Sunrise news

அமெரிக்க மாகாணங்களில் தாண்டவமாடிய சூறாவளி! இருளில் மூழ்கிய லட்சம் வீடுகள்

அமெரிக்காவில் காட்டுத்தீ பரவும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் சூறாவளி தாக்கியது.

மிசவுரி பகுதி இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பல மாகாணங்களில் பாடசாலைகள் முற்றிலும் சேதமடைந்தன.
மேலும் பல வீடுகள் சேதமடைந்த நிலையில், அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியாகினர். அதேபோல் டெக்ஸாஸ் மாகாணத்தில் புழுதிப் புயலின்போது ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

சூறாவளி தாக்குதலுக்கு இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nada Mohan
Author: Nada Mohan