ராகவன் சிவதர்சினி தம்பதி

பாமுகம் உறவு ராகவன் சிவதர்சினி தம்பதியின் 25ந் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகளோடு..
பிள்ளைகள் ராம்ஜித், ரோஜித், அர்ஜிதா உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள், கூடவே பாமுகம் சொந்தங்கள்..
இணைந்தே வாழ்த்துகின்றோம்..!!

இனிய இனிய திருமணநாள் வாழ்த்துகள்..!

Arun Kumar
Author: Arun Kumar

  • ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா says:

    இனிய திருமண நல்வாழ்த்துகள். இருமனம் ஒருமனதாய் சேர்ந்து வாழ எம் மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா

  • Vajeetha Mohammed says:

    மன நிறைவாழ்த்தோடு

    எம் பா முக சகோதரியே
    இ௫மனம் கலந்து
    இல்லற வாழ்வு இணைந்து
    இ௫பத்தைந்து வ௫டம் கடந்து
    வாழ்ந்தாலும் அன்பு தொடரனுடன்
    இன்னும் இன்னும் பல ஆண்டுகள்
    கடந்து

    தனிமையை விட தரமானது
    தன்துணை மகவுகளோடு
    வாழ்வது இதமானது
    ௨ம் புன்னகை ஒன்றே விலையானது
    ௨ன் அன்புக்கு பாமுக நேயர்கள்
    ௨ரமானது

    வாழ்வியல் தந்த பரிசு
    ௨ந்தனுக்கு
    முக்கனியாட்டம் மகவுகள்
    ௨ரிமை ௨ம்சொத்து இதற்கு
    வாழ்க வாழ்க சகோதரி
    வாழ்க்கை துணையோடு
    ஆரோக்கியம் ஆனந்தம்
    பெற்று வாழ்க

    ௨ங்கள் நலவாழ்வுக்கு
    இறையை வேண்டி இ௫கரம் ஏந்தி
    மனநிறைவோடு வாழ்த்துகினன்றோன்

  • வசந்தா ஜெகதீசன் says:

    அன்புத்தம்பதிகள்
    ஆண்டுகள் இருபத்தைந்து
    அள்ளிநிறைத்த பெருவாழ்வு
    சொல்லி மகிழும் வெள்ளிவிழா
    திருவோடு திருமதியாய் வெகுமதி பெற்றுயர்ந்த மகிழ்ச்சி நாள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துக்கிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு!

  • நகுலவதி தில்லைதேவன் says:

    சிவதஸ்சி ராகவன் வெள்ளிவிழா கானும் இன்றைய நாளில் வாழ்வில் இணைந்தே மகிழ்ந்தே குதூகலமாக வாழ வாழ்க என்று வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • திருமண பந்தத்தில் வெள்ளிவிழாக் காணும் ராகவன் சிவதர்சனி தம்பதிகளுக்கு சிறப்பான திருமணநாள் நல்வாழ்த்துக்கள். என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு.

  • Selvi Nithianandan says:

    இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

  • R. Rasaratnam says:

    ஆரோக்கியமாகவும் இன்பமாகவும் பல ஆண்டுகள் வாழ தம்பதிகளுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

  • Ragini Alphonse says:

    வெள்ளிவிழாக்காணும் தம்பதிகளுக்கு இனிய இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டுகள் காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.

  • நேவிஸ் பிலிப் says:

    திருமண வாழ்த்து மடல்
    இல் வாழ்வில் இருபத்து ஐந்து
    ஆண்டுகள் காணும்
    திரு திருமதி
    இராகவன் &சிவதர்சினி
    தம்பதிக்கு மனம் கனிந்த திருமண நாள்வாழ்த்துக்கள்
    அன்பும் அறனும் கொண்ட
    இல்லற வாழ்வில் அன்றிணைந்தீர் ஒன்றிணைந்த அன்றிலென
    பண்பும் பயனும் இதுவேயெனக் கண்டீர்
    நல்லறம் வளர்த்தீர்
    இல்லறப் பூங்காவில் மலர்ந்தன மும் மலர்கள்
    முத்தெனவே பெற்றெடுத்து
    பாசம் காட்டி வளர்த்தீர்
    நல்லறிவூட்டியே
    எதிர் காலக் கனவுகள்
    நனவாகட்டும்,
    நிகழ் காலத்தில் இன்பங்கள்
    பொங்கட்டும்
    மனங்கள் மலரட்டும்
    சொந்தங்கள் பெருகட்டும்

    நலமான வாழ்வை வளமாய் வாழ்ந்திடுங்கள் மங்காத புகழோடு
    பொன் விழா பவள விழா
    மேலும் பல விழாக்கள
    தெய்வங்களின் ஆசி துணை கூடிவர ,பார் போற்ற மகிழ்வுடனே
    பல்லாண்டு வாழ்ந்திடுங்கள்
    பாமுகத்தில் உறவுகளாய்
    கூடி நின்று வாழ்த்துகிறோம்.

  • நகுலா சிவநாதன் says:

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

  • Shanthini says:

    இனிய இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள் சிவதர்சினி தம்பதிகளுக்கு.💐 வாழ்வில் இன்பங்கள் பெருக அன்பும் அறமும் தளைந்தோங்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.🎁
    என்றென்றும் ஆரோக்கியமாக வாழ்கவென வாழ்த்துகின்றோம்.🙏

  • ஜெசி மணிவண்ணன் says:

    இன்பமான திருமணநாள் வாழ்த்துக்கள் ரீச்சர்
    என்றும் நலமுடனும் மகிழ்வுடனும் ராகவன்அண்ணாவுடன் இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.
    💐💐💐💐💐💐💐💐

  • சிவதர்சனி இரா says:

    மிக்க நன்றி பாமுகம்..
    வாழ்த்து இணைத்த பாங்கினுக்கு
    அருண்குமார் உங்களுக்கும்
    நன்றி🙏