David Anthony Says:20:08
4th week period of Lent, 04/04/2025,
5th Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி………
« எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில்“……………
இறைவன் குரலில்:
—————————-
தவக்காலத்தின் 4ம் வாரம்:
04/04/2025
5ம் வெள்ளிக்கிழமை.
“உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.”
நற்செய்தி வாசகம்:
——————————- “அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.”
(புனிதயோவான்:7:1)
சிந்தனைக்கு:
—————————
“அதிர்ச்சி”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
யூதர்களை “அதிர்ச்சி”க்குள்ளாக்கியது. முதல் செய்தி: இயேசு கடவுளிடமிருந்து வந்ததாகச் சொன்னது. இரண்டாவது செய்தி: யூதர்களுக்கு கடவுள் யார்? என்பது தெரியவில்லை என்பது.
இயேசுவுக்கு எதிராக, இயேசுவுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இயேசுவின் பக்கம் பலர் நின்றனர். அவருக்கு எதிராகவும் இருந்தனர். நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம்? இயேசுவின் சார்பில் நிற்கப் போகிறோமா? அல்லது அவருக்கு எதிராக நிற்கப் போகிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.
( பிரான்ஸ்சிலிருந்து)
கேள்வி வாரம் 479
1.கியூஷுதீவு எங்குள்ளது?
2.இயற்கை குடும்பத்தின் ‘சரணாலயம்’ எனத் தெரிவித்தவர் யார்?
3.எந்த நாட்டில் தங்கச்சுரங்கம் இந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டது?
David Anthony Says:19:47
4th week period of Lent, 03/04/2025,
Thursday.

03/04/2025
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
——————————
நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?” என்றார்.
(புனிதயோவான்:
5;46,47)
சிந்தனைக்கு:
—————————
“போதனைகள்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இன்றைக்கு சொல்லப்படும் போதனைகள், நமது வாழ்வை சுடுகிறபோது, நாமும் நமக்கு போதிக்கக்கூடியவர்களை வெறுப்போடு தான் பார்க்கின்றோம். போதிக்கின்றவர்களும் எதற்கு
தனக்கு தேவையில்லாத வம்பு?
என்ற உள்ளம் கொண்டவர்களாய், மக்களைத் தொடாத
போதனையையே தந்து கொண்டிருக்கின்றார்கள்.
நமது போதனை மக்களை
தொட்டு, அவர்களது வாழ்வை மாற்றுவதாக அமைய வேண்டும்.
இத்தவக்காலத்தில்
இறைவார்த்தையை கேட்போம்.
”இறை ஆசி”யை பெற்றுக் கொள்வோம்.

டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
David Anthony Says:14:19
02/04/2025.
4th week period of Lent,
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
« எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில்………..
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் 4ம் வாரம்,
02/04/2025 புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”என்றார்.
(புனித யோவான்:5;24)
சிந்தனைக்கு:
———————————
“இறை ஆசி.”
———————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் உறவை ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். அந்த உறவின் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் காண்கிறோம்:
தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் பாவத்தை விட்டு விலகி மன்னிப்பு பெற்று சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழ

டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 18:25
01/03/2025:
4 th week period of Lent.Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர்மாண்பு”
போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
4ம் வாரம் செவ்வாய்கிழமை.
01/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். »
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு,
« இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்.»
என்றார்.
(புனித யோவான்:5:14,15)
சிந்தனைக்கு:
—————————
“நம்பிக்கை.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக, பாவத்தினால் முடக்குவாதமுற்ற நிலையில் இருந்த மனிதருக்கு இயேசு சுகம் கொடுக்கின்றார். கடவுள் இருக்கின்றபோது, பாவிகளும், முழுமையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதை, இது வெளிக்காட்டுகின்றது.
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்கிற அந்த « நம்பிக்கை », நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், எதற்கும் கவலைப்படாது, மகிழ்வாய் வாழ உந்துசக்தியாய் இருக்க வேண்டும். நாம் தவறு செய்வதற்கு வழிசெய்து விடக்கூடாது. வாழ்க்கையை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இயல்பாய் சிலரிடம் குடிகொண்டிருக்கும் உணர்வு..
ஏழெழுத்துச் சொல்?
1.ஐந்து ஏழு சேர இன்றும் சிலர் செய்வது உண்டாம்?
2.ஐந்து ஆறு ஏழு சேர இது உண்டானால் உலகை ஆளவும் முடியும்?!!
3.ஒன்றும் ஏழும் சேர இது இன்று உள்ளோரும் உள்ளனர்!!
4.ஒன்றும் நான்கும் சேர அதிகம் நமக்கும் வருவது தான்?!!
5.மூன்று ஐந்து ஏழு சேர நமக்குள் இருப்பதாய் நம்புகிறோம்?!!
6.மூன்றும் ஏழும் சேர இரு பொருள் உண்டு.. ஒன்று அசையாததாகும்..
David Anthony Says: 31/03/2025 at 19:22
4th week period of Lent Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , « மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்,வாழ்த்துக்கள்கூறி……….. தவக்காலம்:4 ம் வாரம்,31/03/2025, திங்கட்கிழமை.
இறைவன் குரலில்: —————————— “நன்மையை நாடுங்கள், நற்செய்தி வாசகம்: —————————- இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான்”என்று கூறினார்கள்.(புனிதயோவான்:4;50,51)
சிந்தனைக்கு: ———————— “சீர்கேடு” ———————— அன்பு மிக்க சகோதர,சகோதரிகளே! மேலைநாட்டுக் கலாச்சார தாக்கம், இன்று நம் நகரங்களில்,குடும்பங்களில் பரவி ,கிராமங்களுக்கு ஊடுருவிக்கொண்டிருக்கின்றது. பெற்றோர் பலர் நொந்து நொடிந்து நூலாகிக்கொண்டிருக்கின்றனர். கலாச்சார “சீர்கேடு”, என் மகனை, என்மகளை நான் இழக்கச் செய்துவிடுமோ! என்ற பயம்!ஆலயம்தோறும், ‘ஐயா, என் மகனை, மகளை இழக்குமுன் வாரும்’ என்று எத்தனையோ பெற்றோரின் வேண்டுதல்கள். இளமையின் வேகத்தில் பெற்ற தாய் தகப்பனை மறந்து, ஒட்டி, ஊட்டி உறவாடிய பந்த பாசத்தை மறுத்து, வாழ்வின் விளிம்பில் நின்று, சாவின் பள்ளத்தாக்கில் இறங்க காத்துக்கொண்டிருக்கும் மகனுக்காக,மகளுக்காக, “ஐயா, என் மகன்(ள்) இறங்குமுன் வாரும்” என்று விண்ணப்பிக்கும் பெற்றோர்களும் இதில் அடங்குவர்.
கோயில் குளம் என்றெல்லாம் அலைந்து, கௌரவம் பாராது, காவி அணிந்து, மொட்டை அடித்து, கால்நடையாய், அலுவலன் தன் மகனுக்காகக் கெஞ்சி கதறியதுபோல வாழும் பெற்றோரைப் புரிந்து கொள்வோம். இந்த தவக்காலத்தில் சிந்திப்போம்.செயல்படுவோம். ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறைஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
30/03/2025 at 18:30
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின்
இனிய நாமத்தில்
நல்வாழ்த்துக்கள்!இது வரை
நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம்இறைவனுக்கு நன்றி கூறி மாற்றம்காணும் ஆண்டில்,
« மூத்தோர் மாண்பு போற்றும்மாதத்தில், » வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
30/03/25: தவக்காலம்!
4ம் ஞாயிறு தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்: ——————————
“தந்தை மகனை நோக்கி,நீ எப்போதும் என்னுடன் இருக்கின்றாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்”
என்றார்.”
(புனித லூக்கா:15;31,32)
சிந்தனைக்கு:
——————————–
“மன மாற்றம்” ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகின்ற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். மனமாற்றத்தின் அடிநாதம் உணரப்படவில்லையெனில், மனமாற்றத்திற்கான செயல்பாடுகள் அனைத்துமே அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். போலி மனமாற்றம் கடவுள் முன்னிலையில் நிச்சயம் அருவருக்கத்தக்கதாகவும், தண்டனைக்கு ஏற்புடையதாகவும் தான் இருக்கும்.
ஆகவே,
இந்த தவக்காலத்தில் சிந்திப்போம்.செயல்படுவோம்.
உண்மையான மனமாற்றத்தை உணர்ந்திடுவோம். இறைவா!உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.
( பிரான்ஸ்) தொடரும்…………..
David Anthony Says:21:05
27/03/2023:Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்:3ம்வாரம்
16/03/2023
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
——————————அக்காலத்தில் இயேசு கூறியதாவது:
“என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.என்றார்.”
(புனித லூக்:11;23)
சிந்தனைக்கு:
————————————
“இணைந்திருப்போம்.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். பலவேளைகளில் இந்த சமூகத்திலே வாழ்ந்தாலும், அதிலிருந்து விலகியே வாழ்ந்துவருகிறோம். உண்மை சிதைக்கப்படும்போது, நமக்கென்ன? இதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல, பாராமுகமாய் இருக்கிறோம். அதுவும் உண்மையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்தான். இந்த சமூகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுகம் என்னை ஏதாவது ஒருவகையில் உந்தித்தள்ள வேண்டும். அதுதான் இந்த சமூகத்தோடு மட்டுமல்ல, இயேசுவோடும் « இணைந்திருப்பதற்கான »வழி.

David Anthony Says: 13:26
26/03/2025:
3rd week period of Lent.
Wednesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

3ம் வாரம் புதன்கிழமை.
26/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.”
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.என்றார்.
(புனித மத்தேயு:5:17)
சிந்தனைக்கு:
——————————
“திருச்சட்டம்
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “திருச்சட்டத்தை” அழிப்பதற்காக வரவில்லை எனவும், நிறைவேற்றுவதற்காகத்தான் வந்திருக்கின்றேன் எனவும் இயேசு சொல்கின்றார். எனவே, இறைவார்த்தையை நாம் நன்கு கற்றிருக்கின்றோம் என்பதன் அடையாளம் பிறருக்கு அதைக் கற்பித்து, அவர்களை அதன்படி வாழவைப்பதே. இதையே நாம் “நற்செய்தி அறிவித்தல்” என்கின்றோம். இறைவார்த்தையைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி அதைப் பிறருக்குக் கற்பிப்பதே.
கடவுள் பக்தி, கடவுள் சார்ந்த காரியங்களில் பக்தி என்பதை நாம் பலவேளைகளில் தவறாகப் புரிந்து கொள்கின்றோம். எனவே தான், கடவுளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் நாம், ஏழை, எளியவர்களுக்கு இரங்க மறுக்கின்றோம். உண்மையான பக்தியை இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:13:13
25/03/2025: 3rd week period of Lent Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

3ம்வாரம்,25/03/2025 செவ்வாய்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”
என்றார்.”
(புனித மத்:18:35)
சிந்தனைக்கு:
————————————
“மன்னிப்பு”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
நாம் செய்கின்ற தவறுகள், குற்றங்கள் ஏராளம், ஏராளம். ஆனால், நமது பாவங்களை இறைவன், ஒரு பொருட்டாக எண்ணாமல், மன்னிக்கின்றார். ஆனால், நாம் நமக்கெதிராக சிறிய தவறு செய்யும், நமது உடன் வாழ்கிற சகமனிதர்களை மன்னிக்க மறுக்கின்றோம்.
நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.இத்தவக்காலம்
நமக்கு வழி காட்டும் காலமாக இருக்கட்டும்.

ஒரு காலத்தில் இதன் மீதான இரசிப்பு அதிகம்..ஏழெழுத்துச் சொல்?
1.முதல் மற்றும் கடைசி சேர நம்மைப் பாதுகாப்பது?
2.ஐந்தும் ஏழும் சேர அழகு பெண்களுக்கு இதனால்?
3.இறுதி மூன்றெழுத்தும் சேர உலகில் அதிகம் இப்போ இது?
4.முதல் மூன்றும் சேர செயல்பாடு ஒன்று?
David Anthony Says: 19:40
24/03/2025:
3rd week period of Lent.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

3ம் வாரம் திங்கட்கிழமை.
24/03/2025.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.»
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: « எலியா சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. »என்றார்.
(புனித லூக்கா:4:24,26-27)
சிந்தனைக்கு:
——————————
“பொதுவான பண்பு.”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார். இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இரண்டுபேரிடத்திலுமுள்ள பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை யூதர்களிடத்தில் இல்லை.
நம்பிக்கைதான் இரண்டுபேருக்கும் மீட்பைத்தந்தது. இயேசு சொல்ல வருகிற கருத்து இதுதான்: யாராக இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடவுளுக்கு நெருக்கமான இனமாக இருந்தாலும், நம்பிக்கைதான் ஒருவருக்கு மீட்பைத்தர முடியுமே தவிர, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற தகுதி மட்டும், ஒருவருக்கு மீட்பைப்பெற்றுத்தர முடியாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையினால்தான் வாழ்வு பெறுகின்றனர் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
22/03/2025at 21:00
2nd week period of Lent.
Saturday
அன்பு பாமுகம்
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய
நாமத்தில்
நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய
சித்தங்கொண்ட நம்
இறைவனுக்கு நன்றி கூறி ,
“மூத்தோர்மாண்பு”போற்றும்
மாதத்தில்,வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்:
——————————
22/03/25 தவக்காலம் 2ம் சனி தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்:
——————————
“அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”என்றார்.
(புனிதலூக்கா:6;39,42)
சிந்தனைக்கு:
——————————
“வெளிவேடம்”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நாம் நேர்மையாளர்கள் போல, தவறே செய்யாதவர்கள் போல, வெளிவேடகாரர்களாக நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களை நமக்குக் கீழாக எண்ணுகிறோம். மற்றவர்களை மதித்து, உண்மையான அன்பு செய்து வாழ, ஆண்டவரிடத்தில் நாம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..
David Anthony Says: 18:55
21/03/2025:
2nd week period of Lent.
Friday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

போற்றும் மாதத்தில்………..
தவக்காலத்தின்
2 வாரம் வெள்ளிக்கிழமை.
21/03/2025.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.”
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு அவர்களிடம், ” கட்டுவோர் “புறக்கணித்த”கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்.
என்றார்.
(புனித மத்தேயு:21:42,43)
சிந்தனைக்கு:
—————————
“புறக்கணிப்பு.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! நற்செய்தி வாசகத்திலே இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். இயேசு தன்னை சுட்டிக்காட்டியே இந்த உவமையை துவங்குகின்றார். ஏனென்றால் தான் எவ்வாறெல்லாம் இந்த மக்களால் புறக்கணிக்கப்பட இருக்கின்றார் என்பதனை முழுமையாக இயேசு அறிந்திருந்தார். இவை அனைத்திற்குமே காரணம் நான் என்ற அகந்தை. ஏனென்றால் ஒருபுறம் தலைமைக்குருக்கள் தாங்கள் பெரியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மிதக்கின்றார்கள். இன்னொருபுறம் பரிசேயர்கள். இத்தகைய நான் என்ற தீராத பசி இயேசு புறக்கணிக்கப்பட காரணமாக அமைகின்றது.
இதிலே நீயும், நானும் வகிக்கும் பாத்திரம் என்ன?
சிந்திப்போம்!
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
உற்சாக வணக்கம்
இன்றைய முற்றத்து மலர்கள் நிகழ்வில் சிறப்பித்த விருந்தினர் தேடலும், ஆய்வும்,தமிழ்ச்சொற்களின் மூலவேர் தேடல் தொன்மையின் வழி தேடல் சிறப்பே. பாராட்டுக்கள். பலதேடலின் பணி தொடர வாழ்த்துக்கள். தொகுப்பாளர்
சாந்தினி அவர்களுக்கும்
மிகுந்த வாழ்த்துக்கள்.
நன்றி
David Anthony Says: 21:00
29/03/2025:
2nd week, period of Lent.Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
2 வாரம் வியாழக்கிழமை.
29/02/2024.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். »
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கி கூறியதாவது: « மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள். »
என்றார்.
(புனித லூக்கா:16:19,31)
சிந்தனைக்கு:
—————————
“இறைசாயல்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
கடவுள் ஒருவர்தாம் என்றாலும்,
அவரின் பிரதிபலிப்பான “இறைச்சாயல்”
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு என்பதனை எல்லா மதங்களும் கூறுகின்றது.இதனை உணருகின்றவன் இறைவனாகின்றான்.
பழைய ஏற்பாட்டு சமுதாயமாக இருக்கட்டும். புதிய ஏற்பாட்டு சமுதாயமாக இருக்கட்டும் ஒரு ஆதிக்க வர்க்கத்தை கொண்டதாக இருக்கின்றது. ஏழை அடிமையாகவும், பணக்காரன் ஆதிக்கம் செலுத்துபவனாகவும் வாழ்ந்தார்கள். அதனை எதிர்க்கவே இயேசு இந்த பணக்காரன், ஏழை உவமை வழியாக கற்றுக்கொடுத்து புதிய பாடத்தினை புகுட்டுகின்றார்.நாம் எப்போது மற்ற மனிதர்களின் மாண்பை போற்றுகிறோமோ அங்கு கடவுளாக எண்பிக்கப்படுகின்றோம்.
அயலானை அன்பு செய்ய
கற்றுத்தருகின்றது.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்வி வாரம் 477
1. இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?.
2. சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் எப்போஇடம்பெற்றது?
3. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் யப்பான் ஆக்கோன் நகரில் எப்போஆரம்பமாயின.?
David Anthony Says:18:00
19/03/2025.
2nd week period of Lent,

தவக்காலத்தின்:2ம்வாரம்:19/03/2025
புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியதாவது: உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்றார்.
(புனித மத்:20:27,28)
சிந்தனைக்கு:
—————————
“பதவி மோகம்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “பதவி மோகம்’’என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகின்றது. நாம் இதனை நினைத்து தலைகுனியவேண்டியதாக மாறியுள்ளது.
இன்றய நற்செய்தி வாசகம் நமக்கு ஒரு நல்ல கருத்தை கூறுகின்றது. செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வந்து தம் மக்கள் இருவருக்கும் விண்ணகத்தில் உயர் பதவி கேட்கின்றார்.
நம்மிடையே பணிபுரியும் சகோதர சகோதரிகளிடம் நாம் இதே பாணியைப் பன்பற்றுகின்றோமா? அடுத்தவர்களளை விட நாம் நல்லவர்கள் என்ற தீர்ப்பை நமதாக்கிக்கொள்கின்றோமா? எந்த சூழ்நிலையிலும் பிறரை மதித்து பெருந்தன்மையுடனும் பணிவுடனும் வாழ வரம் வேண்டுவோம் வாழ முயற்சிப்போம்.

David Anthony Says:21:00
18/03/2025:
2nd week period of Lent,Tuesday.

நம் இறைவனுக்கு நன்றிகூறி……..
« மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில் »…….
தவக்காலத்தின்
2ம் வாரம் செவ்வாய்கிழமை.
18/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். »
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”என்றார்.
(புனித மத்தேயு:23:1,11-12)
சிந்தனைக்கு:
—————————
« தாழ்ச்சி »
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! பணிசெய்வதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை; பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ விரும்பவுமில்லை. மாறாக, இயேசு தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார்.
தாழ்த்திக்கொண்டார் . எக்காலத்திலும் குறிப்பாக இத்தவக்காலத்தில் கிறிஸ்து காட்டிய வழியில் வாழ முற்படுவோம்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வாழ்வின் உண்மை 265 வது வாரத்திற்கான தலைப்பு
ஏமாத்து
சமகாலத்தில் ஏமாத்து அதிகரித்து செல்வதால் வரும்கால சந்ததிக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
ஆறெழுத்துச் சொல்
ஒன்று..”இதன் மீதான ஆர்வம் இன்று அதிகம்..
1.ஒன்று ஐந்து ஆறு சேர ஒரு உலோகத்துடன் நேரடி தொடர்பு இதற்கு உண்டு?
2.இறுதி மூன்றெழுத்தும் சேர பொழுதைப் போக்க உதவும்?
3.முதல் இரண்டெழுத்துகள் சேர கனதி இல்லாதது?
David Anthony Says: 20:50
17/03/2025
2nd week period of Lent.Monday .

நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில் »…….
தவக்காலத்தின்
2ம் வாரம் திங்கட்கிழமை.
17/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.”
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:”உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.”
(புனித லூக்கா:6:36-37)
சிந்தனைக்கு:
—————————
“இரக்கம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த தவக்காலத்தில் அதிகமாக பயன்படுகின்ற ஒரு சில வார்த்தைகள், முக்கியமாக மன்னிப்பு, “இரக்கம்”, நிரபராதி ஆகியவை. இம் முதல் பகுதியான மன்னிப்பு, இரக்கம் இவைகளை நாம் நிறைய பெற, இவற்றை நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்பது இயேசுவின் வேண்டுகோள். ஆகவே நாம் பிறருக்கு இரக்கம் காட்ட கற்றுக்கொள்வோம். பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உண்டாக்குவோம். பிறரைத் தீர்ப்பிடாது, கண்டனம் செய்யாது இரக்கமும் மன்னிப்பும் தாராளமாய் வழங்க முன்வருவோம்.இத்தவக்காலம்நமக்கு
உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 11:40
16/03/2025
2nd Sunday,Period of Lent. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

நம் இறைவனுக்கு நன்றி கூறி, மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில்……..
தவக்காலத்தின்
2ம் ஞாயிறு.
16/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————-
“ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”
நற்செய்தி வாசகம்:
—————————-
“ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போய் அங்கு உரு மாறினார்.அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ‘ என்று ஒரு குரல் ஒலித்தது.”
(புனிதமாற்கு:9:2,7)
சிந்தனைக்கு:
—————————
“பிரசன்னம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
கடவுளின் “பிரசன்னம்”இருக்கும்போது அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. நம்மைத் தம் சாயலில் உருவாக்கி, நம்மோடு எந்நாளும் உறைபவர் நம் கடவுள். அவருடைய அன்பு நம்மீது பொழியப்படுகின்றது. நம்மைப் போல மனிதராக மாறி நம்மோடு இருக்கும் இறைமகன் இயேசு நம் நிலையைத் தம் சொந்த அனுபவத்தில் அறிந்தவர். எனவே நம் உள்ளத்தின் சிந்தனைகளை அவர் முற்றிலுமாக அறிவார்.
கடவுளிடம் நாம் காட்டும் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பாக, தூய்மையான அன்பாக, இருக்க வேண்டும் என்றால் பாவத்தை விலக்கி பரிசுத்தமாக நாம்
வாழ வேண்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:11:35
15/03/2025:1st week period of Lent
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,

தவக்காலத்தின் முதல் வாரம்:15/03/2025
சனிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியதாவது:“நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.”என்றார்.
(புனித மத்:5:44-45)
சிந்தனைக்கு:
———————————
“அன்பு.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “அன்பு”என்கிற வார்த்தை கிரேக்க மொழியில் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. ‘storge’ என்கிற அன்பு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே காணப்படுகின்ற அன்பு. பாசம் என்று தமிழில் நாம் சொல்லலாம்.
இன்றைக்கு, நாம் வாழக்கூடிய மனித சமுதாயம் வன்முறைகளால், வெறுப்பால், பகைமையுணர்வால் சிதைக்கப்பட்டு, சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது. இதனை சரிசெய்ய அன்பு என்கிற அருமருந்தால் மட்டும் தான் முடியும் என்பது, இயேசுவின் போதனை. அதனையே நமக்கு வாழ்வாகவும் வாழ்ந்து காட்டியிருக்கின்றார். அதனை இத்தவக்காலத்தில்
நமது வாழ்விலும் வாழ, முயற்சி எடுப்போம்.

David Anthony Says:18:40 week period of Lent,
14/03/2025,1 St week period of Lent,Friday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

தவக்காலத்தின் முதல் வாரம்:14/03/2025
வெள்ளிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:“என்றார்
(புனித மத்தேயு:5:20)
சிந்தனைக்கு:
———————————
“நெறி”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது. இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். நமது வாழ்க்கையில் நமது குற்றங்களையும், நாம் செய்யும் தவறுகளையும் எண்ணிப்பார்த்தாலே, கடவுள் நம் மீது காட்டும் அன்பையும், நாம் மற்றவர்கள் மீது காட்டும் தேவையில்லாத வெறுப்பையும் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலைக்கு மாறி விடுவோம். அது நம்மையும், நமது வாழ்வையும் சரியான பாதைக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

கேள்வி வாரம் 476
1.அந்தாட்டிக்காவில் சூரியனின் மறைவு எந்த நிறமாக இருக்கும்?
2.கேத்திரகணிதத்தின் தந்தை எனப்படுபவர் யார்?
3. இலட்சதீவில் உள்ள தீவுகள் எத்தனை?
David Anthony Says:11:43
13/03/2025: 1St week period of Lent, Thursday.

“மூத்தோர் மாண்பு போற்றும்”மாதத்தில்……..

தவக்காலத்தின் முதல் வாரம்:13/03/2025
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.”என்றார்.
(புனித மத்தேயு:7;12)
சிந்தனைக்கு:
———————————
“முதுமை.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
“இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.”
இது நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வரிகள்.
இந்த உலகத்தில் இருக்கிற பெற்றோரின் அன்பு நம்மை கடவுளின் அன்பையும், அவரது அனுபவத்தையும் சொல்வதாக அமைய வேண்டும். நாமும் நமது பெற்றோரை அன்பு செய்ய வேண்டும். பெற்றோரை அவர்களது வயதான காலத்தில், “முதுமையில்”சுமைகளாகக் கருதக்கூடிய நிலை மாற வேண்டும். அவர்களை அன்பு செய்வதும், பேணிக்காப்பதும், இறைவனுக்கே செய்கிற தொண்டாக நாம் உணர வேண்டும்.இதுவே மார்ச் மாதத்தின்,
தவக்கால,தாரகை மந்திரமுமாகும்.

David Anthony Says:14:50
12/03/2025:
Wednesday அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய
சித்தங்கொண்ட

மாதத்தில்,………….
“தாய் மொழியாம் தமிழ்
மொழியை வாழ்வியலாக்
குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் முதல் வாரம்:12/03/2025
புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் மக்கள் வந்து
கூடக்கூட இயேசு கூறியதாவது:
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம்
செய்வார்கள். ஏனெனில்
யோனா அறிவித்த செய்தியைக்
கேட்டு அவர்கள் மனம்
மாறியவர்கள். ஆனால்
இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!என்றார்
(புனித லூக்:11;29,32)
சிந்தனைக்கு:
———————————
“அலட்சியம்.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
நாம் எப்படி? இத்தவக்காலம்
மீண்டும் ஒருமுறை நமது
வாழ்வை ஆய்வு செய்ய, மாற்றிக்கொள்ள எமக்கு அழைப்பு
விடுக்கின்றது. நாம் என்ன செய்கின்றோம். அலட்சியம் செய்கின்றோமா? புறக்கணிக்கின்றோமா? ஒத்திப்போடுகின்றோமா?
அல்லது நினிவே நகர
மக்களைப் போல உடனே கீழ்ப்படிகின்றோமா? உடனே செயல்பட்டால், நினிவே
மக்களைப் போல நாமும் பேறுபெற்றவர்களாவோம்
அல்லது கண்டனம்
செய்யப்படுவோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 15:05
11/03/2025:1st Week of lent.Tuesday.

இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்மாதத்தில்,………
தாய் மொழியாம் தமிழ் மொழியைவாழ்வியலாக்குவோம்.
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
1ம் வாரம் செவ்வாய்கிழமை.
11/03/2025
நற்செய்தி வாசகம்:
—————————-
அப்பொழுது இயேசு, “நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!”என்றார்.(புனிதமத்தேயு:6:9;10)
சிந்தனைக்கு:
—————————
“ஜெபம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (தருமம் செய்தல், செபித்தல், நோன்பிருத்தல்) இதில் ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகின்றது. ஒரு சிறிய செபத்தில், ஆண்டவர் நம் வாழ்க்கை தத்துவத்தையும், ஆன்மீக முதிர்ச்சியையும் உண்மையான சீடத்துவத்தையும் விளக்குகின்றார். நமது வாழ்க்கையில் நீதிமானாக வாழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு உகந்த காலம் தவக்காலமாகும்.
அப்படி வாழ முற்படுகின்றபோது, நமக்கு வரும் துன்பங்களை எண்ணிப்பார்த்து கவலை கொள்ளாமல், மகிழ்வோடு வாழும் வரம் வேண்டுவோம்.

வாழ்வின் உண்மை 264 வது வாரத்திற்கான தலைப்பு
முத்த பெற்றோர்கள்
உங்கள் முத்தபெற்றோர்களுடன் வாழ்ந்த அனுபவங்களை பாமுக ரீவியில்
வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இதன் மூலமும் தீர்வுகள் காணலாம்
ஆறெழுத்துச்சொல்?
1.ஒன்று ஐந்து ஆறு சேர இயற்கையின் வளம் இது?
2.முதல் நான்கெழுத்துக்கள் சேர வேற்றுமை சார்ந்த சொல்லுருபு?
3.முதலிரண்டும் சேர படைப்புகளில் காண்போம்?
David Anthony Says: 11:45
10/03/2025:1st Week of lent.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி

மாதத்தில், »வாழ்த்துக்கள்கூறி,
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
1ம் வாரம் திங்கட்கிழமை.
10/03/2025
நற்செய்தி வாசகம்:
—————————-
அப்பொழுது இயேசு”மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகின்றேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”என்றார்.(புனிதமத்தேயு:
25:45,46)
சிந்தனைக்கு:
—————————
“விண்ணரசு”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! « மத்தேயு 25 வது அதிகாரம், மத்தேயு நற்செய்திக்கே உரிய சிறப்பான பகுதி.
எளிய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் விண்ணரசிற்கு செல்லும் ஏணிப்படிகள். நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள் அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாக வாழும் வரம் வேண்டி,இத்தவக்காலத்தில் பிறரை அன்பு செய்ய இறைவனிடம் மன்றாடுவோம். »

கேள்வி வாரம் 475 07.03.2025
1. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அதன் பெயர் என்ன?
2. சூடானில் கடந்த ஆண்டில் எத்தனை குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது?
3. பெண்ணின் நிலை உயரும்போது ஆணின் நிலையும் உயரும். ஒவ்வொருவரின் நிலையும் உயரும் போது மனித சமுதாயத்தின் நிலையும் உயரும் யாருடைய கூற்று? .
முற்றத்து மலர்கள் நிகழ்வு 253 ல் சிவாலையா ஆற்றுகை அரங்கத்தின் ஒன்றிணைவும், நெறிப்படுத்தி நேர்த்தியாக பலரை இணைத்து அரங்கே வியப்புற நிகழ்வுகளை தரும் கற்றலும் கற்பித்தல் உறுதியும் சிரமம் நிறைந்த சீராக்கல். இன்றைய இணைப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பயனுறு பகிர்வை பகிர்ந்த ஆசானுக்கும் மற்றும் அனைவருக்கும்
தொகுப்பாளரின் தொடர்பணிக்கும் மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் . நன்றி
மூளையின் துணையிதற்கு அவசியம்!!
ஆறெழுத்துச் சொல்லு?
1.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர மக்களின் இணைவு இதற்கு தேவை?
2.ஒன்று இரண்டு மூன்று ஆறு சேர வடிவம் ஒன்று?
3.ஒன்று மூன்று ஆறு சேர அழகானது இது?
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள் ஐயா
வீட்டில் ஆண்டுத்திவசம் கொடுக்கும் பொழுது வெளியே ஒரு கும்பம் உள்ளே ஒரு கும்பம் குருக்கள் ஐயா வைக்கிறார் அந்த நிகழ்வு முடிந்த பின்பு கும்பத்திற்க்கு பயன்படுத்திய தேங்காயை என்ன செய்யலாம் அறிய தரவும்
மிகவும் நன்றி
வாணிமோகன் நான் கேட்டதற்க்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமை அம்மன் பாடல் பாடியதற்க்கு மிகவும் நன்றி ஆரம்பத்தில் மெட்டு கொஞ்சம் மாறப்பார்த்தது ஆனால் பின் சரியாக எடுத்துவிட்டீங்கள் மீண்டும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
கேள்வி வாரம் 474
1. பரிசில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் இருந்து எத்தனை நாய்கள் திருடப்பட்டுள்ளது?
2.ஆபிரிகாவில் எங்கு மர்ம நோய் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது?
3. பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை. நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதுமானது எந்த நாட்டு பழமொழி?.

புள்ளிகள் 611 (04..04 ..2025)
1.நேவிஸ் பிலிப்ஸ் 12
2.ஐெயமலர் ஐெயம் 12
3.சறோஜினி சோதிராஜா 09
4.ஜெசி மணிவண்ணன் 09
5.வாணி மோகன் 07
6.பத்மினி கமலகாந்தன் 07
.7.நகுலவதி தில்லைத்தேவன் 06
.
கேள்வி வாரம் 479
1.கியூஷுதீவு எங்குள்ளது?
2.இயற்கை குடும்பத்தின் ‘சரணாலயம்’ எனத் தெரிவித்தவர் யார்?
3.எந்த நாட்டில் தங்கச்சுரங்கம் இந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டது?
David Anthony Says:19:47
4th week period of Lent, 03/04/2025,
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி………
« எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில்“……………
இறைவன் குரலில்:
—————————-
தவக்காலத்தின் 4ம் வாரம்:
03/04/2025
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
——————————
நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?” என்றார்.
(புனிதயோவான்:
5;46,47)
சிந்தனைக்கு:
—————————
“போதனைகள்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இன்றைக்கு சொல்லப்படும் போதனைகள், நமது வாழ்வை சுடுகிறபோது, நாமும் நமக்கு போதிக்கக்கூடியவர்களை வெறுப்போடு தான் பார்க்கின்றோம். போதிக்கின்றவர்களும் எதற்கு
தனக்கு தேவையில்லாத வம்பு?
என்ற உள்ளம் கொண்டவர்களாய், மக்களைத் தொடாத
போதனையையே தந்து கொண்டிருக்கின்றார்கள்.
நமது போதனை மக்களை
தொட்டு, அவர்களது வாழ்வை மாற்றுவதாக அமைய வேண்டும்.
இத்தவக்காலத்தில்
இறைவார்த்தையை கேட்போம்.
”இறை ஆசி”யை பெற்றுக் கொள்வோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
வணக்கம். அருண் நீங்கள் எனது பதிவுகளுக்கான எனது எண்கள் மறந்ததால் எனது நிழல் படம் போடமுடியவில்லை் இதனை இதில் இனைத்து விடவும். நன்றி
David Anthony Says:14:19
02/04/2025.
4th week period of Lent,
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
« எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில்………..
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் 4ம் வாரம்,
02/04/2025 புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”என்றார்.
(புனித யோவான்:5;24)
சிந்தனைக்கு:
———————————
“இறை ஆசி.”
———————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் உறவை ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். அந்த உறவின் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் காண்கிறோம்:
தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் பாவத்தை விட்டு விலகி மன்னிப்பு பெற்று சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழ
இத்தவக்காலத்தில்
இறைவார்த்தையை கேட்போம்.
”இறை ஆசி”யை பெற்றுக் கொள்வோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 18:25
01/03/2025:
4 th week period of Lent.Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர்மாண்பு”
போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
4ம் வாரம் செவ்வாய்கிழமை.
01/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். »
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு,
« இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்.»
என்றார்.
(புனித யோவான்:5:14,15)
சிந்தனைக்கு:
—————————
“நம்பிக்கை.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக, பாவத்தினால் முடக்குவாதமுற்ற நிலையில் இருந்த மனிதருக்கு இயேசு சுகம் கொடுக்கின்றார். கடவுள் இருக்கின்றபோது, பாவிகளும், முழுமையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதை, இது வெளிக்காட்டுகின்றது.
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்கிற அந்த « நம்பிக்கை », நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், எதற்கும் கவலைப்படாது, மகிழ்வாய் வாழ உந்துசக்தியாய் இருக்க வேண்டும். நாம் தவறு செய்வதற்கு வழிசெய்து விடக்கூடாது. வாழ்க்கையை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 562!!
இயல்பாய் சிலரிடம் குடிகொண்டிருக்கும் உணர்வு..
ஏழெழுத்துச் சொல்?
1.ஐந்து ஏழு சேர இன்றும் சிலர் செய்வது உண்டாம்?
2.ஐந்து ஆறு ஏழு சேர இது உண்டானால் உலகை ஆளவும் முடியும்?!!
3.ஒன்றும் ஏழும் சேர இது இன்று உள்ளோரும் உள்ளனர்!!
4.ஒன்றும் நான்கும் சேர அதிகம் நமக்கும் வருவது தான்?!!
5.மூன்று ஐந்து ஏழு சேர நமக்குள் இருப்பதாய் நம்புகிறோம்?!!
6.மூன்றும் ஏழும் சேர இரு பொருள் உண்டு.. ஒன்று அசையாததாகும்..
David Anthony Says: 31/03/2025 at 19:22
4th week period of Lent Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , « மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்,வாழ்த்துக்கள்கூறி……….. தவக்காலம்:4 ம் வாரம்,31/03/2025, திங்கட்கிழமை.
இறைவன் குரலில்: —————————— “நன்மையை நாடுங்கள், நற்செய்தி வாசகம்: —————————- இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான்”என்று கூறினார்கள்.(புனிதயோவான்:4;50,51)
சிந்தனைக்கு: ———————— “சீர்கேடு” ———————— அன்பு மிக்க சகோதர,சகோதரிகளே! மேலைநாட்டுக் கலாச்சார தாக்கம், இன்று நம் நகரங்களில்,குடும்பங்களில் பரவி ,கிராமங்களுக்கு ஊடுருவிக்கொண்டிருக்கின்றது. பெற்றோர் பலர் நொந்து நொடிந்து நூலாகிக்கொண்டிருக்கின்றனர். கலாச்சார “சீர்கேடு”, என் மகனை, என்மகளை நான் இழக்கச் செய்துவிடுமோ! என்ற பயம்!ஆலயம்தோறும், ‘ஐயா, என் மகனை, மகளை இழக்குமுன் வாரும்’ என்று எத்தனையோ பெற்றோரின் வேண்டுதல்கள். இளமையின் வேகத்தில் பெற்ற தாய் தகப்பனை மறந்து, ஒட்டி, ஊட்டி உறவாடிய பந்த பாசத்தை மறுத்து, வாழ்வின் விளிம்பில் நின்று, சாவின் பள்ளத்தாக்கில் இறங்க காத்துக்கொண்டிருக்கும் மகனுக்காக,மகளுக்காக, “ஐயா, என் மகன்(ள்) இறங்குமுன் வாரும்” என்று விண்ணப்பிக்கும் பெற்றோர்களும் இதில் அடங்குவர்.
கோயில் குளம் என்றெல்லாம் அலைந்து, கௌரவம் பாராது, காவி அணிந்து, மொட்டை அடித்து, கால்நடையாய், அலுவலன் தன் மகனுக்காகக் கெஞ்சி கதறியதுபோல வாழும் பெற்றோரைப் புரிந்து கொள்வோம். இந்த தவக்காலத்தில் சிந்திப்போம்.செயல்படுவோம். ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறைஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
புள்ளிகள் 610 (31..03 ..2025)
1.ஐெயமலர் ஐெயம் 303
2.வாணி மோகன் 297
3.ராஜினி அல்போன்ஸ் 253
4. பத்மினி கமலகாந்தன்242
5.நகுலவதி தில்லைத்தேவன் 237
6.சறோஜினி சோதிராஜா 236
7.ஜெசி மணிவண்ணன் 226
8.நேவிஸ் பிலிப்ஸ் 223
9.ஜெயா நடேசன் 216
10.சிவமணி புவனேஸ்வரன் 117
11.லோஜினி முகுந்தன் 95
12.தர்ஜ்னி
சண்முகநாதன் 92
13 .சிவதர்சினி 37
14.நடாமோகன் 14
15. சாந்தினி 11
16.வஜிதாமுகமட் 10
17.தமிழன்பன் 10
18.நகுலா சிவநாதன் 07
19.அமிர்தன் முகுந்தன் 04
David Anthony Says:
30/03/2025 at 18:30
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின்
இனிய நாமத்தில்
நல்வாழ்த்துக்கள்!இது வரை
நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம்இறைவனுக்கு நன்றி கூறி மாற்றம்காணும் ஆண்டில்,
« மூத்தோர் மாண்பு போற்றும்மாதத்தில், » வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
30/03/25: தவக்காலம்!
4ம் ஞாயிறு தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்: ——————————
“தந்தை மகனை நோக்கி,நீ எப்போதும் என்னுடன் இருக்கின்றாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்”
என்றார்.”
(புனித லூக்கா:15;31,32)
சிந்தனைக்கு:
——————————–
“மன மாற்றம்” ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகின்ற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். மனமாற்றத்தின் அடிநாதம் உணரப்படவில்லையெனில், மனமாற்றத்திற்கான செயல்பாடுகள் அனைத்துமே அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். போலி மனமாற்றம் கடவுள் முன்னிலையில் நிச்சயம் அருவருக்கத்தக்கதாகவும், தண்டனைக்கு ஏற்புடையதாகவும் தான் இருக்கும்.
ஆகவே,
இந்த தவக்காலத்தில் சிந்திப்போம்.செயல்படுவோம்.
உண்மையான மனமாற்றத்தை உணர்ந்திடுவோம். இறைவா!உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.
( பிரான்ஸ்) தொடரும்…………..
புள்ளிகள் 609 (28.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 221
ராஜினி அல்போன்ஸ் 253
ஐெயமலர் ஐெயம் 283
வாணி மோகன் 290
நேவிஸ் பிலிப்ஸ் 216
சறோஜினி சோதிராஜா 225
நகுலவதி தில்லைத்தேவன் 230
தர்ஜ்னி சண்முகநாதன் 92
பத்மினி கமலகாந்தன்235
சிவமணி 117
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 37
தமிழன்பன் 10
சாந்தினி 11
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 95
அமிர்தன் முகுந்தன் 04
David Anthony Says:21:05
27/03/2023:Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்:3ம்வாரம்
16/03/2023
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
——————————அக்காலத்தில் இயேசு கூறியதாவது:
“என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.என்றார்.”
(புனித லூக்:11;23)
சிந்தனைக்கு:
————————————
“இணைந்திருப்போம்.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். பலவேளைகளில் இந்த சமூகத்திலே வாழ்ந்தாலும், அதிலிருந்து விலகியே வாழ்ந்துவருகிறோம். உண்மை சிதைக்கப்படும்போது, நமக்கென்ன? இதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல, பாராமுகமாய் இருக்கிறோம். அதுவும் உண்மையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்தான். இந்த சமூகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுகம் என்னை ஏதாவது ஒருவகையில் உந்தித்தள்ள வேண்டும். அதுதான் இந்த சமூகத்தோடு மட்டுமல்ல, இயேசுவோடும் « இணைந்திருப்பதற்கான »வழி.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 13:26
26/03/2025:
3rd week period of Lent.
Wednesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர்மாண்பு”
போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
3ம் வாரம் புதன்கிழமை.
26/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.”
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.என்றார்.
(புனித மத்தேயு:5:17)
சிந்தனைக்கு:
——————————
“திருச்சட்டம்
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “திருச்சட்டத்தை” அழிப்பதற்காக வரவில்லை எனவும், நிறைவேற்றுவதற்காகத்தான் வந்திருக்கின்றேன் எனவும் இயேசு சொல்கின்றார். எனவே, இறைவார்த்தையை நாம் நன்கு கற்றிருக்கின்றோம் என்பதன் அடையாளம் பிறருக்கு அதைக் கற்பித்து, அவர்களை அதன்படி வாழவைப்பதே. இதையே நாம் “நற்செய்தி அறிவித்தல்” என்கின்றோம். இறைவார்த்தையைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி அதைப் பிறருக்குக் கற்பிப்பதே.
கடவுள் பக்தி, கடவுள் சார்ந்த காரியங்களில் பக்தி என்பதை நாம் பலவேளைகளில் தவறாகப் புரிந்து கொள்கின்றோம். எனவே தான், கடவுளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் நாம், ஏழை, எளியவர்களுக்கு இரங்க மறுக்கின்றோம். உண்மையான பக்தியை இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:13:13
25/03/2025: 3rd week period of Lent Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
3ம்வாரம்,25/03/2025 செவ்வாய்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”
என்றார்.”
(புனித மத்:18:35)
சிந்தனைக்கு:
————————————
“மன்னிப்பு”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
நாம் செய்கின்ற தவறுகள், குற்றங்கள் ஏராளம், ஏராளம். ஆனால், நமது பாவங்களை இறைவன், ஒரு பொருட்டாக எண்ணாமல், மன்னிக்கின்றார். ஆனால், நாம் நமக்கெதிராக சிறிய தவறு செய்யும், நமது உடன் வாழ்கிற சகமனிதர்களை மன்னிக்க மறுக்கின்றோம்.
நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.இத்தவக்காலம்
நமக்கு வழி காட்டும் காலமாக இருக்கட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 558 ..
ஒரு காலத்தில் இதன் மீதான இரசிப்பு அதிகம்..ஏழெழுத்துச் சொல்?
1.முதல் மற்றும் கடைசி சேர நம்மைப் பாதுகாப்பது?
2.ஐந்தும் ஏழும் சேர அழகு பெண்களுக்கு இதனால்?
3.இறுதி மூன்றெழுத்தும் சேர உலகில் அதிகம் இப்போ இது?
4.முதல் மூன்றும் சேர செயல்பாடு ஒன்று?
குத்துச்சண்டை
குடை
சடை
சண்டை
குத்து
புள்ளிகள் 608 (24.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 211
ராஜினி அல்போன்ஸ் 253
ஐெயமலர் ஐெயம் 274
வாணி மோகன் 281
நேவிஸ் பிலிப்ஸ் 208
சறோஜினி சோதிராஜா 219
நகுலவதி தில்லைத்தேவன் 222
தர்ஜ்னி சண்முகநாதன் 92
பத்மினி கமலகாந்தன்228
சிவமணி 111
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 37
தமிழன்பன் 10
சாந்தினி 11
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 90
அமிர்தன் முகுந்தன் 02
David Anthony Says: 19:40
24/03/2025:
3rd week period of Lent.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர்மாண்பு”
போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
3ம் வாரம் திங்கட்கிழமை.
24/03/2025.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.»
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: « எலியா சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. »என்றார்.
(புனித லூக்கா:4:24,26-27)
சிந்தனைக்கு:
——————————
“பொதுவான பண்பு.”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார். இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இரண்டுபேரிடத்திலுமுள்ள பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை யூதர்களிடத்தில் இல்லை.
நம்பிக்கைதான் இரண்டுபேருக்கும் மீட்பைத்தந்தது. இயேசு சொல்ல வருகிற கருத்து இதுதான்: யாராக இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடவுளுக்கு நெருக்கமான இனமாக இருந்தாலும், நம்பிக்கைதான் ஒருவருக்கு மீட்பைத்தர முடியுமே தவிர, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற தகுதி மட்டும், ஒருவருக்கு மீட்பைப்பெற்றுத்தர முடியாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையினால்தான் வாழ்வு பெறுகின்றனர் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வாழ்வின் உண்மை நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் தவிர்க்கப்பட்டு மீண்டும் 08-04-25 செவ்வாய்க்கிழமை தொடரும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றேன்
மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்
David Anthony Says:
22/03/2025at 21:00
2nd week period of Lent.
Saturday
அன்பு பாமுகம்
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய
நாமத்தில்
நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய
சித்தங்கொண்ட நம்
இறைவனுக்கு நன்றி கூறி ,
“மூத்தோர்மாண்பு”போற்றும்
மாதத்தில்,வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்:
——————————
22/03/25 தவக்காலம் 2ம் சனி தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்:
——————————
“அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”என்றார்.
(புனிதலூக்கா:6;39,42)
சிந்தனைக்கு:
——————————
“வெளிவேடம்”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நாம் நேர்மையாளர்கள் போல, தவறே செய்யாதவர்கள் போல, வெளிவேடகாரர்களாக நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களை நமக்குக் கீழாக எண்ணுகிறோம். மற்றவர்களை மதித்து, உண்மையான அன்பு செய்து வாழ, ஆண்டவரிடத்தில் நாம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..
புள்ளிகள் 607 (21.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 198
ராஜினி அல்போன்ஸ் 245
ஐெயமலர் ஐெயம் 271 வாணி மோகன் 275
நேவிஸ் பிலிப்ஸ் 202
சறோஜினி சோதிராஜா 219
நகுலவதி தில்லைத்தேவன் 214
தர்ஜ்னி சண்முகநாதன் 92
பத்மினி கமலகாந்தன்220
சிவமணி 111
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 37
தமிழன்பன் 10
சாந்தினி 10
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 90
அமிர்தன் முகுந்தன் 02
David Anthony Says: 18:55
21/03/2025:
2nd week period of Lent.
Friday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர்மாண்பு”
போற்றும் மாதத்தில்………..
தவக்காலத்தின்
2 வாரம் வெள்ளிக்கிழமை.
21/03/2025.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.”
நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு அவர்களிடம், ” கட்டுவோர் “புறக்கணித்த”கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்.
என்றார்.
(புனித மத்தேயு:21:42,43)
சிந்தனைக்கு:
—————————
“புறக்கணிப்பு.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! நற்செய்தி வாசகத்திலே இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். இயேசு தன்னை சுட்டிக்காட்டியே இந்த உவமையை துவங்குகின்றார். ஏனென்றால் தான் எவ்வாறெல்லாம் இந்த மக்களால் புறக்கணிக்கப்பட இருக்கின்றார் என்பதனை முழுமையாக இயேசு அறிந்திருந்தார். இவை அனைத்திற்குமே காரணம் நான் என்ற அகந்தை. ஏனென்றால் ஒருபுறம் தலைமைக்குருக்கள் தாங்கள் பெரியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மிதக்கின்றார்கள். இன்னொருபுறம் பரிசேயர்கள். இத்தகைய நான் என்ற தீராத பசி இயேசு புறக்கணிக்கப்பட காரணமாக அமைகின்றது.
இதிலே நீயும், நானும் வகிக்கும் பாத்திரம் என்ன?
சிந்திப்போம்!
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
உற்சாக வணக்கம்
இன்றைய முற்றத்து மலர்கள் நிகழ்வில் சிறப்பித்த விருந்தினர் தேடலும், ஆய்வும்,தமிழ்ச்சொற்களின் மூலவேர் தேடல் தொன்மையின் வழி தேடல் சிறப்பே. பாராட்டுக்கள். பலதேடலின் பணி தொடர வாழ்த்துக்கள். தொகுப்பாளர்
சாந்தினி அவர்களுக்கும்
மிகுந்த வாழ்த்துக்கள்.
நன்றி
David Anthony Says: 21:00
29/03/2025:
2nd week, period of Lent.Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
தவக்காலத்தின்
2 வாரம் வியாழக்கிழமை.
29/02/2024.
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். »
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கி கூறியதாவது: « மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள். »
என்றார்.
(புனித லூக்கா:16:19,31)
சிந்தனைக்கு:
—————————
“இறைசாயல்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
கடவுள் ஒருவர்தாம் என்றாலும்,
அவரின் பிரதிபலிப்பான “இறைச்சாயல்”
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு என்பதனை எல்லா மதங்களும் கூறுகின்றது.இதனை உணருகின்றவன் இறைவனாகின்றான்.
பழைய ஏற்பாட்டு சமுதாயமாக இருக்கட்டும். புதிய ஏற்பாட்டு சமுதாயமாக இருக்கட்டும் ஒரு ஆதிக்க வர்க்கத்தை கொண்டதாக இருக்கின்றது. ஏழை அடிமையாகவும், பணக்காரன் ஆதிக்கம் செலுத்துபவனாகவும் வாழ்ந்தார்கள். அதனை எதிர்க்கவே இயேசு இந்த பணக்காரன், ஏழை உவமை வழியாக கற்றுக்கொடுத்து புதிய பாடத்தினை புகுட்டுகின்றார்.நாம் எப்போது மற்ற மனிதர்களின் மாண்பை போற்றுகிறோமோ அங்கு கடவுளாக எண்பிக்கப்படுகின்றோம்.
அயலானை அன்பு செய்ய
கற்றுத்தருகின்றது.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்வி வாரம் 477
1. இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?.
2. சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் எப்போஇடம்பெற்றது?
3. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் யப்பான் ஆக்கோன் நகரில் எப்போஆரம்பமாயின.?
1, 6 பேர்
2, 1948,
3 ,31-3-2003.
David Anthony Says:18:00
19/03/2025.
2nd week period of Lent,
Wednesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்:2ம்வாரம்:19/03/2025
புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியதாவது: உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்றார்.
(புனித மத்:20:27,28)
சிந்தனைக்கு:
—————————
“பதவி மோகம்.”
—————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “பதவி மோகம்’’என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகின்றது. நாம் இதனை நினைத்து தலைகுனியவேண்டியதாக மாறியுள்ளது.
இன்றய நற்செய்தி வாசகம் நமக்கு ஒரு நல்ல கருத்தை கூறுகின்றது. செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வந்து தம் மக்கள் இருவருக்கும் விண்ணகத்தில் உயர் பதவி கேட்கின்றார்.
நம்மிடையே பணிபுரியும் சகோதர சகோதரிகளிடம் நாம் இதே பாணியைப் பன்பற்றுகின்றோமா? அடுத்தவர்களளை விட நாம் நல்லவர்கள் என்ற தீர்ப்பை நமதாக்கிக்கொள்கின்றோமா? எந்த சூழ்நிலையிலும் பிறரை மதித்து பெருந்தன்மையுடனும் பணிவுடனும் வாழ வரம் வேண்டுவோம் வாழ முயற்சிப்போம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:21:00
18/03/2025:
2nd week period of Lent,Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றிகூறி……..
« மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில் »…….
தவக்காலத்தின்
2ம் வாரம் செவ்வாய்கிழமை.
18/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
« எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். »
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”என்றார்.
(புனித மத்தேயு:23:1,11-12)
சிந்தனைக்கு:
—————————
« தாழ்ச்சி »
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! பணிசெய்வதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை; பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ விரும்பவுமில்லை. மாறாக, இயேசு தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார்.
தாழ்த்திக்கொண்டார் . எக்காலத்திலும் குறிப்பாக இத்தவக்காலத்தில் கிறிஸ்து காட்டிய வழியில் வாழ முற்படுவோம்.
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வாழ்வின் உண்மை 265 வது வாரத்திற்கான தலைப்பு
ஏமாத்து
சமகாலத்தில் ஏமாத்து அதிகரித்து செல்வதால் வரும்கால சந்ததிக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள்-563
ஆறெழுத்துச் சொல்
ஒன்று..”இதன் மீதான ஆர்வம் இன்று அதிகம்..
1.ஒன்று ஐந்து ஆறு சேர ஒரு உலோகத்துடன் நேரடி தொடர்பு இதற்கு உண்டு?
2.இறுதி மூன்றெழுத்தும் சேர பொழுதைப் போக்க உதவும்?
3.முதல் இரண்டெழுத்துகள் சேர கனதி இல்லாதது?
David Anthony Says: 20:50
17/03/2025
2nd week period of Lent.Monday .
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில் »…….
தவக்காலத்தின்
2ம் வாரம் திங்கட்கிழமை.
17/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————
“ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.”
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:”உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.”
(புனித லூக்கா:6:36-37)
சிந்தனைக்கு:
—————————
“இரக்கம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த தவக்காலத்தில் அதிகமாக பயன்படுகின்ற ஒரு சில வார்த்தைகள், முக்கியமாக மன்னிப்பு, “இரக்கம்”, நிரபராதி ஆகியவை. இம் முதல் பகுதியான மன்னிப்பு, இரக்கம் இவைகளை நாம் நிறைய பெற, இவற்றை நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்பது இயேசுவின் வேண்டுகோள். ஆகவே நாம் பிறருக்கு இரக்கம் காட்ட கற்றுக்கொள்வோம். பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உண்டாக்குவோம். பிறரைத் தீர்ப்பிடாது, கண்டனம் செய்யாது இரக்கமும் மன்னிப்பும் தாராளமாய் வழங்க முன்வருவோம்.இத்தவக்காலம்நமக்கு
உதவட்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
புள்ளிகள் 606 (10.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 193
ராஜினி அல்போன்ஸ் 235
ஐெயமலர் ஐெயம் 261 வாணி மோகன் 267
நேவிஸ் பிலிப்ஸ் 194
சறோஜினி சோதிராஜா 211
நகுலவதி தில்லைத்தேவன் 206
தர்ஜ்னி சண்முகநாதன் 87
பத்மினி கமலகாந்தன்212
சிவமணி 103
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 37
தமிழன்பன் 10
சாந்தினி 10
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 82
அமிர்தன் முகுந்தன் 02
David Anthony Says: 11:40
16/03/2025
2nd Sunday,Period of Lent. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில்……..
தவக்காலத்தின்
2ம் ஞாயிறு.
16/03/2025
இறைவன் குரலில்:
வாழ்த்தொலியாக,
—————————-
“ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”
நற்செய்தி வாசகம்:
—————————-
“ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போய் அங்கு உரு மாறினார்.அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ‘ என்று ஒரு குரல் ஒலித்தது.”
(புனிதமாற்கு:9:2,7)
சிந்தனைக்கு:
—————————
“பிரசன்னம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
கடவுளின் “பிரசன்னம்”இருக்கும்போது அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. நம்மைத் தம் சாயலில் உருவாக்கி, நம்மோடு எந்நாளும் உறைபவர் நம் கடவுள். அவருடைய அன்பு நம்மீது பொழியப்படுகின்றது. நம்மைப் போல மனிதராக மாறி நம்மோடு இருக்கும் இறைமகன் இயேசு நம் நிலையைத் தம் சொந்த அனுபவத்தில் அறிந்தவர். எனவே நம் உள்ளத்தின் சிந்தனைகளை அவர் முற்றிலுமாக அறிவார்.
கடவுளிடம் நாம் காட்டும் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பாக, தூய்மையான அன்பாக, இருக்க வேண்டும் என்றால் பாவத்தை விலக்கி பரிசுத்தமாக நாம்
வாழ வேண்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
உற்சாக வணக்கம்🙏🏽
David Anthony Says:11:35
15/03/2025:1st week period of Lent
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் முதல் வாரம்:15/03/2025
சனிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியதாவது:“நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.”என்றார்.
(புனித மத்:5:44-45)
சிந்தனைக்கு:
———————————
“அன்பு.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! “அன்பு”என்கிற வார்த்தை கிரேக்க மொழியில் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. ‘storge’ என்கிற அன்பு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே காணப்படுகின்ற அன்பு. பாசம் என்று தமிழில் நாம் சொல்லலாம்.
இன்றைக்கு, நாம் வாழக்கூடிய மனித சமுதாயம் வன்முறைகளால், வெறுப்பால், பகைமையுணர்வால் சிதைக்கப்பட்டு, சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது. இதனை சரிசெய்ய அன்பு என்கிற அருமருந்தால் மட்டும் தான் முடியும் என்பது, இயேசுவின் போதனை. அதனையே நமக்கு வாழ்வாகவும் வாழ்ந்து காட்டியிருக்கின்றார். அதனை இத்தவக்காலத்தில்
நமது வாழ்விலும் வாழ, முயற்சி எடுப்போம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:18:40 week period of Lent,
14/03/2025,1 St week period of Lent,Friday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மூத்தோர் மாண்பு போற்றும் மாதத்தில்……..
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் முதல் வாரம்:14/03/2025
வெள்ளிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:“என்றார்
(புனித மத்தேயு:5:20)
சிந்தனைக்கு:
———————————
“நெறி”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது. இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். நமது வாழ்க்கையில் நமது குற்றங்களையும், நாம் செய்யும் தவறுகளையும் எண்ணிப்பார்த்தாலே, கடவுள் நம் மீது காட்டும் அன்பையும், நாம் மற்றவர்கள் மீது காட்டும் தேவையில்லாத வெறுப்பையும் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலைக்கு மாறி விடுவோம். அது நம்மையும், நமது வாழ்வையும் சரியான பாதைக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்வி வாரம் 476
1.அந்தாட்டிக்காவில் சூரியனின் மறைவு எந்த நிறமாக இருக்கும்?
2.கேத்திரகணிதத்தின் தந்தை எனப்படுபவர் யார்?
3. இலட்சதீவில் உள்ள தீவுகள் எத்தனை?
பச்சை நிறம் .2,இயூக்ளீட்(Euclid) 3, 36தீவுகள்
David Anthony Says:11:43
13/03/2025: 1St week period of Lent, Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“மூத்தோர் மாண்பு போற்றும்”மாதத்தில்……..
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் முதல் வாரம்:13/03/2025
வியாழக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
“ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.”என்றார்.
(புனித மத்தேயு:7;12)
சிந்தனைக்கு:
———————————
“முதுமை.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
“இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.”
இது நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வரிகள்.
இந்த உலகத்தில் இருக்கிற பெற்றோரின் அன்பு நம்மை கடவுளின் அன்பையும், அவரது அனுபவத்தையும் சொல்வதாக அமைய வேண்டும். நாமும் நமது பெற்றோரை அன்பு செய்ய வேண்டும். பெற்றோரை அவர்களது வயதான காலத்தில், “முதுமையில்”சுமைகளாகக் கருதக்கூடிய நிலை மாற வேண்டும். அவர்களை அன்பு செய்வதும், பேணிக்காப்பதும், இறைவனுக்கே செய்கிற தொண்டாக நாம் உணர வேண்டும்.இதுவே மார்ச் மாதத்தின்,
தவக்கால,தாரகை மந்திரமுமாகும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வணக்கம் வாணி அனைத்து நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள்
David Anthony Says:14:50
12/03/2025:
Wednesday அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய
சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில்,………….
“தாய் மொழியாம் தமிழ்
மொழியை வாழ்வியலாக்
குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின் முதல் வாரம்:12/03/2025
புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————-
அக்காலத்தில் மக்கள் வந்து
கூடக்கூட இயேசு கூறியதாவது:
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம்
செய்வார்கள். ஏனெனில்
யோனா அறிவித்த செய்தியைக்
கேட்டு அவர்கள் மனம்
மாறியவர்கள். ஆனால்
இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!என்றார்
(புனித லூக்:11;29,32)
சிந்தனைக்கு:
———————————
“அலட்சியம்.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
நாம் எப்படி? இத்தவக்காலம்
மீண்டும் ஒருமுறை நமது
வாழ்வை ஆய்வு செய்ய, மாற்றிக்கொள்ள எமக்கு அழைப்பு
விடுக்கின்றது. நாம் என்ன செய்கின்றோம். அலட்சியம் செய்கின்றோமா? புறக்கணிக்கின்றோமா? ஒத்திப்போடுகின்றோமா?
அல்லது நினிவே நகர
மக்களைப் போல உடனே கீழ்ப்படிகின்றோமா? உடனே செயல்பட்டால், நினிவே
மக்களைப் போல நாமும் பேறுபெற்றவர்களாவோம்
அல்லது கண்டனம்
செய்யப்படுவோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி!
உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 15:05
11/03/2025:1st Week of lent.Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்மாதத்தில்,………
தாய் மொழியாம் தமிழ் மொழியைவாழ்வியலாக்குவோம்.
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
1ம் வாரம் செவ்வாய்கிழமை.
11/03/2025
நற்செய்தி வாசகம்:
—————————-
அப்பொழுது இயேசு, “நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!”என்றார்.(புனிதமத்தேயு:6:9;10)
சிந்தனைக்கு:
—————————
“ஜெபம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (தருமம் செய்தல், செபித்தல், நோன்பிருத்தல்) இதில் ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகின்றது. ஒரு சிறிய செபத்தில், ஆண்டவர் நம் வாழ்க்கை தத்துவத்தையும், ஆன்மீக முதிர்ச்சியையும் உண்மையான சீடத்துவத்தையும் விளக்குகின்றார். நமது வாழ்க்கையில் நீதிமானாக வாழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு உகந்த காலம் தவக்காலமாகும்.
அப்படி வாழ முற்படுகின்றபோது, நமக்கு வரும் துன்பங்களை எண்ணிப்பார்த்து கவலை கொள்ளாமல், மகிழ்வோடு வாழும் வரம் வேண்டுவோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வாழ்வின் உண்மை 264 வது வாரத்திற்கான தலைப்பு
முத்த பெற்றோர்கள்
உங்கள் முத்தபெற்றோர்களுடன் வாழ்ந்த அனுபவங்களை பாமுக ரீவியில்
வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 261..
இதன் மூலமும் தீர்வுகள் காணலாம்
ஆறெழுத்துச்சொல்?
1.ஒன்று ஐந்து ஆறு சேர இயற்கையின் வளம் இது?
2.முதல் நான்கெழுத்துக்கள் சேர வேற்றுமை சார்ந்த சொல்லுருபு?
3.முதலிரண்டும் சேர படைப்புகளில் காண்போம்?
புள்ளிகள் 606 (10.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 193
ராஜினி அல்போன்ஸ் 233
ஐெயமலர் ஐெயம் 261
வாணி மோகன் 267
நேவிஸ் பிலிப்ஸ் 194
சறோஜினி சோதிராஜா 211
நகுலவதி தில்லைத்தேவன் 206
தர்ஜ்னி சண்முகநாதன் 87
பத்மினி கமலகாந்தன்212
சிவமணி 103
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 37
தமிழன்பன் 10
சாந்தினி 10
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 82
அமிர்தன் முகுந்தன் 02
David Anthony Says: 11:45
10/03/2025:1st Week of lent.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில், »வாழ்த்துக்கள்கூறி,
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
1ம் வாரம் திங்கட்கிழமை.
10/03/2025
நற்செய்தி வாசகம்:
—————————-
அப்பொழுது இயேசு”மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகின்றேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”என்றார்.(புனிதமத்தேயு:
25:45,46)
சிந்தனைக்கு:
—————————
“விண்ணரசு”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! « மத்தேயு 25 வது அதிகாரம், மத்தேயு நற்செய்திக்கே உரிய சிறப்பான பகுதி.
எளிய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் விண்ணரசிற்கு செல்லும் ஏணிப்படிகள். நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள் அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாக வாழும் வரம் வேண்டி,இத்தவக்காலத்தில் பிறரை அன்பு செய்ய இறைவனிடம் மன்றாடுவோம். »
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 11:45
10/03/2025:1st Week of lent.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, « மூத்தோர் மாண்பு போற்றும்
மாதத்தில், »வாழ்த்துக்கள்கூறி,
இறைவன் குரலில்: ——————————
தவக்காலத்தின்
1ம் வாரம் திங்கட்கிழமை.
10/03/2025
நற்செய்தி வாசகம்:
—————————-
அப்பொழுது இயேசு”மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகின்றேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”என்றார்.(புனிதமத்தேயு:
25:45,46)
சிந்தனைக்கு:
—————————
“விண்ணரசு”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! « மத்தேயு 25 வது அதிகாரம், மத்தேயு நற்செய்திக்கே உரிய சிறப்பான பகுதி.
எளிய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் விண்ணரசிற்கு செல்லும் ஏணிப்படிகள். நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள் அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாக வாழும் வரம் வேண்டி,இத்தவக்காலத்தில் பிறரை அன்பு செய்ய இறைவனிடம் மன்றாடுவோம். »
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வாழ்த்துகள்
புள்ளிகள் 605 (07.03 ..2025)
ஜெயா நடேசன் 216
ஜெசி மணிவண்ணன் 193
ராஜினி அல்போன்ஸ் 228
ஐெயமலர் ஐெயம் 256வாணி மோகன் 262
நேவிஸ் பிலிப்ஸ் 187
சறோஜினி சோதிராஜா 204
நகுலவதி தில்லைத்தேவன் 201
தர்ஜ்னி சண்முகநாதன் 82
பத்மினி கமலகாந்தன்207
சிவமணி 98
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 32
தமிழன்பன் 10
சாந்தினி 10
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 82
அமிர்தன் முகுந்தன் 02
கேள்வி வாரம் 475 07.03.2025
1. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அதன் பெயர் என்ன?
2. சூடானில் கடந்த ஆண்டில் எத்தனை குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது?
3. பெண்ணின் நிலை உயரும்போது ஆணின் நிலையும் உயரும். ஒவ்வொருவரின் நிலையும் உயரும் போது மனித சமுதாயத்தின் நிலையும் உயரும் யாருடைய கூற்று? .
1 ,A23a. 2, 221குழந்தைகள். 3 ,காந்திய டிகள் .
காலை வணக்கம்.
வாணி நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களை பாடிய எல்லோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
முற்றத்து மலர்கள் நிகழ்வு 253 ல் சிவாலையா ஆற்றுகை அரங்கத்தின் ஒன்றிணைவும், நெறிப்படுத்தி நேர்த்தியாக பலரை இணைத்து அரங்கே வியப்புற நிகழ்வுகளை தரும் கற்றலும் கற்பித்தல் உறுதியும் சிரமம் நிறைந்த சீராக்கல். இன்றைய இணைப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பயனுறு பகிர்வை பகிர்ந்த ஆசானுக்கும் மற்றும் அனைவருக்கும்
தொகுப்பாளரின் தொடர்பணிக்கும் மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் . நன்றி
நன்றி அக்கா.
வணக்கம் வாணி மோகனுக்கும்,இரா
விஜய கௌரவிக்கும்
தொடரும் சிவதர்ஷினி ராகவன்
அவர்கட்கும்.
மிகவும் அருமையாக
இனிமையாகப் பாராட்டியகௌரி,
வாணி மோகனுக்கும் நன்றிகள் வாழ்த்துகள்.
இன்றைய நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்
உற்சாக வணக்கம்
புதன் நிகழ்வுகளுக்கும்
இளையோர் படிப்புகளுக்கும் தொகுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும்
செய்தியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி
குடும்பம் குவலயம் 1007
05.03.25
மகளிர்தினத்தை முன்னிட்டு…,,
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக திருமணம்
இருக்கிறதா?இல்லையா?
வாருங்கள் பேசுவோம்
நகுலா அவர்களுக்கு
புதன் கிழமை நடைபெற்ற
உங்கள் நிகழ்வில் நீங்கள் குறிப்பிட்ட தலைப்புக்கும்
பேசப்பட்ட விடயங்களுக்கும்
அதிக வித்தியாசம்
இருந்தது.
நன்றி.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 560!
மூளையின் துணையிதற்கு அவசியம்!!
ஆறெழுத்துச் சொல்லு?
1.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர மக்களின் இணைவு இதற்கு தேவை?
2.ஒன்று இரண்டு மூன்று ஆறு சேர வடிவம் ஒன்று?
3.ஒன்று மூன்று ஆறு சேர அழகானது இது?
கண்டுபிடித்தேன்
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள் ஐயா
வீட்டில் ஆண்டுத்திவசம் கொடுக்கும் பொழுது வெளியே ஒரு கும்பம் உள்ளே ஒரு கும்பம் குருக்கள் ஐயா வைக்கிறார் அந்த நிகழ்வு முடிந்த பின்பு கும்பத்திற்க்கு பயன்படுத்திய தேங்காயை என்ன செய்யலாம் அறிய தரவும்
மிகவும் நன்றி
வாணிமோகன் நான் கேட்டதற்க்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமை அம்மன் பாடல் பாடியதற்க்கு மிகவும் நன்றி ஆரம்பத்தில் மெட்டு கொஞ்சம் மாறப்பார்த்தது ஆனால் பின் சரியாக எடுத்துவிட்டீங்கள் மீண்டும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
Selvathy Nithianandan
புள்ளிகள் 604 (28.02 ..2025)
ஜெயா நடேசன் 209
ஜெசி மணிவண்ணன் 193
ராஜினி அல்போன்ஸ் 221
ஐெயமலர் ஐெயம் 247
வாணி மோகன் 255
நேவிஸ் பிலிப்ஸ் 178
சறோஜினி சோதிராஜா 197
நகுலவதி தில்லைத்தேவன் 194
தர்ஜ்னி சண்முகநாதன் 77
பத்மினி கமலகாந்தன்200
சிவமணி 93
வஜிதாமுகமட் 10
சிவதர்சினி 32
தமிழன்பன் 10
சாந்தினி 10
நடாமோகன் 14
லோஜினி முகுந்தன் 82
அமிர்தன் முகுந்தன் 02
கேள்வி வாரம் 474
1. பரிசில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் இருந்து எத்தனை நாய்கள் திருடப்பட்டுள்ளது?
2.ஆபிரிகாவில் எங்கு மர்ம நோய் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது?
3. பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை. நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதுமானது எந்த நாட்டு பழமொழி?.
அருண்குமாரின் சிறப்பான பணிக்கும் புதுவித வடிவமைப்பிற்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறது.
முற்றத்து மலர்கள் நிகழ்வின் விருந்தினருக்கும் , தொகுப்பாளருக்கும் தகமைநிறை கருத்துப்பகிர்விற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா
வணக்கம்,
புதிய பக்கங்கள் அழகு.
புதிய உருவாக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்.
அருண்குமார் நெறிப்படுத்தலுக்கு மிகுந்த வாழ்த்துக்கள்.
நன்றி
(விளம்பரம் என வரலாமே)
சிறப்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
வணக்கம், அழகு , வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
நகுலா சிவநாதன்
திங்கள் சிந்தனை நேரம்
எங்கள் வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள்
வளர்ந்த கலை மறைந்திடாது.
வாழ்த்துக்கள்👍🏼👍🏼👍🏼
பாரம்பரியகலைகளின் ஒன்றிப்பு
6ஆண்டின் ஒன்றிணைவு ஒத்துழைப்பார்கள் அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.