அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு: ஐரோப்பாவில் தேடல்!

அமெரிக்காவில் பரவிய கடுமையான பறவைக் காய்ச்சல், அந்நாட்டை வரலாறு காணாத முட்டை தட்டுப்பாட்டில் தள்ளியுள்ளது.
உள்நாட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமெரிக்கா பல நாடுகளைத் தொடர்பு கொண்டது.
டேனிஷ் பத்திரிகையான அக்ரிவாட்ச் அறிக்கையின்படி, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஏற்கனவே அமெரிக்கா அணுகியுள்ளது.
தற்போது லிதுவேனிய செய்தி நிறுவனமான எல்.ஆர்.டி அறிக்கையின்படி, அமெரிக்கா சிறிய ஐரோப்பிய நாடான லிதுவேனியாவை உதவிக்காக அணுகியுள்ளது.