AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
WEB MASTER · அருண் குமார்

உங்கள் கருத்துகள்

எழுத்திலும் குரலிலும் இணைவோம்.

அருண் குமார் — FirstAudio Web Master
என் நன்றியும் பயணமும்

அன்புடன், அருண் குமார்.

நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LET’S MAKE IT BETTER

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.

🎙 குரலில் சொல்லுங்கள்அதிகபட்சம் 2 நிமிடங்கள் · 8 MB
00:00

உங்கள் பெயர், கருத்து மற்றும் குரல் பதிவு இப்பக்கத்தில் பொதுவாகத் தெரியும். குரல் கோப்புகள் 7 நாட்களுக்குப் பின் நிரந்தரமாக நீக்கப்படும்.

உங்கள் குரல்கள் ✦

சர்வேஸ்வரி.க

இறைவனுடைய அற்புதமான ஆசிகள்...பாமுகத்தினூடாக
அறிமுகமான உங்களுடைய தீவிரமான முயற்சியாக பாமுகத் தளத்தினை அலங்கரித்து அழகான அருமையான பக்கங்களாக விரிந்திட வைத்துள்ளதே பாமுகத்தின் வெற்றிகண்ட சந்தோஷ பயணமாக உச்சம் தொட்டுவிட்ட உணர்வுபூர்வமான சந்தோஷம் தருகிறது..சுயநலமற்ற தன்னார்வ உன்னதமான செயலூக்கங்களை கட்டியெழுப்பிய அதிபர் நடாமோகனுடன் அருண் நீங்களும் இணைந்ததால்
மிக்க அழகான சிறப்பான பக்கங்களாக தொடரும் என்பதிலே ஐயமேயில்லை...வாழ்த்துக்கள்..

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

நன்றி அக்கா

நேவிஸ் பிலிப்

இனிய காலை வணக்கம் இந்த நாள் நன் நாளாக வாழ்த்துக்கள்

Web Master அருண் குமார்

வெல்வது யார் பக்கத்தில என்ன பிரச்சனை ?

🎙 குரல் பதிவுகேட்டோர் 0

வெல்வது யார் பக்கத்தை பற்றி நான் சொல்ல போறேன் வெல்வது யார் பக்கத்திலே பிரசண்டஸ் அதாவது வெல்வது யார நிகழ்ச்சியா தொகுத்து வழங்குறவங்களுக்கு விளங்குறவங்களுக்கும் நிகழ்ச்சியை நிகழ்ச்சிக்கலாம் அரங்கை தொடங்கவும் அங்காள எடிட் அங்காள ரீஸ்டார்ட் என்ற பாட்டன் இருக்கு இந்த மூன்று பாட்டிலும் உங்களுக்கு மிகவும் முக்கியமான பட்டணங்கள் அரங்கை தொடங்கவும் என்ற பட்டனை வந்து நீங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது அதாவது எல்லாரும் வந்துட்டாங்க கேம் விளையாடனும் என்று ரெடியான பிறகு தான் அரங்கை தொடங்கும் கிளிக் பண்ணவும் அதுவரைக்கும் நிகழ்ச்சிகளை அந்த அந்த நிகழ்ச்சிக்கு கேள்விகளை தொகுக்கிற நேரத்தில் அதை கிளிக் பண்ணக்கூடாது தெளிவா விளங்கிக் கொள்ளுங்கள். அதை கிளிக் பண்ணக்கூடாது நாளைக்கு வந்து நிகழ்ச்சியை நடத்துனிங்கனாலும் அதுல தொடங்கின மாதிரி தான் இருக்கும் அரங்கை தொடங்கவும் வந்து நிகழ்ச்சியை தொடங்கும் போது தான் இங்க அதை கிளிக் பண்ணவும் எடிட் வந்து நீங்க மூன்று கேள்வி செய்றீங்க நாளைக்கு அஞ்சு கேள்வி ஆறு கேள்வி செய்ய போகிறீர்கள் என்றால் எடிட்ட கிளிக் பண்ணி அதுக்குள்ள கேள்விகளை செய்துவிட்டு சேவ் பண்றீங்க மூன்றாவது ரீஸ்டார்ட் என்ன நடக்கும்னு சொல்ற இப்போ உதாரணத்துக்கு இப்ப எல்லாருக்குமே நம்பர் வந்து ஆட்டோமேட்டிக்கா வரும் சரிதானே அதாவது அரங்கை தொடங்கவும் அல்லது கிளிக் பண்றாங்களோ அந்த பிரசன்ட் நம்பர் என்ன லேட்டஸ்ட் நம்பரோ உங்கள எல்லாருக்குமே வெல்வது யார் ஆட்டோமேட்டிக்கா வரும் பண்ணி இருந்தீர்கள் என்றால் ரெஜிஸ்டர் பண்ணி லொகின் பண்ணி இருந்தீங்கன்னா உங்களுக்கு பெயரும் அதுல ஆட்டோமேட்டிக்கா காட்டு யாரெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணல லாகின் பண்ணலையோ அவங்களுக்கு பேர் டைப் பண்றதுக்கான ஆப்ஷன் வரும் நீங்க பேரை கட்டாயம் டைப் பண்ணி தான் ஆகணும் இப்ப நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இடையிலே போயிட்டு எங்கேயாவது ஒரு முதலாவது கேள்வியிலே இரண்டாவது கேள்விலையோ நீங்க சிக்கிட்டீங்க கடையில் நின்னுட்டீங்கன்னா நீங்க திருப்பி வினா விட உருவாக்கத்துக்குள்ள வந்த அந்த ரீஸ்டார்ட் பாட்டில் இருக்கும் அந்த ரீஸ்டார்ட் பாட்டில் நீங்க கிளிக் பண்ணனும். இந்த ரீஸ்டார்ட் பாட்டின் எண்ணத்திற்காக வைத்திருக்கிறது இந்த ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் பண்ண என்ன நடக்கும் என்று தொகுப்பாளர்களுக்கும் சொல்றேன் விளையாடுறவங்களுக்கும் சொல்றேன் தெளிவாக த்தான் இந்த ரீஸ்டார்ட் பட்டன் வைத்திருக்கிறது நிகழ்ச்சிக்கு வந்துட்டீங்க எல்லாரும் வந்துட்டாங்க இப்ப நாங்க நிகழ்ச்சியை ஆரம்பிப்போம் என்றதுக்கு பிறகு தான் தொகுப்பாளர்கள் அரங்கை தொடங்கவும் என்றத வந்து நீங்க கிளிக் பண்ணனும் அப்பதான் கிளிக் பண்ணும் அதுக்கு முதல் நீங்க முதல் நாள் இரவு அதற்கு முதல் நாளும் இந்த கேள்விகள் செய்யும்போது நீங்கள் அதைத் தொடக்கூடாது தொட்டா அது ஓபன் ஆகி விலங்கிட்டா ஒருவேளை தவறுதலா நீங்க தொட்டுட்டீங்கன்னா ரீஸ்டார்ட் பிரஸ் பண்ணி போட்டு பேசாம விட்டுடுங்க ரீஸ்டார்ட் பண்ணி போட்டு திருப்பி வந்து நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் கேள்விகளை எடிட் பண்றதுக்கு எடிட் பண்றது இதுதான் ஒழுங்கு தயவு செய்து இந்த உலகை பின்பற்றுங்கோ நன்றி வணக்கம்

Nagula Thevan

நன்றி அருண்குமார் நான் நீங்கள் கூறியபடி இதில் இப்போது பதிவு செய்திருக்கிறேன் அதாவது இந்த வீடியோவை எனது வீட்டு தோட்டத்தில் மலர்களை இப்ப பதிவு செய்திருக்கிறேன் அந்தப் பதிவு ஏற்றப்பட்டு விட்டது மிக்க நன்றி

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

அக்கா பார்த்தேன். நன்றி தொடருங்கள் அக்கா

சிவதர்சனி இரா

🎙 குரல் பதிவுகேட்டோர் 1
Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

நன்றி. உடனுக்குடன் அந்த பகுதிகளை நீங்கள் செய்து பார்த்து அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ரொம்ப நன்றிகள். இப்போது உங்கள் சிறுகதைகளை வந்து நீங்கள் திருத்தும் வசதியை வந்து இப்போது இணையதளத்தில் பொருத்தப்பட்டுள்ளது எனவே அதை ஒரு தடவை முயற்சி செய்து பார்த்து அறிய தாருங்கள் நன்றி.

சிவதர்சினி

🎙 குரல் பதிவுகேட்டோர் 2
Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

நன்றி சிவதர்ஷினி . நீங்கள் அதைக் குறித்து அறியத் தந்ததற்கு இப்போது அதை பதிவேற்றப்பட்டுள்ளது.

Nagula Thevan

இங்கிலாந்து செய்திகள் போட்டால் இலகுவாக இருக்கும்.
நன்றி

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

பதிவேற்றப்பட்டது.

சாந்தினி துரையரங்கன்

குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

கட்டாயம் செய்கிறேன்

Nagula Thevan

சன்றைஸ் செய்திகள் இது வரை வந்தற்றை போட்டுள்ள ஈர்க்கும். சிறப்பு.
மிக்க மகிழ்ச்சி
நன்றி. அரண்.

Web Master அருண் குமார்

சாந்தினி துரையரங்கன்

குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.

↳ Web Master அருண் குமார்

என்ன விளம்பரம் ? அதை முகப்பு பக்கத்தில் சேர்க்கலாம் தானே. என் உறவுகளின் பக்கம் சேர்க்கவேண்டும். விளக்கமாய் சொல்லமுடியுமா ?

↳ சாந்தினி துரையரங்கன்

எங்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகள் பதிவதற்கு.
மிக நன்றி இப்போ பார்த்தேன். அழகாக செய்துள்ளீர்கள்.
👏👏👏👍வாழ்த்துகள்

அருண்குமார்

தமிழ்ச் சொல் வேட்டை
வணக்கம், ஃபர்ஸ்ட் ஆடியோ உறவுகளே!

எழுத்துக் கட்டத்துக்குள் ஆறு தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு சின்னக் குறிப்பை வைத்தே அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? வாங்க, தமிழ்ச் சொல் வேட்டை விளையாடலாம்!

முதலில், விளையாட்டுப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளில் ஒன்றைப் படியுங்கள். உதாரணத்துக்கு, “உயரத்திலிருந்து கீழே கொட்டும் இயற்கையான நீரோட்டம் எது?” என்று கேட்டால், உங்களுக்கு என்ன சொல் தோன்றும்?

அருவி! இப்போது அந்தச் சொல்லை எழுத்துக் கட்டத்தில் தேடுங்கள். சொல் குறுக்காகவோ, மேலிருந்து கீழாகவோ, சாய்வாகவோ இருக்கலாம்.

கைப்பேசியில் விளையாடும்போது, சொல்லின் முதல் எழுத்தைத் தொட்டு, கடைசி எழுத்து வரை விரலை இழுங்கள். அல்லது, முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் தனித்தனியாகத் தொட்டுத் தேர்ந்தெடுக்கலாம். கணினியில் மவுஸ் மூலமும் இதேபோல் தேர்ந்தெடுக்கலாம்.

சரியான சொல்லைக் கண்டுபிடித்ததும், அந்த எழுத்துகள் நிறம் மாறும். எத்தனை சொற்களைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள், அதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

நண்பருக்கும் இந்தச் சவாலைக் கொடுக்கலாமே! ‘விளையாடுவது எப்படி?’ பகுதிக்குக் கீழே இருக்கும் ‘Invite Friends’ பொத்தானை அழுத்தி, இணைப்பைப் பகிருங்கள். ஆறு சொற்களையும் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பாருங்கள்!

இன்றைய சொல் வேட்டை உங்களுக்காகக் காத்திருக்கிறது. FirstAudio.net இணையத்தளத்துக்கு வாங்க. விளையாடலாம் வாங்கோ!

ஜெயா நடேசன்

வணக்கம் அருள் உங்கள் அயரா முயற்சிக்கு சிறப்பான நல் வாழ்த்துகள் இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்.உங்களிடம் ஒரு கேள்வி கவிதை புத்தகத்தில்
எனது கவிதை முழுவதுமாக பதியப்படவில்லை பார்க்கவும்

↳ நகுலவதி தில்லைதேவன்

அரண் மிக்க சிறப்பு நன்றி.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to