நவரத்தினம் மனோன்மணி

நவரத்தினம் மனோன்மணி
இலங்கை.

01.03.1949
31.07.2025

பாமுகம் உறவு சர்வேஸ்வரி சிவரூபன் அவர்களது மாமியார்..
கணவரது தாயார்.

நல்ல ஆத்மா வலிநீங்கி அமைதி பெற்று, நித்திய இளைப்பாறுதல் காண பிரார்த்திக்கின்றோம்..!
மகன் / மருமகள் / உற்ற உறவுகள் யாபேரும் விரைவில் தேறுதல் அடைய பாமுகம் உறவுகள் அன்பை பகிர்கின்றோம்.

🔅🔅🔅🔅
விழி நீர் சொரிகின்றோம்

மாமி எனும் பொற்கலசம் மறைந்து விட்டதே
உயிரோவியமாய் இருந்தவர் சுவரோவியம் ஆனாரே
அன்பாலே பிள்ளை என்று அழைத்து நின்றாரே
பண்பாலே பாசமதைக் கொட்டி நிற்பாரே
இன்முகத்தில் புன்முறுவலுமோ அழிந்து போனதோ
ஐயகோ எனக்கு இந்த வேதனையை ஏன் தந்தீர்கள்
கணவன் பிள்ளைகள் என்று காத்து நின்றீரே
ஒருகணம் எம்மை எல்லாம் மறந்து போனீரே

பேரரெனப் பாசமதைக் காட்டி வாழ்ந்தீரே

வாசமான மலராகி வாகை சூடினீர்
கடுகதியில் காலன்வரக் காரணமென்ன
எம்மையெல்லாம் பிரிந்து போக நேரமும் என்ன

யார் தருவார் உங்கள் அன்பை என்று நினையாது

விண்ணுலகில் இடம் பிடிக்கும் அவசரம் என்ன
கண்ணெதிரே நாமும் இனிக் காண்பது எங்கே

கடவுள் போட்ட கோட்டிற்கு மறுப்பதும் இல்லை

விதிவழியே உயிரிழக்கும் தத்துவம் சொல்லி
எம்மை அழும்வழியில் தவிக்கவிட்டே எங்கு சென்றீர்கள்

அண்ணாரின் இழப்பு பேரிழப்பு

Arun Kumar
Author: Arun Kumar

  • குடும்பம்
  • Ragini Alphonse says:

    எமதுஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

  • indra Mahalingam says:

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.