AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

குளத்து மீனும் குறும்பு வாத்தும்!!

🦆 குளத்து மீனும் குறும்பு வாத்தும்! 🐟

🌸 சிறுவர் சிறுகதை 🌸

ஓர் அழகான குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தன. அவை தங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நீந்தி விளையாடின.

அந்தக் குளத்தில் ஒரு குறும்பு வாத்தும் வாழ்ந்து வந்தது. அது குளத்தில் நீந்துவதோடு வெளியிலும் சென்று உணவு தேடி வந்தது.

இதைக் கண்ட சில மீன்கள் வாத்தின் மீது பொறாமை கொண்டன.

ஒருநாள் மீன்களைப் பிடிப்பதற்காகக் கொக்கு ஒன்று குளத்தின் அருகே வந்தது. அதைக் கண்ட மீன்கள் பயந்து பாறைக்குக் கீழே ஒளிந்து கொண்டன.

நீர் தெளிவாக இருந்ததால் மீன்களை எளிதாகப் பிடிக்கலாம் என்று கொக்கு காத்திருந்தது.

இதைக் கவனித்த வாத்து உடனே குளத்தில் இறங்கி நீரைக் கலங்கச் செய்தது.

இதனால் கோபமடைந்த மீன்கள், “நாங்கள் பயந்து ஒளிந்திருக்கிறோம். நீ ஏன் எங்களைத் தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்டன.

அதற்கு வாத்து,

“நீர் தெளிவாக இருந்தால் கொக்கு உங்களை எளிதாகப் பிடித்துவிடும். அதனால்தான் நீரைக் கலங்கச் செய்தேன்!” என்றது.

கலங்கிய நீரில் மீன்களைக் காண முடியாத கொக்கு ஏமாற்றத்துடன் பறந்து சென்றது.

அப்போதுதான் வாத்து தங்களைக் காப்பாற்றியதை மீன்கள் உணர்ந்தன.

தங்கள் தவற்றை உணர்ந்த மீன்கள் வாத்துக்கு நன்றி கூறின. அன்றிலிருந்து வாத்துடன் அன்பாகப் பழகின.

🌷 நீதி:

பிறரின் திறமையைக் கண்டு பொறாமை கொள்ளக்கூடாது. நாம் பொறாமை கொள்பவர்கள்கூட நமக்கு நன்மை செய்பவர்களாக இருக்கலாம்!

✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து.

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give