Sunrise news

பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம்…

கடும் பனி மூட்டம் காரணமாக..
போர் விமானங்களுக்கான எரிபொருளுடன் பயணப்பட்ட அமெரிக்காவின் Stena Immaculate என்ற எண்ணெய் கப்பலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட சோடியம் சயனைடு ரசாயனத்துடன் பயணப்பட்ட போர்த்துகல் சரக்கு கப்பலும் பனி மூட்டம் காரணமாக மோதியுள்ளது.

இந்த மோதலில் ஸ்டெனாவின் சரக்கு கப்பல் கடுமையான சேதமடைந்து
துளை ஏற்பட்டது. இதனையடுத்து விமான எரிபொருள் கடலில் சிந்தியது. அடுத்த நொடி இரண்டு கப்பல்களும் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

விபத்துக்குள்ளான சம்பவத்தில், எவரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jeba Sri
Author: Jeba Sri