மார்கழிசெல்வி நித்தியானந்தன்மார்கழி மார்கழி வந்தாலே வந்துவிடும் கழிப்பு மகத்தான தினமாய் யேசுவின் பிறப்பு மானிடம் போற்றும் மேன்மையின் சிறப்பு மகியிலே கொண்டாடும் ஆனந்த விருப்பு தெருவிலே சுடர்விடும் விளக்கின் அலங்கரிப்பு திசை எங்கும் மரங்களாய் இருப்பு தென்றலும் வருடி குளிராய் நிலைப்பு தெம்மாங்கு இசையாய் பாடலும் சிறப்பு ஆழிப்பேரலை வடுவும் வந்திடும் நினைப்பு ஆசியாவையே புரட்டிய உயிர்களின் குவிப்பு அவதியாய் இன்னுமே மக்களின் தவிப்பு அகத்தின் வலிகள் அணையா விளக்காய் செல்வி நித்தியானந்தன்