AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

சின்னக்குழந்தையின் பெரிய செயல்!!

🌸 சின்னக் குழந்தையின் பெரிய செயல்! 🌸

🌼 சிறுவர் சிறுகதை 🌼

மதன் தனது அப்பப்பாவுடன் மாமா வீட்டிற்குச் சென்று, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தான்.

அது மாலை நேரம் என்பதால் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மதனுக்கும் அப்பப்பாவுக்கும் இருக்கைகள் கிடைத்திருந்தன. பின்னர் ஏறியவர்கள் நின்றபடியே பயணம் செய்தார்கள்.

அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் வயதான பாட்டி ஒருவர் கையில் ஊன்றுகோலுடன் ஏறினார்.

அவரால் சரியாக நிற்க முடியவில்லை. இருக்கைகளின் ஓரங்களைப் பிடித்தபடி சிரமத்துடன் நின்றார்.

முதியவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் சிலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் யாரும் பாட்டிக்கு இடம் கொடுக்கவில்லை.

இதைக் கண்ட மதன் கவலையடைந்தான்.

“அப்பப்பா! நான் எழுந்து உங்களுக்குப் பக்கத்தில் நிற்கவா? அந்தப் பாட்டி எனது இருக்கையில் அமரட்டுமே!” என்றான்.

“ஓம்! ஓம்! நல்ல காரியம். நீங்கள் எனக்குப் பக்கத்தில் நில்லுங்கள்!” என்றார் அப்பப்பா.

உடனே மதன் எழுந்து,

“பாட்டி! நீங்கள் இங்கே இருங்கோ! நான் அப்பப்பாவுக்குப் பக்கத்தில் நிற்கிறேன்!” என்றான்.

பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

“நன்றி, தம்பி!” என்று மதனின் கன்னத்தை அன்புடன் தடவிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

மதன் மனநிறைவுடன் அப்பப்பாவைப் பார்த்துச் சிரித்தான்.

“கெட்டிக்காரன்! வயதானவர்களுக்கு நாம் மரியாதையும் உதவியும் செய்ய வேண்டும். நீங்கள் செய்தது நல்ல செயல்!” என்று அப்பப்பா பாராட்டினார்.

மதன் மகிழ்ச்சியடைந்தான்.

சின்னக் குழந்தைக்குப் புரிந்த மனிதநேயம், அங்கிருந்த சில பெரியவர்களுக்குப் புரியவில்லை!

🌷 நீதி:

உதவி செய்வதற்கு வயது முக்கியமல்ல; அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனமே முக்கியம்!

✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து

 

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give