AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

மஞ்சள் வண்ணப் பூக்கள்..!!

 

 

🌸 சிறுவர் சிறுகதை 🌸

நிலவனின் அப்பாவுக்கு வீட்டுத் தோட்டத்தில் மரக்கறிகளையும் பூக்கன்றுகளையும் நட்டு வளர்ப்பது மிகவும் பிடிக்கும். அதுவே அவருக்குச் சிறந்த பொழுதுபோக்காகவும் இருந்தது.

அப்பா தோட்டத்தில் வேலை செய்யும்போதெல்லாம் நிலவனும் அவருக்குச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்வான்.

அப்போது கோடைக்காலம் வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தன.

அந்தக் கோடைக்காலத்தில் என்னென்ன செடிகளை நடலாம் என்று அப்பா திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிலவன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா! எங்கள் தோட்டத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்குமா?”

“ஓம் நிலவன்! ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? மஞ்சள் நிறத்தில் நிறையப் பூக்கள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த பூ எது?” என்று கேட்டார் அப்பா.

“சூரியகாந்திப் பூ!” என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தான் நிலவன்.

அவன் முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் தெரிந்தது.

“அதுக்கென்ன நிலவன்! இன்றைக்கு நாங்கள் கடைக்குப் போகும்போது சூரியகாந்தி விதைகளை வாங்கிக்கொண்டு வந்து தோட்டத்தில் விதைத்துவிடுவோம்!” என்றார் அப்பா.

இதைக் கேட்ட நிலவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

“அப்பா! அப்படியென்றால் இப்பவே கடைக்குப் போவோம். வாங்கோ! வாங்கோ!” என்று அவசரப்படுத்தினான்.

அப்பா சிரித்தபடியே,

“இல்லை நிலவன்! நாங்கள் விதைத்த உடனேயே விதைகள் முளைத்துவிடாது. அவை முளைப்பதற்கும் வளர்வதற்கும் உரிய காலம் வேண்டும். நீங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

நான் நிச்சயமாக உங்களுக்காகச் சூரியகாந்தி விதைகளை நட்டு, எங்கள் தோட்டத்தில் அழகான மஞ்சள் பூக்களை மலர வைப்பேன்!” என்றார்.

இதைக் கேட்ட நிலவன் மகிழ்ச்சியுடன்,

“நன்றி அப்பா! நன்றி! நானும் உங்களோடு சேர்ந்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவேன். அந்தப் பூக்கள் அழகாகப் பூப்பதற்கு உதவி செய்வேன்!” என்றான்.

அந்தக் குழந்தையின் முகத்தில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!

தன் தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்கள் மலரப்போகும் நாளை எண்ணி நிலவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

🌻 கதையின் கருத்து 🌻

நாம் நமது பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். செடிகளையும் பூக்களையும் நட்டு வளர்ப்பது சிறந்த பொழுதுபோக்காகும்.

அதுவும் நமது வீட்டுத் தோட்டத்தில் என்றால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?

இயற்கையை நேசிப்போம்!
செடிகளை வளர்ப்போம்!
பொறுமையைக் கற்றுக்கொள்வோம்!

✍️ ஆக்கம்: சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give