சிந்தனைகள் பதிவு

உங்கள் சிந்தனைகளை இங்கு நீங்கள் பதிவிடலாம்

  • நேவிஸ் பிலிப் says:

    வணக்கம்
    தவக்கால சிந்தனை 11/3/25
    மன்னிக்கும் மனம்
    தவறை மறக்கும்
    இறைவன் நமது தந்தை
    அவருக்கே நாம் முதலிடம்
    கொடுக்க வேண்டும்.
    புறரை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    தமது தேவைகளில் நாம்
    அவரைச் சார்ந்து வாழ வேண்டும்
    நன்றி!!!

  • நேவிஸ் பிலிப் says:

    வணக்கம்
    தவக்கால சிந்தனை 7/3/25
    “நொறுங்கிய உள்ளத்தை
    இறைவா!
    நீர் அவமதிப்பதில்லை”
    கடவுள் முன்னிலையில்
    நொறுங்கிய உள்ளத்தினராய்
    வர நாம் தயாரா?
    குற்றங்களை ஏற்போம்
    மன்னிப்பு பெறுவோம்
    இறையன்பைச் சுவைப்போம்
    மகிழ்வாய் வாழ்வோம்
    சிந்திப்போம்.

  • நேவிஸ் பிலிப் says:

    வணக்கம்
    தவக்கால சிந்தனை 6/3/25
    என்னைப் பின் பற்ற விரும்புபவர் தம் வாழ்வின்
    துன்பச் சிலுவைகளைச்
    சுமந்து கொண்டு என் பின்னே வாருங்கள் என்கிறார் இயேசு.
    இறைவா உம்மைப் பின் பற்ற
    தடையாய்இருக்கும் எம்
    பலவீனங்களில் இருந்து
    எம்மை விடுவியும்.

  • நேவிஸ் பிலிப் says:

    04/03/25
    பாமுக உறவுகளுக்கு
    இனிய காலை வணக்கம்.
    “சிந்தனை”
    பற்றுக பற்றற்றான் பற்றினை
    அப்பற்றை பற்றுக பற்று விடற்கு.( குறள் 350)
    நாம்இவ்வுலகில் தேடும் செல்வங்கள் நிலையற்றவை
    அவை ஒருநாள் மறைந்து போகலாம்.எனவே இவ்வுலக
    பற்றுக்களை விட்டு விட்டு
    நிறை வாழ்வு தரும்
    இயேசுவின் வார்த்தைகளை
    எம் வாழ்வாக்குவோம்
    அழியாத நிலை வாழ்வைப்
    பற்றிக் கொள்வோம்
    நன்றி……

  • நேவிஸ் பிலிப் says:

    02/03/25
    வணக்கம்
    சிந்தனை
    தன் குற்றம் நீக்கிப்
    பிறர் குற்றம் காண்பிற்பின்
    என் குற்றமாகும் இறைக்கு
    (குறள் 436)
    அடுத்தவர் குற்றத்தை பெரிதுபடுத்துவது நமக்கு
    அல்வா சாப்பிடுவது போல
    இனிக்கிறது.
    நம் குற்றங்களை ஏற்றுக்கொள்வது வேப்பங்காயை கடிப்பது போல கசப்பாக இருக்கிறது
    நன்றி