**கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்றமை குறித்து கஸ்ஸப்ப தேரர் விளக்கம்**
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி ஹோட்டலுக்குத் தனது முகத்தை மறைத்தவாறு சென்றமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த ஹோட்டலுக்குச் சென்றமை மற்றும் அங்கு தங்கியிருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலளித்துள்ள கஸ்ஸப்ப தேரர், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவி பெறுவதற்கும் ஓய்வெடுப்பதற்குமாகவே ஹோட்டலுக்குச் சென்றதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

