14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது ஓங்கார வடிவம் புரியுது தன் கட்சி வலுச் சேர்க்க தமிழன் இழந்தது தாறன் தாறன் என்று பின்னால் ஓடி வடம் பிடிக்குது பிடிக்குது புதுப் பாணியில் உயர் பாதுகாப்பு வலயமோ இடம்மாறித் திரியுது மண்ணில் வேரூன்றி வளர்ந்த மரங் கண்டு விளையாடிய முற்றம் வாழ்ந்த வீடு தேடிக் கால்கள் விரையுது நாளைய தேர்தல் நாட்டு நடப்பில் வேட்டு விட்டுத் துட்டு கரையுது சிதறிய தமிழரசுக் கட்சி பதறிப் போய் பலவீனம் ஆகுது உதறி வரும் ஒளியிலே தெரிவது மெல்ல மெல்ல வந்து மனம் நிறையும் மாற்றம் ஒன்று குதறி வரும் தேர்தலில் வருகுது என்று வருகுது இன்று.