AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

சின்னக் கைகளின் பெரிய உதவி!!

🌸 சின்னக் கைகளின் பெரிய உதவி! 🌸

🪔 சிறுவர் சிறுகதை 🪔

“சுமதி! பள்ளிக்கூடத்தால் களைச்சுப் போய் வந்திருப்பீங்கள். உடுப்புகளை மாற்றிக்கொண்டு வாங்கோ!”

“அம்மா! எனக்கு நல்லா பசிக்குது. ஏதாவது சாப்பிடக் கொடுக்குறீங்களா?”

“ஓம் சுமதி! உங்களுக்காகத்தான் நான் வடை சுட்டுக்கொண்டிருக்கிறேன். இன்னும் அஞ்சு நிமிஷத்திலே எல்லாம் தயாராகிவிடும். நீங்கள் உடுப்பை மாற்றிக்கொண்டு, கை கழுவிட்டு ஓடி வாங்கோ!”

“இன்றைக்கு என்னம்மா? ஏதாவது விசேஷமா?”

“ஓம் சுமதி! இன்றைக்குக் கார்த்திகை விளக்கீடு!”

“கார்த்திகை விளக்கீடா அப்பிடி என்றால் என்னம்மா?”

“அதுவா? அது எங்களுடைய சமய நம்பிக்கை சார்ந்த ஒரு விழாவம்மா! கோயிலுகளிலே விளக்கு ஏற்றுவது, சிவனையும் முருகக் கடவுளையும் வணங்குவது, வீடுகளிலே அழகான தீபங்கள் ஏற்றுவது. இது எங்களுடைய நம்பிக்கையம்மா!”

“அம்மா! அப்படியா? எங்கள் வீட்டிலும் விளக்கு ஏற்றுவீங்களா? என்னத்துக்கு நாங்கள் விளக்கு ஏற்றணுமம்மா?”

“சுமதி! விளக்கு ஏற்றியவுடனே இருள் எப்படி மறைந்து போகிறதோ, எல்லா இடங்களிலும் வெளிச்சம் எப்படிப் பரவுகிறதோ, அப்படித்தான் எங்கள் வாழ்க்கையிலும் துன்பம் என்ற இருட்டு விலகி, மகிழ்வு என்ற ஒளி பரவ வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் விளக்கு ஏற்றி வீடுகளிலே வழிபடுவதம்மா!”

“சரியம்மா! இன்றைக்கு நானும் உங்களோடு சேர்ந்து விளக்கு ஏற்றலாமா?”

“நிச்சயமா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் சுமதி! நாங்கள் எங்கள் வீட்டிலே படிகளிலும், பக்கங்களிலும், சாமி படத்துக்கு அருகிலும் அழகழகாக விளக்குகளை ஏற்றுவோம்.”

“அம்மா! நானும் உங்களோடு சேர்ந்து இன்றைக்கு நிறைய விளக்குகள் ஏற்றப் போறேன். படம் எல்லாம் எடுத்து என்னுடைய நண்பிகளுக்கெல்லாம் காட்டப் போறேன் அம்மா!”

“சரியம்மா!”

“நான் உடுப்பை மாற்றிக்கொண்டு ஓடி வரேன்!”

“ஓடி வாங்கோ! இந்தச் சின்ன மகள் இன்றைக்கு எனக்கு நிறைய உதவி செய்யப் போகிறாள்!”

என்று மகிழ்ச்சியோடு கூறிய அம்மா, சுமதிக்காகச் சுட்ட வடைகளைத் தட்டில் எடுத்து வைத்தார்.

உடுப்பை மாற்றிக்கொண்டு வந்த சுமதி, கைகளைக் கழுவிவிட்டு அம்மா சுட்ட வடைகளை ஆசையோடு சாப்பிட்டாள்.

மாலை நேரம் நெருங்கியது.

அம்மாவுடன் சேர்ந்து அகல்விளக்குகளை எடுத்து அழகாக அடுக்கி வைத்தாள் சுமதி. விளக்குகளில் எண்ணெய் ஊற்றவும் திரிகளை வைக்கவும் தனது சின்னக் கைகளால் உதவி செய்தாள்.

அம்மா ஒவ்வொரு விளக்காக ஏற்றி வைத்தார். சுமதி அவற்றை மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்தாள்.

வீட்டின் படிகளிலும் முற்றத்திலும் ஏற்றப்பட்ட விளக்குகள் அழகாக ஒளிர்ந்தன.

“அம்மா! எங்கள் வீடு எவ்வளவு அழகாக இருக்குது பாருங்கோ!”

“ஓம் சுமதி! உங்கள் சின்னக் கைகளின் பெரிய உதவியால்தான் இன்றைக்கு எங்கள் வீடு இவ்வளவு அழகாக ஒளிர்கிறது!”

அம்மாவின் பாராட்டைக் கேட்ட சுமதியின் முகம், கார்த்திகைத் தீபங்களைப் போலவே மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

🪔 சிறிய கைகளால் செய்யும் உதவியும் பெரிய மகிழ்ச்சியைத் தரும்! 🪔

✍️ ஆக்கம்: சிவதர்சனி இரா
🇨🇭 சுவிட்சர்லாந்து

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give