உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ நினைவாலயம் “ கவி......ரஜனி அன்ரன் (B.A) 19.05.2022 கண்ணீரும் செந்நீரும் கலந்த நந்திக் கடலருகே ஒரு நினைவாலயம் சிந்திய குருதிக்கும் சிதறிய உடல்களுக்கும் பலியான பல இலட்ச மக்களுக்கும் பரிகாரமான அர்ப்பணிப்பு நினைவாலயம் அவலங்களும் துயரங்களும் அரங்கேறிய முள்ளி வாய்க்கால் முற்றமதில் ஆண்டுகள் பதின்மூன்று ஆனபோதும் ஆறவில்லை இன்னும் காயங்கள் ! நந்திக் கடலோரம் சிந்துபாடி சந்தணக் காற்றிலே தவழ்ந்த பூமி கந்தக வாடையில் கலவி குண்டு மழையினில் சிதறி குருதியாற்றில் குளித்து வெந்துமடிந்து நொய்ந்து நோய்ந்து புதைந்து போயினர் மக்கள் புதைகுழி தனிலே மயானபூமியாகி மெளனித்ததே வலிசுமந்த முற்றம் ! முள்ளிவாய்க்கால் முற்றம் இன்னமும்முனகியபடி வரலாற்றுக் காவியமாய் வரையாத ஓவியமாய் காணாமற் போனோர்க்கு இன்றுவரை விடையில்லை நீதி கோரியபடி தொடர்கிறது போராட்டமும் எஞ்சிய உறவுகளுக்கு கரம் கொடுப்போம் துயரம் தீர வழி வகுப்போம் !

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to