AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

நானும் நீந்துவேன்!!

🌊 நானும் நீந்துவேன்! 🌊

🌸 சிறுவர் சிறுகதை 🌸

“ஐயோ அம்மா! என்னைத் தண்ணிக்குள்ளே தள்ளிவிட்டான் காந்தன். எனக்கு நீந்தத் தெரியாது. அம்மா! அம்மா! என்னைக் காப்பாத்துங்க!”

கைகளையும் கால்களையும் மடித்தபடி, கண்களை இறுக மூடிக்கொண்டு பதைபதைத்துக் கத்தினான் முகிலன்.

இதைக் கண்ட அம்மா மெல்லத் தட்டி,

“முகிலன்! முகிலன்! என்ன கத்துறீங்க? என்ன பிரச்சனை?” என்று எழுப்பினார்.

திடீரெனக் கண்விழித்த முகிலன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு,

“அம்மா! என்னைக் காந்தன் தண்ணிக்குள்ளே தள்ளிவிட்டான். எனக்கு நீந்த முடியல!” என்றான்.

“காந்தனா? காந்தன் எப்ப வந்தான்? நீங்க நித்திரையில கனவு கண்டீங்களா முகிலன்?”

அப்போதுதான் தான் கண்டது கனவு என்பதை உணர்ந்த முகிலன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“அம்மா! நான் கனவா கண்டேனா?”

“ஆமாம் முகிலன்! நாங்கள் இன்றைக்குத்தானே நீச்சல் பழகப் போறோம். அதுக்கிடையில நீந்துற கனவு வந்துவிட்டதா?”

“ஆமாம் அம்மா! இரவு முழுவதும் நீச்சல் பழகப் போறதைப் பற்றியே நினைச்சுக்கொண்டு படுத்தேன். அதனால்தான் இப்படிக் கனவு வந்திருக்கு. ஆனால் எனக்குப் பயமா இருக்கு அம்மா! எனக்கு நீந்தத் தெரியாது!”

“முகிலன்! நீந்தக் கற்றுக்கொள்ளத்தானே போறோம். எந்த விடயத்தையும் புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது பயமும் சந்தேகமும் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டால் சின்னக் குளத்தில் பழகிப் பெரிய குளத்திலும் நீந்தலாம்.”

“சரி முகிலன்! கனவில் காந்தன் எங்கே வந்தான்?”

முகிலன் சிரித்தபடி,

“அதுவா அம்மா! எப்பவும் காந்தன் என்னோட குறும்புகள் செய்வான்தானே! அதனால்தான் அவன் என்னைத் தண்ணிக்குள்ளே தள்ளின மாதிரியும் நான் கத்தின மாதிரியும் கனவு வந்திருக்கு!” என்றான்.

“சரி! சரி! எழும்புங்கோ! கனவு கண்டது போதும். அதை நனவாக்கப் புறப்படுவோம்!”

என்று அம்மா கூற, இருவரும் சிரித்தபடி படுக்கையை விட்டு எழுந்தார்கள்.

🌷 முற்றும் 🌷

✍️ சிவதர்சனி இரா
🇨🇭 சுவிட்சர்லாந்து

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give