பிறப்பின் புதுமைகள்ஜெயா நடேசன்வியாழன் கவிதை நேரம்-28.12.2023 கவிதை இலக்கம்-1792 பிறப்பின் புதுமைகள் ------------------ பூமியில் புதுமை நடந்தது உண்மை புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை பாலக இயேசு அவதரித்து மேன்மை அன்னை மரியாள் பெற்றது உண்மை வானதூதர்கள் கானம் பாடியது இனிமை இடையர்கள் காத்து நின்றது நன்மை வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை