உலகச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை (S.Viyalendiran) எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லிட்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
மற்ற விலைகள் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
oooooooooooooo00000000000000000000000000000000000
கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ — பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதில், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐகோர்ட்டின் கடந்த மாத உத்தரவின் படி, இன்று முதல் ஜூன் 30 வரை இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது
oooooooooooo0000000000000000000000000000000000000000000000
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்கா, நாளை விதிக்கவுள்ள வரிகளால் பிரித்தானியா (UK) பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மர் நிலநடுக்கத்தில் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி மியான்மரில் 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து, இதுவரை இல்லாத சேதத்தை மியான்மர் சந்தித்துள்ளது. இதில், 1700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரான்சில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு வாரங்கள் முன்பாகவே பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன.
இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது.
ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.
30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது.
எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oooooooooooooooooo000000000000000000000000000000000000000000000
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில், நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.