உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

நிலவும் நிலாவும்!!

🌕 நிலாவும் முழுநிலவும் 🌕

சிறுவர் சிறுகதை

அன்று ஞாயிற்றுக்கிழமை.

மாலை நேரம். வானம் அழகாகக் காட்சியளித்தது. நாள் முழுவதும் விளையாடிக் களைத்திருந்த நிலா, வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தாள்.

அப்போது அம்மா அவளை அன்புடன் அழைத்தார்.

“நிலா! அந்தக் கொப்பியை எடுத்துக்கொண்டு வாங்கோ. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே? ஒரு ஐந்து நிமிடங்கள் நாங்கள் எங்களுடைய தாய்மொழியான தமிழைப் படிப்போம்.”

“இல்லையம்மா! எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் விளையாட வேண்டும்!” என்றாள் நிலா.

அம்மா புன்னகைத்தார்.

“நிலா! நாள் முழுவதும் நீ நல்லா விளையாடிக் களைச்சிருக்கிறாய். ஒரு ஐந்து நிமிடங்கள் எங்களுடைய தாய்மொழியைக் கற்றுக்கொள்வதற்காக ஒதுக்குவதில் தப்பில்லையே?”

சிறிது நேரம் சிந்தித்த நிலா,

“சரியம்மா! நான் என்னுடைய தமிழ்க் கொப்பியை எடுத்துக்கொண்டு வருகிறேன்!” என்று கூறிவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

கொப்பியுடன் திரும்பி வந்த நிலா, தற்செயலாக வானத்தைப் பார்த்தாள்.

வானத்தில் அழகான வெள்ளி வட்டம் ஒன்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அதைக் கண்டதும் அவளுக்கு ஆச்சரியம்!

“அம்மா! அம்மா! இன்றைக்கு வானத்தில் வட்டமாக அழகான வெளிச்சம் தெரிகிறதே! அது என்னம்மா?” என்று கேட்டாள்.

“ஆ! அதுவா நிலா? அதுதான் முழுநிலவு!” என்றார் அம்மா.

“முழுநிலவா? அப்படியென்றால் என்னம்மா?” என்று மீண்டும் கேட்டாள் நிலா.

“வானத்தில் இருக்கின்ற நிலவு இன்றைக்கு முழுமையான வட்ட வடிவத்தில் காட்சியளிக்கிறது. இப்படியான நாளைத்தான் நாங்கள் பௌர்ணமி என்று சொல்லுவோம்.”

“அப்படியாம்மா? எவ்வளவு அழகாக இருக்கிறது அந்த நிலவு!” என்றாள் நிலா.

சிறிது நேரம் நிலவைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது.

“அம்மா! அப்படியென்றால் நானும் அந்த நிலவும் ஒன்றா?”

அம்மா சிரித்துக்கொண்டே அவளை அணைத்துக்கொண்டார்.

“ஆமாம்மா! உனக்கும் அந்த நிலவுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த நிலவின் பெயரைத்தான் நான் உனக்கு வைத்திருக்கிறேன்!”

“அப்படியாம்மா? அந்த நிலவின் பெயர்தான் எனக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் நிலா.

“ஆமாம் செல்லமே! நிலா என்ற உன்னுடைய பெயர் நிலவைக் குறிக்கும் அழகான பெயர். நிலவு இருளில் ஒளி தருவதுபோல நீயும் உன் அறிவாலும் அன்பாலும் பிறருக்கு ஒளியாக விளங்க வேண்டும்!”

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட நிலாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.

“அம்மா! எனக்கு இவ்வளவு அழகான பெயரா? இனிமேல் என்னுடைய நண்பர்களும் நண்பிகளும் என் பெயரைப் பற்றிக் கேட்டால், அந்த அழகான நிலவின் பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள் என்று பெருமையாகச் சொல்லுவேன்!”

அம்மா மகளின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் நிறைந்தார்.

“அம்மா! அப்படியென்றால் இன்றைக்கு நாங்கள் தமிழ் படிக்கத் தொடங்குவோமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் நிலா.

அம்மா அவளுடைய தலையை அன்புடன் வருடினார்.

“இன்றைக்கு இது போதுமம்மா! உன்னுடைய பெயரின் அர்த்தத்தையும் முழுநிலவின் சிறப்பையும் எங்களுடைய தாய்மொழியிலேயே தெரிந்துகொண்டோம் அல்லவா? இதுவும் ஒரு நல்ல தமிழ்ப் பாடம்தான்!”

“அப்படியென்றால் நாளைக்கு?” என்று கேட்டாள் நிலா.

“நாளைக்கு இன்னும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி அழகாகத் தமிழ் கற்றுக்கொள்வோம். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டால் நம்முடைய தாய்மொழியில் நல்ல அறிவைப் பெறலாம்!”

“நன்றியம்மா! நன்றி!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் நிலா.

பின்னர் மீண்டும் வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

முழுநிலவு அழகாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

“அம்மா! இன்றைக்கு எனக்கு நிறைந்த சந்தோசம்! அந்த முழுநிலவைப் போல நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். இனிமேல் தினமும் கொஞ்ச நேரம் தமிழ் படிப்பேன்!” என்றாள்.

மகளின் வார்த்தைகளைக் கேட்ட அம்மாவின் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்தது.

வானத்தில் முழுநிலவு ஒளிர்ந்தது.

வீட்டில் நிலாவின் முகம் மலர்ந்தது.

தாய்மொழியின் அருமையை உணர்ந்த அந்தச் சிறுமியின் உள்ளத்தில் அறிவொளியும் மலரத் தொடங்கியது!

🌸 கதையின் நீதி 🌸

தினமும் சில நிமிடங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்வோம்!

தாய்மொழி நம் அடையாளம்!
அதனைக் கற்பது நம் பெருமை!

🌹 நன்றி! வணக்கம்! 🌹

✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து

சிறுகதையைப் பகிரவும்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to