வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இரண்டு ஜோதிடக்கலை நிபுணர்கள்: பலித்த கணிப்புகள்

வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இரண்டு ஜோதிடக்கலை நிபுணர்கள், 2025ஆம் ஆண்டைக்குறித்து கணித்த கணிப்புகள் பலித்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பல்கேரிய நாட்டவரான வங்கா பாபா என்னும் Vangeliya Pandeva Gushterova. அவர் பிறந்தது 1911ஆம் ஆண்டு, இறந்தது 1996ஆம் ஆண்டு
வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர், பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé). அவர் பிறந்தது 1986ஆம் ஆண்டு. ஆனால், இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இந்த இருவரும் 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் விடயங்கள் குறித்து முன்பே கணித்துள்ளார்கள்.
அவர்களுடைய கணிப்புகள் பல பலித்தும் வருவதால், அதுவும் மூன்றாம் உலகப்போர் அச்சம் அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறார்கள்.
பலித்த சமீபத்திய கணிப்புகள்
2025ஆம் ஆண்டில், பெரிய இயற்கைச் சேதங்கள் ஏற்படும் என கணித்துள்ளார் பாபா.
அதேபோல, சீனக்கடலில் ஒரு டிஜிட்டல் இடையூறு ஏற்படும் என எச்சரித்திருந்தார் ஏதோஸ். அப்போது அதை எல்லோரும் வேடிக்கையாக கருதினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் அவர் சொன்னதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.ஆம், ஏதோஸ் சொன்னதுபோலவே, கடலுக்கு அடியில் 4,000 அடி ஆழத்தில் செல்லும் இன்டர்நெட் கேபிள்களை துண்டிக்கும் கருவி ஒன்றை சீனா வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அப்படி கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் துண்டிக்கப்படுமானால், பல நாடுகளில் தொலைதொடர்பு உட்பட பல முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.