75 வருட ராட்சத கிறிஸ்துமஸ் மரம் தறிக்கப்பட்டது.
23 மீட்டர் உயரமுள்ள அந்த நார்வே ஸ்ப்ரூஸ் (Norway Spruce) மரம், சுமார் 322 கிலோமீட்டர் பயணம் செய்து சனிக்கிழமை ராக்ஃபெல்லர் மையத்தைச் (Rockefeller Center) சென்றடையும்.
அங்கு மரத்தில் 50,000க்கும் மேற்பட்ட வண்ண LED விளக்குகள் பொருத்தப்படும்.
அதன் உச்சியில் 408 கிலோகிராம் எடையுள்ள ஸ்வரோவ்ஸ்கி (Swarovski) நட்சத்திரம் வைக்கப்படும்.
டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் மரத்தின் விளக்குகள் மின்னத் தொடங்கும்.
ராக்ஃபெல்லர் மையத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பாரம்பரியம் 1931ஆம் ஆண்டு தொடங்கியது.
நியூயோர்க் புறப்பட்டது கிறிஸ்துமஸ் மரம்

