எல்லை! வயிற்றில் இன்று விழுகுதடி வாயும் அதனால் திறக்கிறதடி கயிற்றில் நடக்கும் காலமடி காலம் கனிந்தால் நல்லதடி! நன்றி மதிமகன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to