வரு முன் காப்போம்!!
🌸 வருமுன் காப்போம்! 🌸
🌼 சிறுவர் சிறுகதை 🌼
மாலாவும் மயூரியும் அக்கா தங்கைகள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்.
மாலா எப்போதும் கவனமாகச் செயல்படுவாள். மயூரியோ சற்றுச் சின்னப்பிள்ளைத்தனமாக இருப்பாள்.
ஒருநாள் பாடசாலைக்குப் புறப்படும்போது வானம் இருண்டிருப்பதைக் கவனித்த மாலா, மழை அங்கியையும் குடையையும் தனது பைக்குள் எடுத்து வைத்தாள்.
மயூரியோ எதையும் கவனிக்காமல் புறப்பட்டாள்.
இருவரும் பாடசாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மழை பலமாகப் பெய்யத் தொடங்கியது.
மாலா உடனே மழை அங்கியை அணிந்துகொண்டாள்.
“ஐயோ! நான் குடையும் கொண்டு வரவில்லை! மழை அங்கியும் கொண்டு வரவில்லை!” என்று மயூரி கவலைப்பட்டாள்.
அப்போது மாலா,
“மயூரி! இந்தாங்கோ குடை. நான் மழை அங்கி அணிந்திருக்கிறேன். நீங்கள் குடையைப் பிடித்துக்கொண்டு வாங்கோ. இனிமேலாவது முன்கூட்டியே சிந்தித்துச் செயல்படப் பழகுங்கோ!” என்றாள்.
மயூரி தனது தவறை உணர்ந்து தலைகுனிந்தாள்.
“நன்றி, அக்கா! இனிமேல் கவனமாக இருப்பேன்!” என்றாள்.
இருவரும் மழையில் நனையாமல் சரியான நேரத்திற்குப் பாடசாலையைச் சென்றடைந்தார்கள்.
🌷 நீதி:
முன்கூட்டியே சிந்தித்துச் செயல்படுவதும், பிறருக்கு உதவி செய்வதும் சிறுவயதிலிருந்தே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நற்பண்புகளாகும்.
✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
