தரமாய் நிமிர்வாய் நாளைகவிக்கோ பரம விஸ்வலிங்கம்தரமாய் நிமிர்வாய் நாளை….. தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம் தாவரமாகும் தரணயிலே வரமாய் கிடைத்த வாழ்க்கையிது தரமாய் நிமிர்வாய் தலைமகனே! உரமா இருக்கும் உறவுகளில் - சிலர் சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் - இரு கரமே உனது எனச் சொல்வார் கவனம் அவர்மேல் கண்ணாயிரு. வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து வீணாய்ப் போகாதே உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை உயர்வாய் நிற்பாய் குன்றாக! கவிக்கோ பரம விஸ்வலிங்கம்