AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
WEB MASTER · அருண் குமார்

உங்கள் கருத்துகள்

எழுத்திலும் குரலிலும் இணைவோம்.

அருண் குமார் — FirstAudio Web Master
என் நன்றியும் பயணமும்

அன்புடன், அருண் குமார்.

நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LET’S MAKE IT BETTER

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.

🎙 குரலில் சொல்லுங்கள்அதிகபட்சம் 2 நிமிடங்கள் · 8 MB
00:00

உங்கள் பெயர், கருத்து மற்றும் குரல் பதிவு இப்பக்கத்தில் பொதுவாகத் தெரியும். குரல் கோப்புகள் 7 நாட்களுக்குப் பின் நிரந்தரமாக நீக்கப்படும்.

உங்கள் குரல்கள் ✦

அருண்குமார்

FirstAudio குறுக்கெழுத்து விளையாடுவது எப்படி?
1. விளையாட்டைத் திறக்கவும். FirstAudio பக்கத்தில் குறுக்கெழுத்து அட்டையில் உள்ள “விளையாடலாம்” பொத்தானை அழுத்துங்கள்.
2. ஒரு குறிப்பைப் படியுங்கள். ஒவ்வொரு குறிப்பும் ஒரு தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க உதவும். முதலில் உங்களுக்கு எளிதாகத் தெரியும் குறிப்பிலிருந்து தொடங்குங்கள்.
3. எண்ணைப் பார்த்துத் தொடக்கக் கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். குறிப்புக்கு அருகில் இருக்கும் எண்ணைக் கட்டத்திலும் தேடுங்கள். உதாரணமாக, “3 குறுக்கு” என்றால், 3 என்ற எண்ணுள்ள கட்டத்தில் தொடங்கி இடமிருந்து வலமாக நிரப்புங்கள்.
4. சரியான திசையில் விடையை நிரப்புங்கள். குறுக்கு விடைகளை இடமிருந்து வலமாகவும், நெடுக்கு விடைகளை மேலிருந்து கீழாகவும் நிரப்புங்கள்.
5. சந்திக்கும் எழுத்துகளைப் பயன்படுத்துங்கள். இரண்டு சொற்கள் சந்திக்கும் கட்டத்தில் இரண்டுக்கும் ஒரே எழுத்து வர வேண்டும். ஏற்கெனவே நிரப்பிய எழுத்து, அடுத்த சொல்லைக் கண்டுபிடிக்க உதவும்.
6. தெரியாத குறிப்புக்குப் பிறகு திரும்புங்கள். ஒரு விடை உடனே தெரியாவிட்டால், அடுத்த குறிப்புக்குச் செல்லுங்கள். மற்ற சொற்களை நிரப்பிய பிறகு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
7. இறுதியில் விடைகளைச் சரிபாருங்கள். நிரப்ப வேண்டிய கட்டங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளனவா என்றும், சந்திக்கும் எழுத்துகள் பொருந்துகின்றனவா என்றும் பாருங்கள்.
சிறிய உதாரணம்
“நாம் பேசும் மொழி” என்ற குறிப்புக்கு விடை தமிழ். அதை த | மி | ழ் என்று மூன்று கட்டங்களில் நிரப்பலாம்.

பதிவேற்றும் போது, நீங்கள் மேற்கொள்கின்ற பிரச்சினைகளை குறித்து

கவிதைகளை பதிவேற்றும் போது, இல்லை செய்திகளை பதிவேற்றும் போது, நீங்கள் மேற்கொள்கின்ற பிரச்சினைகளை குறித்து இன்று நீங்கள் என்னோடு பகிர்ந்து கொண்டீர்கள்.

கவிதைகளை நீங்கள் பதிவேற்றும் போது கவிதை பதிய முடியவில்லை என்றால், அது என்ன தவறு என்பது இப்போது அந்த கவிதை ஏற்றும் படிவத்திலே சிவப்பு அடையாளம் இடப்பட்டு காட்டப்படும். அந்த சிவப்பு அடையாளமிடப்படுகின்ற பட்டியின் கீழ் உங்களுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுக்கும், அதாவது வழிகாட்டியாகவும் அது என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும்.

அது ஒரு தவறாக இருந்தால் அதை காட்டும். அந்தத் தவறை விட்டு இன்னும் ஒரு தவறு இருக்கும் என்றால் நீங்கள் அந்த தவறை சரி செய்த பின்பு, அடுத்த தவறை காட்டும். இவ்வாறாக நீங்கள் கவிதையை இலகுவாக எந்த ஒரு தடயங்களும் இல்லாத படி நீங்கள் பதிவேற்ற முடியும்.

அதே போல செய்திகளை பதிவேற்றும் செய்தியும் போது நீங்கள் ஏதாவது தவறுகள் விட்டிருந்தீர்கள் என்று சொன்னால், அதுவும் உங்களுக்கு ஹைலைட் பண்ணி காட்டும். ரெட் கலர்ல இதுல தவறு இருக்கின்றது அதன் வழியையும் காட்டும்.

அதை பார்த்து நீங்கள் திருத்தங்கள் செய்வீர்கள் என்று சொன்னால், பதிவேற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இனிமேல் இருக்காது.

இன்று பேசிக்கொண்ட விடயங்கள் அத்தனையும் இணையதளத்திலே அப்டேட் செய்யப்பட்டுவிட்டது எனவே நீங்கள் அதை சரி பார்த்து அறிய தாருங்கள் நன்றி வணக்கம்.

பாஸ்வேர்டை பார்க்க கண் அடையாளம் UPDATED

இன்று நிகழ்ச்சியிலே நாங்கள் கலந்து பேசின விஷயத்தை அதாவது இப்ப லாகின் பண்ணும்போது அல்லது ரிஜிஸ்டர் பண்ணும் போதும் நாம பாஸ்வோர்ட் டைப் பண்ணுவோம். இல்லையா? அந்த பாஸ்வோர்ட் டைப் பண்ணகுள்ள பக்கத்துல ஒரு கண்ணடையாளம் இருந்தால் நல்லம் என்று சொல்லி நீங்க ரிக்வெஸ்ட் பண்ணி இருந்தீங்க. அது உண்மையாகவே நல்ல விஷயம்தான்.

ஏனென்றால் நாங்க பாஸ்வேர்டை டைப் பண்ணிட்டு, ஒருவேளை நம்ம பாஸ்வோர்ட் டைப் பண்ணினது சரியா பிழையா என்று பார்க்கிறதுக்கு அது ஒரு நல்ல ஒரு ஆப்ஷன்.

எனவே இப்போது நீங்கள் லாகின் பண்ணும்போதும், ரெஜிஸ்டர் பண்ணனும் போதும், நீங்கள் டைப் பண்ணிய பாஸ்வோர்ட் சரியா என்று பாக்குறதுக்கு அந்த கண்ணாடியாலத்தை பிரஸ் பண்ணினீங்கன்னா அந்த பாஸ்வேர்ட் தெரியும். திரும்பவும் அந்த கண்ணாடியாலத்தை நீங்க பிரஸ் பண்ணீங்கன்னா அந்த பாஸ்வேர்ட் டாட் என்று தெரியாத மாதிரி மாறும். ரெஜிஸ்டர் பண்ணும் போதும் சரி, நீங்கள் இப்பொழுது அந்த அப்டேட்டை நீங்க பயன்படுத்தலாம் நன்றி வணக்கம்.

Nagula Thevan

குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

mobile version எழுத்து அப்படி மாற்ற முடியாது அக்கா. செய்தி பகுதி நாளை போட்டுத் தருகிறேன்.

↳ Web Master அருண் குமார்

Denmark News Added

அருண்குமார்

வணக்கம், ஃபர்ஸ்ட் ஆடியோ உறவுகளே!

உங்கள் நண்பர்களோடு பாம்பும் ஏணியும் விளையாடலாமா? எப்படி இணைவது என்று பார்ப்போம்.

கைப்பேசியில் விளையாட்டுப் பக்கத்தைத் திறந்ததும், நீங்கள் உள்நுழைந்திருக்கும் பெயர் மேலே தெரியும். அதற்குக் கீழே, “இரண்டு பேர் ஆட்டம்”, “நான்கு பேர் ஆட்டம்” என்று இரண்டு பொத்தான்கள் இருக்கும்.

முதலில், இரண்டு பேர் ஆட்டம். உதாரணமாக, அருண் அந்தப் பொத்தானை அழுத்தினால், “அருண் காத்திருக்கிறார். இரண்டு பேரில் ஒருவர் இணைந்துள்ளார்” என்று தெரியும். அருண் தனது நண்பரிடம், “ஃபர்ஸ்ட் ஆடியோ விளையாட்டுப் பக்கத்துக்கு வா” என்று சொன்னால் போதும். நண்பர் அதே பக்கத்தைத் திறந்து, “அருணுடன் இணை” என்பதைத் தட்டியதும், இருவரின் கைப்பேசிகளிலும் ஆட்டம் தானாகத் தொடங்கும்.

நான்கு பேர் ஆட்டமும் இப்படித்தான். இருவர் சேர்ந்திருந்தால், “நான்கு பேரில் இரண்டு பேர் இணைந்துள்ளனர்” என்று தெரியும். இன்னும் இருவர் அதே ஆட்டத்தில் இணைந்ததும், நால்வரின் சாதனங்களிலும் ஆட்டம் தானாகத் தொடங்கும். ஒருவர் மட்டும் காத்திருந்தால், மற்ற மூவரும் அவருடைய பெயரைத் தேர்ந்தெடுத்து இணையலாம்.

ஒரே நேரத்தில் பலர் காத்திருந்தால், நீங்கள் யாருடன் விளையாட விரும்புகிறீர்களோ, அவருடைய பெயரைப் பார்த்து இணையலாம். காத்திருக்கும் ஆட்டம் எதுவும் இல்லையென்றால், உங்களுக்குப் பிடித்த ஆட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பெயர் காத்திருப்புப் பட்டியலில் தோன்றும். தனியாக அறை உருவாக்கவோ, குறியீட்டை உள்ளிடவோ தேவையில்லை.

கைப்பேசியில் ஆட்டம் தொடங்கியதும், பாம்பும் ஏணியும் பலகை மேலே இருக்கும். உங்கள் முறை வந்ததும், பலகைக்குக் கீழே “தாயக்கட்டையை உருட்டு” என்ற பெரிய பொத்தான் தோன்றும். அதைத் தட்டியதும், தாயத்தில் விழுந்த எண்ணை எல்லோரும் தங்கள் சாதனத்தில் பார்க்கலாம். பிறகு உங்கள் காய் நகரும். காய் நகர்ந்து முடிந்ததும், அடுத்த வீரருக்குப் பொத்தான் தோன்றும்.

கணனியில் விளையாடுபவர்களுக்கு, பழக்கமான அதே வடிவமைப்பு இருக்கும்.

விளையாட்டுப் பக்கத்தைத் திறங்கள். இரண்டு பேர் ஆட்டமா, நான்கு பேர் ஆட்டமா என்று தேர்ந்தெடுங்கள். காத்திருக்கும் நண்பரின் பெயரைத் தட்டி இணையுங்கள். வாங்க, விளையாடலாம்!

நேவிஸ் பிலிப்

நன்றி அருண் குமார் அவர்களே,,,
உங்கள் பணிகளுக்கு நிறைந்த வாழ்த்துக்கள்
நன்றியுடன்

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

நன்றி அக்கா

முயற்சித்து பாருங்கள்

https://firstaudio.net/crosswords/

தங்கராஜா

குரல் வழிகாட்டியை ஆரம்பிக்கும் போது தவறுதலாக ஒலிவாங்கிக்கு அனுமதி கொடுக்கவில்லை. மீண்டும் அனுமதி கொடுத்தேன் ஆனால் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை.

↳ Web Master அருண் குமார்

அனுமதி கொடுத்த பிறகு FirstAudio பக்கத்தைப் புதுப்பித்து, «குரல் வழிகாட்டி» பொத்தானை மீண்டும் அழுத்துங்கள். அப்போதுதான் புதிய குரல் அமர்வு தொடங்கும்.

இன்னும் வேலை செய்யவில்லை என்றால், Windows கணினியில் Chrome பயன்படுத்துகிறீர்கள் எனக் கொண்டு இந்த மூன்று இடங்களைச் சரிபார்க்கவும்.
1. FirstAudio பக்க அனுமதி — முகவரிப் பட்டையின் இடப்புறத்தில் உள்ள தள அமைப்புகள் ஐகானை அழுத்தி, Microphone → Allow என்று இருக்கிறதா பாருங்கள். பிறகு பக்கத்தைப் புதுப்பிக்கவும். Google Chrome Help
2. சரியான ஒலிவாங்கி — Chrome முகவரிப் பட்டையில் chrome://settings/content/microphone என்பதைத் திறந்து, நீங்கள் பேசும் ஒலிவாங்கியைத் தேர்ந்தெடுக்கவும். ஹெட்செட் இணைத்திருந்தால், அதன் ஒலிவாங்கி தேர்வாகியுள்ளதா பாருங்கள். Google Chrome Help
3. Windows அனுமதி — Settings → Privacy & security → Microphone சென்று, Microphone access மற்றும் Let desktop apps access your microphone இரண்டும் இயக்கப்பட்டுள்ளதா பாருங்கள். பிறகு Chrome-ஐ மூடித் திறந்து முயற்சி செய்யுங்கள். Google Chrome Help
அதற்குப் பிறகும் சிக்கல் இருந்தால், «குரல் வழிகாட்டி» அழுத்தும்போது திரையில் வரும் செய்தியை அனுப்புங்கள்.

நகுலா சிவநாதன்

காலையிலும் முயற்சித்தேன்
பதிய மடியவில்லை என்கிறது.
சொற்களும் குறைத்து பதிந்தேன்
முடியவில்லை

Nagula sivanathan

இரவு கவிதை பதிய முடியவில்லை
மீண்டும் முயற்சிக்க என வருகுது
கவிதை 34 சொற்களதான்
சிறுகவிதை. ஏன் அருண்?

↳ Web Master அருண் குமார்

சரி இப்போது நீங்கள் பதிவிடுங்கள்

கவிதையை 64 சொற்களில் எழுதியும் பதிவேற்ற முடியவில்லை. காரணம் ? -தங்கராஜா

புதிய கவிதைகளுக்கு அதிகபட்சம் 17 வரிகள்.
64 சொற்கள் வரம்பு நீக்கப்பட்டது.
Note :
பந்திகளுக்கு இடையிலான வெற்று வரிகளும் கணக்கில் சேரும்.

சாந்தினி துரையரங்கன்

வணக்கம்,
முதலொலி ஊடக வடிவமைப்பு அழகு.

Web Master அருண் குமார்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to