Jeya Nadesanஜெயா நடேசன்கவிதை நேரம்-17.11.2022 கவி-இலக்கம்-1598 மண்ணில் புதைந்த மைந்தர்கள் மண்ணில் புதைந்த மாவீரர்கள் விண்ணதிர மண்ணதிர வீரமானவர்கள் விதையாய் வித்திட்டு நினைவான மறவர்கள் வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி விடுதலை வேண்டி மரணித்த மைந்தர்கள் காலத்தால் அழியாத காவியப் புதல்வர்கள் அணி திரண்டு போராடி உயிரை மாய்த்தவர்கள் உங்கள் தியாகங்கள்் மரணங்களின் பிரிவுகள் என்றுமே எம்மில் நினைவில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடி புகழ் கொண்ட மாவீரர்கள் மகிமை எண்ணி மாவீரர் நினைவு நாளில் அஞ்சலி செய்கையில் வீர காவியங்கள் காலத்தால் அழியாதவையாகும் கார்த்திகை மாதத்தில் ஒளி ஏற்றி வணங்குவோம்