AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

கார்த்திகைச் சுடர்

🌸 கார்த்திகைச் சுடர் 🔥 

🌷 சிறுவர் சிறுகதை 🌷

“அம்மா! அம்மா! உங்களுடைய தொலைபேசி அடிக்குது. யாரென்று பாருங்க அம்மா!”

“பொறுங்க ஷாம்! அம்மா வேலையா இருக்கிறேன். யாரென்று பாருங்க.”

தொலைபேசியை எடுத்த ஷாம்,

“ஹலோ!”

“ஓம்! அன்ரி சொல்லுங்க!”

“அம்மா இருக்கிறாவா ஷாம்?”

“ஓம்! அம்மா வேலையா நிற்கிறா.”

“அம்மாட்ட கொடுங்கடா.”

“ஓகே அன்ரி!”

“அம்மா! இந்தாங்கோ, கலைவாணி அன்ரி கதைக்கிறா.”

“சரி, சரி தாங்கோ! நீங்க போங்க ஷாம். போய் விளையாடுங்க.”

தொலைபேசியை வாங்கிய மாலா,

“சொல்லுங்க அக்கா! என்ன அவசரமா அடிச்சிருக்கிறீங்களோ?”

“இல்லை, இல்லை மாலா! இன்றைக்கு வெள்ளிக்கிழமைதானே! இந்த நவம்பர் மாதத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து சிவன் கோயிலில் விளக்கேற்றுகிறார்கள். நான் போறேன். நீங்களும் என்ன வாரீங்களோ?”

“ஓம், ஓமக்கா! நானும் வரவேணுமென்றுதான் நினைச்சிருந்தேன். கட்டாயம் நானும் வரேன். என்னையும் கூட்டிக்கொண்டு போங்க அக்கா!”

“ஓ! நானும் இவரும் போறோம். காருக்குள்ளே இன்னும் மூன்று இடம் இருக்குது. அப்ப உங்களோட வேற யாரும் வருகிறார்களா?

“நானும் ஷாமும்தான் வரோம் அக்கா!”

“சரி மாலா! பின்னேரம் சரியா ஏழரைக்குத் தயாரா நில்லுங்க. நான் வந்து கூப்பிடுறேன்.”

“சரி, சரி அக்கா! நன்றி!”

தொலைபேசியை வைத்துவிட்டு மாலா ஷாமை அழைத்தாள்,

“ஷாம்! ஷாம்!”

“என்னம்மா?”

“பின்னேரம் நாங்கள் கோயிலுக்குப் போகணும். நீங்க பின்னேரம் கோயிலுக்கு வரீங்கதானே?”

“ஓமம்மா! எனக்குக் கோயிலுக்குப் போக விருப்பம். என்னம்மா, கோயிலில் பூசையா?”

“ஓம் ஷாம்! இன்றைக்கு நமக்காக மரணித்த மாவீரர்களை நினைச்சு விளக்கேற்றுகிறார்கள். நானும் நீங்களும் போவோம்.”

“ஓமம்மா! எனக்குத் தெரியும். நான் வீடியோக்களெல்லாம் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். எனக்கு அவையளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும் அம்மா! இந்தக் கோயிலுக்குப் போய் மிச்சத்தையும் பார்க்கப் போறேன். எப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் பார்க்கப் போறேன்.”

“நல்லதுதான் ஷாம்! நாங்கள் பின்னேரம் போவோம். தயாரா இருங்கோ!”

“அம்மா! இப்ப உங்களுக்கு வேலை இருக்குதென்றால், நாங்கள் இரண்டு பேரும் வீட்டுவேலைகளை டக்கென்று முடிப்போமா?”

“ஓம் ஷாம்!”

அம்மாவும் ஷாமும் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு, மாலை கோயிலுக்குச் செல்வதற்குத் தயாராகத் தொடங்கினார்கள்.

✍️ ஆக்கம்: சிவதர்சனி  இரா

சுவிற்சர்லாந்து

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give