சுதந்திரமாமேஜெயா நடேசன்கவிதை நேரம்-02,02.2023 கவி இலக்கம்-1934 சுதந்திரமாமே --------------------- யாருக்கு சுதந்திரம் எங்கே சுதந்திரமாமே பல் வளங்களாலும் நிரம்பிய எம் தாய்த் திருநாடே தமிழருக்கென இல்லாத சுதந்திரம் பொருளாதார வீழ்ச்சியிலே தாயகமே பசி பட்டினி வறுமை கோட்டினில் வாடி வதங்கி உயிரற்ற நிலையில் 75வது சுதந்திரத் தின விழா தேவையோ பல கோடி பணம் செலவில் கொண்டாட்டமோ ஊழல்கள் காரணமாக மீட்க முடியாத நிலையில் மறுப்பு தெரிவித்து போராட்டங்கள் பல சுதந்திரத்திற்காக போராடும் இலட்சியவாதிகள் அழியலாம் சுதந்திர வேட்கை எம் மக்களிடையே அழியவே அழியாதே தமிழ் மக்களின கனவு சுதந்திரமே போராடிப் பெறுவதே போராடி மரித்த மாவீரர்கள் அடைய முடியாமற் போனதை எம் சந்ததிகள் போராடி பெறுவதை நாம் பார்த்திருப்போம் சுதந்திரத்திற்காக உயிரை தியாகம் அவர்களின் சுதந்திரப் பயிர்களின் விதைகளை வருங்காலச் சந்ததிகள் முளைக்க வைக்கும்