தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ; கனேடிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கனடா ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் என ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.