Sunrise news

மியன்மாரை உலுக்கிய பூகம்பம்;….உயிரிழந்தவர் எண்ணிக்கை தெரியவில்லை…

இன்று நண்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மியான்மரில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவரும்,
தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மார் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்நிலநடுக்கம் பரவியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Jeba Sri
Author: Jeba Sri