**பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி பயணம்**
பொதுநலவாய நாடுகளின் 28ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய அன்டிகுவா மற்றும் பார்புடா நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர் தனது உத்தியோகபூர்வப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணம் நவம்பர் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பயணத்தின்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடவுள்ளார். மேலும், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பொதுநலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான மாநாட்டுக் கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

