ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்
30-03-2025
சிறுவயதில் என் குடும்பத்தில் படுக்கை இடம் சொல்லும் கதை…..
நானும் அண்ணாவும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போட அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா, நான் முழிக்கும் போது அம்மா அசதியாக அண்ணா பக்கம் திரும்பியிருந்தால், நான் ஒரு மொக்கு பிள்ளை.., எனக்கு நித்திரை வராது. எழும்பியிருப்பேன். அம்மா “படு பிள்ளை” என அணைத்து தூங்கி விடுவோம். சிலவேளை அம்மா சமையலறை வேலையென்றால், நான் அண்ணா, தம்பி படுத்திருப்போம். அண்ணா நிறைய பகிடி சொல்வார். சிரித்துக்கொண்டு தூங்காவிடில், அப்பா படுக்க வைப்பதாக வருவார். ஒரே கதையும், சிரிப்பும் தான்….
சில வேளை அம்மம்மா எங்களுடன் வந்து படுத்தால், எனது தலையணை கொடுப்பேன். தம்பியின் தலையணையில் சேர்ந்து தூங்குவேன். இரவில் தம்பி உருண்டு தலையணை இல்லாமல் உறங்குவார். நான் கவனமாக தலையை தூக்கி வைத்தாலும், உருண்டு போய் விடுவார். ஒரு சந்தோஷ்மான காலம்…ஞாபகமூட்டி கண்ணீர்துளியைத் தந்த பாமுகத்திற்கு நன்றிகள்.
குழந்தை பருவத்தில் இருந்து
வெளிநாடு வரும்வரை
அம்மாவின் படுக்கையில் பங்கெடுப்பவள்.
மரக்கட்டில், பாய்
தலையணை, பெற்சீட்
என்பவை எம் படுக்கையை சுகப்படுத்துவன.
முன் இரவில் தனியே படுத்து
முன் விடியலில்
அம்மாவின் சூட்டில்
தூங்குவேன்.
எங்கள் வீட்டில்
ஆரம்பத்தில் சாணத்தால் மெழுகிய மண் நிலத்தில் படுப்பது
இப்பொழுதும் நினைக்கையில் உடம்பிற்கு இதமாகவே உள்ளது.
சில வேளைகளில் பாயில் படுக்கும் போது
உருண்டு உருண்டு
படுப்பதுவும் உண்டு.
சிறு வயதில் என் குடும்பத்தில்
என் படுக்கை இடம் சொல்லும் கதை என்னவென்றால்…..
எனக்கு என் சிறு வயதில் பெற்சீற் என சொல்லவே வராது…(போர்வை)
பெஸ்சீட் என்று தான் எனக்கு சொல்ல வரும்.
அதே நேரம் அந்த பெஸ்சீட் இல்லாம நான் நித்திரை கொள்ள போகவே மாட்டேன்.
என் உறவுகளில் சிலர் அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
நான் அதை சரியா சொன்னா தான் தருவம் என்பார்கள்….
என் அம்மாவும் அவர்களுடன் சேர்ந்தே சிரிப்பார்.
அதே நேரம் குடும்ப நிகழ்வுகளில் இரவு நேரத்தில் எல்லோரும் நித்திரைக்கு போனதும் அம்மா அடுப்புக் கரி எடுத்து மாவாக்கி கொஞ்ச தண்ணி விட்டு எல்லோருக்கும் பெரிய மீசை பூசி விடுவதில் அம்மா கெட்டிக்காறி…
எல்லோருக்கும் மீசை வரைந்திட்டு தானும் போய் நித்திரையாகிடுவார்..
பின்பு என்ன
விடிய எழும்பினதும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்புத்தான் இன்றும் என் கண்களில் என் அம்மாவின் சிரிப்பு….
இவற்றை மீண்டுமாய் நினைக்க வைத்ததைக்கு மிக்க நன்றி❤️🙏🏽
நான் இங்கு 1986 வந்து விட்டேன்.இங்கு மகன் பிறந்தார் . பார்க் ஆசப்படார். அம்மாவின் இறப்பு 1989தில் நடை பெற்றது.
எங்களில் 7 பெண்பிள்ளைகள். அக்காவுக்கும் எனக்கும் 3 பெண் குழந்தைகள்.
ஆண்குழந்தை எனக்கு பிறந்தும் அம்மா சந்தோசப் பட்டார்.
1வது பிறந்த நாள் அன்று
அம்மா பேரன் இல்லாமலே பலகாரம் செய்து உறவுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
3வயது வரை அப்படி செய்வார். அவர் இறந்தும் இன்று வரை நினைத்து பார்ப்பேன்.
அதுமட்டுமல்ல நானும் அம்மாவை நித்தம் நினைப்பதும், வயது முதிர்ந்தவர்களை கண்டால் எனது அம்மாவின் நினைவு தான் வரும் எனக்கு அவர்களை எனது அம்மாவாக நினைத்து பார்த்தேன். என்றும்மறக்க முடியாது அம்மாவை.
“அம்மா இல்லையென்றால் எல்லாம் சும்மா தான்.”
இனிய காலை வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எங்கள் வீட்டில் நடந்த முதல் இறப்பு “எங்கள்ஆச்சி”அப்போது நாங்கள் சிறுவர்கள்
எல்லோரும் அழுதார்கள் நாங்களும் அழுதோம்.
அதன்பின் நடந்த என் அம்மாவின் இழப்புத்தான் எங்கள் மனதை உலுக்கி இன்றும் என் மனதை விட்டு
நீங்காத நினைவு.1969ம் ஆண்டு.புரட்டாசி மாதம்
6ம் திகதி காலை எழுந்ததில் இருந்து அம்மா தொடர்ந்து இருமலால் சோர்ந்து போய்
அம்மம்மாவிடம் என்னால் முடியவில்லை ,நான் படுக்கப்போறேன் என்று கூறினார்.கூடத்தில் பாய்விரித்து அம்மாவைப்
படுக்க வைத்தோம்.அம்மாவின்
நிலமை அம்மம்மாவுக்கு புரிந்து விட்டது. வேக வேகமாக மூச்சுவிட்ட அம்மாவின் இறுதி நேரம் என்று.எல்லோரும் கூடி நின்றுசெபித்துக்கொண்டிருக்க.அம்மாவின் கண்கள்
மெதுவாகமூடிக்ககொண்டதுக்பிள்ளைகள் நாங்கள்அலறி அழ ,மூடிய அம்மாவின் கண்கள் மெதுவாக திறக்க பக்கத்தில்இருந்தவர்கள்
அழாதீங்க, அம்மாட உயிரை
நிம்மதியாகப் போக விடுங்க என்று கூற நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க அம்மாவின் திரும்பவும் மூடிக் கொண்டன.இன்னும் என் நெஞ்சில்நீங்காத நினைவாக உள்ளது .நன்றி பாமுகம்.
பெற்றோரே தெய்வம்…
கண்முன் கண்டதும் இன்றும் இது நடந்திருக்குமா என எண்ண வைக்கும் இழப்பு எமது பெரியப்பா ஓலை வீடு வேய்ந்து கொண்டிருந்தவருக்கு ஓலை எடுத்துக் கொண்டிருந்தார் சற்று நேரத்தில் தள்ளாடினார் படுக்க வைத்தனர் எழும்பவே இல்லை.. உறவுகள் வந்து பாதங்களை தொட்டுப் பார்த்து விட்டு குளறினார்கள்.. நம்பமுடியாத நான் பார்த்த முதல் பிரிவு என்றும் என்மனதை நெருடும் பேரிழப்பு. அன்று புரியவில்லை இன்று இதுவே மாரடைப்பு என மனம் ஏற்கிறது.
அன்றைய அவலக்குளறல் ஒலி இன்றும் மனதை உலுக்கும் மறக்க முடியாத மனதின் வலியே.
நன்றி
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் பல மூத்த உறவுகள் இழந்தமையை பார்த்திருக்கின்றோம்.
பெரியம்மாவின் மூத்த மகன்
சிறு பிள்ளைகளுடன் குடும்பமாக வாழும் காலத்தில்
தன்னைத்தானே அழித்துக்கொண்டமை
நினைத்து ,நினைத்து
பெரியம்மா, அம்மா
கவலைப்படுவதை
பார்த்திருக்கின்றேன்.
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
தாலாட்டுப் பாடி என்னை அம்மா தூங்க வைத்த ஞாபகம்
இல்லை .தம்பி தங்கையரை
தூங்க வைத்தது இன்றும் ஞாபகம் .அம்மா பாடிய தாலாட்டு பாடலைப் பாடி எனது அக்காவின் பிள்ளைகளையும்
எனது பிள்ளைகளயும் நான்
தூங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் சிறு வயதில் பல கதைகள் சொல்லி தூங்க வைப்பது ஞாபகத்தில் உண்டு.ஞாபகமூட்டியதற்கு
நன்றிகள்.
பெற்றோரே தெய்வம்…
அம்மாவுடன் அனைவரும் ஒன்றாகப் படுத்துறங்கியது ஞாபகம். கதைகள் கூறியதும் நாங்கள் இடைமறித்து குழப்புவதும் பூச்சாண்டி வருகுது சத்தமில்லாமல் படுங்கள் என பயன்படுத்தியும் நித்திரையாக்கி விட்டு நுளம்பு குத்தாமல் ஒவ்வொருவரையும் போர்த்தி விடுவார் அம்மா.
மிக்க நன்றி
எங்கள் வீட்டில் சிறு பிள்ளையாய் இருக்கும் போது எனக்கு தாலாட்டுப் பாடியது ஞாபகமில்லை. தம்பிக்கு பாடும் போது என்னையும் அணைத்து தூங்க வைப்பார்கள். நிறைய கதை சொல்வார்கள். எழும்பியிருந்து கதை கேட்ட ஞாபகமுண்டு, பின்னர் அம்மா நித்திரை போல் நடிப்பார். நானும் நித்திரை போல் நடிக்கலாம் என நினைப்பேன், தூங்கி விடுவேன். ஆராரோ ஆரிவரோ … மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூ செண்டாலே …பாடல் ஞாபகமுண்டு தம்பியை ஏணையில்ப் போட்டு ஆட்டிய ஞாபமுண்டு. அம்மா சமையலறையில் வேலையாயிருந்தால், அப்பா நிறைய கதை சொல்வார். அண்ணாவும், நானும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போடுவம். அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா. தம்பியை காலில்ப் போட்டு உறங்க வைப்பா. நானும் காலில்ப் போட்டு உறங்க வைப்பேன். ஞாபகங்களை மீண்டுத் தந்த பாமுகத்திற்கு நன்றி.
பெற்றோரே தெய்வம்
சின்ன வயதில் அம்மம்மா காலை நீட்டி தலையனை வைத்து காலை ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பா .
தோலில் போட்ட தலையை சாய்த்து தட்டி தாலாட்டுப் பாடல்கள் பாடுவா.அம்மா.
மடியில் போட்டு அனைத்து தட்டி தாலாட்டுப் பாடல் பாடுவது முண்டு.
மாமாவின் சேலையை ஏனை கட்டி அதில் போட்டு, ஆட்டி நித்திரை ஆக்குவார். நானும் மகளை இப்படித்தான் நித்திரை ஆக்குவேன்.
வெளிநாட்டில் மகன் நித்திரை ஆகும்போது அம்மம்மா அம்மாவை நினைத்து உணவு தந்து பிள்ளை மை பார்த்தவர்கள் அவர்கள், எண்ணி அழுவேன் .
இப்போது அழுகை வந்தது.
மிக்க நன்றி.
பிள்ளைப்பருவத்தில்
எப்படி தாலாடினார்கள்
என்பது
எம் நினைவில் இல்லை.
அப்பப்பா மட்டுமே
என் நான்கு வயது வரை
வாழ்ந்த மூத்தபெற்றோர்.
சிறுவயதில்
நித்திரைக்குச் செல்வதற்கு முன்
அம்மா புராணக்கதைகள், திருப்புகழ், கந்தனுபூதி போன்றவற்றைச் சொல்லித்தந்தமை
பசுமரத்தானியாக இன்றும்
எம் மனதில் உள்ளன.
அம்மா இரவில் படுக்கும் போது நல்ல நல்ல கதைகள் சொல்வார் இப்ப நினைச்சாலும் இனிக்கும் தூக்கவும் வரும் நினைவிலும் இருக்கு அப்படியே படுத்து தூங்கிய நாட்கள்…. இடையில் கேட்கின்றீர்களா அல்லது படுத்து விட்டீர்களா என சத்தம் போடுவார் மறுநாள் மிகுதி கதையை சொல்லுங்கள் அம்மா என கேட்ட நாளும் உண்டு…
சொக்க சொக்கா சோறும் உண்டு சோளநாட்டான் கெடுத்து போட்டான் என்ற கதை நினைவில் இருக்கு….
எங்கள் வீடு சீற்போட்ட வீடு சரியான
வெக்கை அம்மாவுக்கு வேர்த்து ஓழுகும்
ஐயா பனை ஓலையில் கட்டிய விசிறியால் விசுக்குவா
தம்பிமார் சண்டை போடுவாங்கள் அந்த சத்தத்தில் நான் தூங்கி விடுவேன்….
யன்னலை திறந்து விட்டு காத்து வாங்கி படுத்த நாளும் உண்டு கள்ளர் இல்லாத காலம்…அது
(அம்மம்மாவுடன் இருந்த காலம் குறைவு அப்பம்மாவையும் பார்க்கவில்…
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.

பெற்றோரே தெய்வம் வரிகள்
இரவில் தூங்க வைக்கும் தந்திரங்கள். பாட்டு கதை சொல்லி தூங்க வைப்பார் அம்மா. காகம் நரி கதை.
புறா பாம்புக்கதை இப்படியான கதைகள் சொல்லுவா.
அதிகமாக ஆராரோ ஆரிவரோ
இந்தப் பாடல் இன்றும்
நினைவாக உள்ளது.
என் சகோதரர்களுக்கு பாடியபோது
நானும் சேர்ந்து பாடுவேன். இன்று நினைக்கும்போது
அந்த நாட்களின்
ஆனந்தமாக மறக்க மறக்கமுடியாத நினைவாக உள்ளது
எங்கள் வீட்டில் ஆளுமை அதிகாரம் கட்டுப்பாடு எல்லாமே அம்மா தான்.
அப்பா கொழும்பில் கெப்பிட்டல் தியேட்டரில் வேலை, ஊருக்கு வந்தால் அன்பாக எங்களுடன் நேரத்தை செலவளிப்பார்.
பின்னர் நிறைய தோட்டங்கள், வயல்கள் ஆட்களை வைத்தும் செய்து கொண்டிருப்பார். அப்பா, அம்மா இருவருக்கும் நாங்கள் நல்லா படிக்கவேண்டும், நல்ல வேலை செய்ய வேண்டுமென்பது தான் விருப்பு. சிறிய வயதில் ஊரில் படித்த காலத்தில், எனக்கு பரீட்சை என நான்கு மணிக்கு எழும்பினாலும் அம்மா நான்கு மணிக்கே எழும்பி தேநீர் போட்டுத் தருவா. அருகிலிருந்து ஏதாவது பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருப்பா. அல்லது சமையல் வேலை என தொடங்கி விடுவா. சிறிய வயதில் அம்மா சமைக்கும் போது அருகிலிருந்தால் வாய்பாடு. சொல்லித்தருவா, வாசிக்க விடுவா, ஏதாவது பாடசாலை பற்றி கேள்வி கேட்டு நல்ல தோழி போல் கதைப்பா. இருவரும் எங்களை அடித்தோ, கண்டித்தோ திருத்தவில்லை, அன்பாலும், இப்படி வாழ வேண்டுமெனவும் சொல்லித் தான் திருத்துவார்கள்.
அவர்களிடம் கற்றுக்கொண்டது போல், நானும் தொடர்கின்றேன். பிள்ளைகள் படிக்கும் போது அருகிலிருந்து நானும் ஏதோ கிறுக்கல்கள் செய்வேன். வேலையில்லையென்றால், படுக்கலாம் தானே என்பார்கள். ( இதெல்லாம் என் அம்மா வேறு வேலைகளுடன் என்னைக் கவனித்திருக்கிறா என்பது புரியுது.)
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
ஐயாவின் உழைப்பு ,அம்மாவின் திறமை, இரண்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
ஐயா தரும் பணத்தில் அம்மா
கணக்குப் பார்த்து செலவு செய்து மீதிப் பணத்தை உண்டியலில போட்டு சேமித்து
வீட்டுத் தேவைகளை கச்சிதமாக செய்து முடிப்பார்.
அதில் ஐயா சந்தோசப் படுவார்.ஐயாவின் கட்டுப் பாட்டில் அம்மாவின் ஆளுமையில்அழகாக நடந்தது நான் கண்ட என் குடும்பம்…
வீட்டுத் தலைவர்களை மதித்து
ஆளுமை கொண்ட பெண்களாக எம் தாய்மார்
இருந்தது பெண்களுக்குப். பெருமையே….
நன்றி.
எங்கள் பெற்றோருடன்
வாழும் காலத்தில்
பொருளாதார ரீதியில்
பலம் அப்பாவிடமே!!
ஆனால் அதனை கொண்டு குடும்பத்தை நிர்வகித்த திறன் அம்மாவிடம்!!
வீட்டில், வளவில் கிடைக்கின்ற
மா, புளி, இலுப்பை , தென்னை…… போன்ற
வளங்களை பெருக்கி
அவற்றையும் பணமாக்கிய பெருமை
அம்மாவின் கைங்கரியமே!!!
அப்பாவின் தொனி
மேலோங்கி இருந்தமையால்
வெளித்தோற்றத்தில்
அவரே எங்கள் வீட்டின் ஆளுமை.🙏
வணக்கம்
பெற்றோரே தெய்வம் எங்கள் வீட்டில் நிர்வாகப் பொறுப்பில், பிள்ளைகள் வளர்ப்பில் அம்மாவே , ஆற்றலுடன் ஆளுமையுடன், பாசம், நேசப்பகிர்வுடன் கட்டியம் கூறி வாழ்வின் முதன்மை தாயிடமே. நாமும் பொறுப்புள்ள வாழ்வின் பற்றை பார்த்து வளர்ந்திட எம்மையறியாமலே எமக்குள் ஊடுருவியுள்ளது எனலாம். தந்தை தொழில் நிமித்தம் வேறிடம் என்பதால் பெற்றோர் நிர்வாக அதிகாரம் அம்மாவிடமே.
நன்றி
பெற்றோரே தெய்வம்.
அம்மா, அப்பா கார் வைத்திருந்தார். ரொலி எடுத்து நட்டப் பட்டார். கடன் கூட அப்போது தான் அம்மா சீட்டு போட்டு கடனை அடைத்தார்.
நிர்வாகம் தன் கைக்கு வந்தது. வேலையிடத்தில் வீடு கட்ட பணம் கடன் பட்டார் அப்பா. அவரின் வருமானம் மாதமாதம் கழித்து விடுவார்கள்.
அம்மா பால்,தேங்காய், மாங்காய் மற்றும் கிடுகுபின்னி விற்று
வீட்டு வீட்டு நிர்வாகம் பாத்தார். முக்கிய தேவைகளையும் செய்தார் . சாப்பாடை தவித்து மற்றையதை பாத்து செய்வதும் சிறப்பு. சிறுதுளி சேமிப்பும் முண்டு. இவற்றை பாத்து வியந்ததும் உண்டு.
எங்களுக்கு கூறுவா உழைப்பில் முதல் உணவு அத்தியாவசிய தேவைகள் பயணம் பின்னர் மிச்சம் மிச்சம் கொஞ்சம் பிடிக்க வேனும் கடன் படக்கூடாது என்று கூறுவார். எத்தனை படங்கள் கெக்கன் சோ படம் பாக்க கூட்டி சென்றார்கள் காரணம் பெண் பிள்ளைகள் என்று.
கோவில் திருவிழா , கீரிமலை குளிக்க மறக்க முடியாத அனுபவங்கள்.
நாம் 50% தான் அப்படி வாழமுடிகிறது. கடன் இல்லாமல் வாழ்வதை எண்ணி மகிழ்கிறேன்.
பெற்றோரை எப்போதும் எண்ணி பெருமை கொள்கிறேன்.
நினைவு கூர்ந்த மைக்கு நன்றி.
அவற்றை கேட்டு மகிழ்ச்சி ஒருபுறம், மறுபுறம் கவலையும் படுவதுண்டு .
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எனது பாடசாலை நாட்களில்
புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்ட ஞாபகம்
இன்னும் பசுமையாக
என் மனதில்
கடைகளில்உறை போடுவதற்க்கென பேப்பர்கள் விற்பனையி்ல்இருந்தது்
வாங்கிபோடுவோம்
சீமேந்து வரும் பேப்பரிலும்போட் டிருக்கிறேன்.வேப்ப மரத்தில்
பட்டை சீவி வடிந்திருக்கும்
பிசினால் ஒட்டியிருக்க்கிறேன்
சிறிய வெள்ளைப் பேப்பரில்
பெயர் எழுதி முன்பகுதியில்
ஒட்டுவோம். நன்றி்.
“பெற்றோரே தெய்வம்”
பாடசாலை தொடங்கப் போகிறது என்று புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்டு அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஒட்டி பெயர் எத்தினையாம் வகுப்பு என்று எழுதுவதும் அழகே. மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதும் பிடிக்கும்.நானும் மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்து விட்டு ஒவ்வொரு நாளும் பார்த்து ஏமாந்ததுதான். இரவில் படிக்கும் போது அம்புலிமாமா புத்தகம் வைத்து கதை வாசிப்பேன், அம்மா வரும்போது கொப்பிக்குக் கீழ் வைத்துவிடுவேன்.பயம்தான்.
றாஜினி.அல்போன்ஸ்
சிறிவயதில் அம்மா தான் கொப்பிகளுக்கு அழகாய் உறை போட்டுத்தருவார்.
அந்த உறை அப்பா சவுதியில் இருந்து பொருட்களுடன் பெட்டி அனுப்புவார்.
அதனுள் மிக அழகான காட்சி படங்கள் உள்ள கலண்டர் அதையும் அதனுள் வைத்து அனுப்புவார்.
அதனைத்தான் அம்மா எங்கள் கொப்பிகளுக்கு உறை போட்டுத்தருவார்.
அப்போ எனக்கு அது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
கல்வியங்காட்டில் ஆடியபாதம் வீதியில் படக்கடை பலா அண்ணா இவருடைய கடை நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிரே…
அவரிடம் தான் எங்களுக்கு தேவையான கொப்பி,பிறவுண் உறை,குட்டிக்குட்டி ஸ்ரிக்கர் எல்லாம் வேண்டி மிக அழகாய் ஒட்டி எங்கள் கொப்பிகளை அழகு பார்ப்போம்.
இன்றும் கூட என்னிடம் என் சிறு வயது கொப்பியின்
முன் மட்டை ஒன்றை வைத்து பாதுகாத்து வருகிறேன்.
நானும் மயிலிறகு குட்டி போடும் எனவும் அதற்க்கு வாசமான பவுடர் கொஞ்சம் தூவி தினம் தினம் தொட்டுப்பார்க்கவும் தவறமாட்டேன்.
நினைவுகளை மீட்டிப்பார்த்திலும் மிக மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி பாமுகம்…
02/03 ஞாயிறு :
“சமூக ஒருங்கிசைவை வலியுறுத்தும் ஆண்டு 2025” :
“மூத்தோர் மாண்பு போற்றும் சிறப்பு மாதம் மார்ச் 2025” :
Fatvtamil.com
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
[ பெற்றோருடன் வாழ்ந்த காலங்களூடாக, அவர்களை நன்றியோடூ உயிரூட்டுவோம்…]

பள்ளிக்காலங்களில்
ஒவ்வொரு
புதிய வகுப்புகள் ஆரம்பங்களில்
எங்கள் கொப்பி, புத்தகங்களின் அழகோ தனி அழகு.
சீமெந்து வரும் பைகள்,
மெழுகு , உறைபோடுவதற்கு என விற்கப்படும் பேப்பர்
எத்தனையோ உறைகள்…
அப்பா வாங்கித்தந்த உறைகள்.
தங்கம் மச்சாள் பசை காய்ச்சி உறைகளை அழகாக
போட்டுத்தருவார்.
தலையணைக்கு கீழ்
அடுக்கி வைத்த காலம்
என்றும் எம் நினைவில்
சமயப்புத்தகத்திற்குள் மயில் இறகுகள்,
அரசம்இலைகள்,
இன்னொரு வகை இலைகள் என
கொப்பிகளுக்குள் வைத்து பாதுகாத்தமை
ஏராளம்…..

பெற்றோரே தெய்வம்,

30.03.2025
தர்ஜினி சண்
Swiss

தர்ஜினி சண்.

கண்கள் திரும்பவும் மூடிக் கொண்டன

சாந்தினி.
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
தாலாட்டுப் பாடி என்னை அம்மா தூங்க வைத்த ஞாபகம்
இல்லை .தம்பி தங்கையரை
தூங்க வைத்தது இன்றும் ஞாபகம் .அம்மா பாடிய தாலாட்டு பாடலைப் பாடி எனது அக்காவின் பிள்ளைகளையும்
எனது பிள்ளைகளயும் நான்
தூங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் சிறு வயதில் பல கதைகள் சொல்லி தூங்க வைப்பது ஞாபகத்தில் உண்டு.ஞாபகமூட்டியதற்கு
நன்றிகள்.
பெற்றோரே தெய்வம்…
அம்மாவுடன் அனைவரும் ஒன்றாகப் படுத்துறங்கியது ஞாபகம். கதைகள் கூறியதும் நாங்கள் இடைமறித்து குழப்புவதும் பூச்சாண்டி வருகுது சத்தமில்லாமல் படுங்கள் என பயன்படுத்தியும் நித்திரையாக்கி விட்டு நுளம்பு குத்தாமல் ஒவ்வொருவரையும் போர்த்தி விடுவார் அம்மா.
மிக்க நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-03-2025
எங்கள் வீட்டில் சிறு பிள்ளையாய் இருக்கும் போது எனக்கு தாலாட்டுப் பாடியது ஞாபகமில்லை. தம்பிக்கு பாடும் போது என்னையும் அணைத்து தூங்க வைப்பார்கள். நிறைய கதை சொல்வார்கள். எழும்பியிருந்து கதை கேட்ட ஞாபகமுண்டு, பின்னர் அம்மா நித்திரை போல் நடிப்பார். நானும் நித்திரை போல் நடிக்கலாம் என நினைப்பேன், தூங்கி விடுவேன். ஆராரோ ஆரிவரோ … மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூ செண்டாலே …பாடல் ஞாபகமுண்டு தம்பியை ஏணையில்ப் போட்டு ஆட்டிய ஞாபமுண்டு. அம்மா சமையலறையில் வேலையாயிருந்தால், அப்பா நிறைய கதை சொல்வார். அண்ணாவும், நானும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போடுவம். அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா. தம்பியை காலில்ப் போட்டு உறங்க வைப்பா. நானும் காலில்ப் போட்டு உறங்க வைப்பேன். ஞாபகங்களை மீண்டுத் தந்த பாமுகத்திற்கு நன்றி.
பெற்றோரே தெய்வம்
சின்ன வயதில் அம்மம்மா காலை நீட்டி தலையனை வைத்து காலை ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பா .
தோலில் போட்ட தலையை சாய்த்து தட்டி தாலாட்டுப் பாடல்கள் பாடுவா.அம்மா.
மடியில் போட்டு அனைத்து தட்டி தாலாட்டுப் பாடல் பாடுவது முண்டு.
மாமாவின் சேலையை ஏனை கட்டி அதில் போட்டு, ஆட்டி நித்திரை ஆக்குவார். நானும் மகளை இப்படித்தான் நித்திரை ஆக்குவேன்.
வெளிநாட்டில் மகன் நித்திரை ஆகும்போது அம்மம்மா அம்மாவை நினைத்து உணவு தந்து பிள்ளை மை பார்த்தவர்கள் அவர்கள், எண்ணி அழுவேன் .
இப்போது அழுகை வந்தது.
மிக்க நன்றி.
இனிய வணக்கம்,
பெற்றோரே தெய்வம்.
பிள்ளைப்பருவத்தில்
எப்படி தாலாடினார்கள்
என்பது
எம் நினைவில் இல்லை.
அப்பப்பா மட்டுமே
என் நான்கு வயது வரை
வாழ்ந்த மூத்தபெற்றோர்.
சிறுவயதில்
நித்திரைக்குச் செல்வதற்கு முன்
அம்மா புராணக்கதைகள், திருப்புகழ், கந்தனுபூதி போன்றவற்றைச் சொல்லித்தந்தமை
பசுமரத்தானியாக இன்றும்
எம் மனதில் உள்ளன.
சாந்தினி
இரவில் தூங்க வைக்கும்
தந்திரம்
அம்மா இரவில் படுக்கும் போது நல்ல நல்ல கதைகள் சொல்வார் இப்ப நினைச்சாலும் இனிக்கும் தூக்கவும் வரும் நினைவிலும் இருக்கு அப்படியே படுத்து தூங்கிய நாட்கள்…. இடையில் கேட்கின்றீர்களா அல்லது படுத்து விட்டீர்களா என சத்தம் போடுவார் மறுநாள் மிகுதி கதையை சொல்லுங்கள் அம்மா என கேட்ட நாளும் உண்டு…
சொக்க சொக்கா சோறும் உண்டு சோளநாட்டான் கெடுத்து போட்டான் என்ற கதை நினைவில் இருக்கு….
எங்கள் வீடு சீற்போட்ட வீடு சரியான
வெக்கை அம்மாவுக்கு வேர்த்து ஓழுகும்
ஐயா பனை ஓலையில் கட்டிய விசிறியால் விசுக்குவா
தம்பிமார் சண்டை போடுவாங்கள் அந்த சத்தத்தில் நான் தூங்கி விடுவேன்….
யன்னலை திறந்து விட்டு காத்து வாங்கி படுத்த நாளும் உண்டு கள்ளர் இல்லாத காலம்…அது
(அம்மம்மாவுடன் இருந்த காலம் குறைவு அப்பம்மாவையும் பார்க்கவில்…
நன்றி வணக்கம் 🙏
பெற்றோரே தெய்வம்
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
அப்போ அம்மா சொல்லுவார் காத்து இப்போ குட்டான் வீட்ட போட்டுது என்று…வந்ததும் விசுக்கிறேன் என்பார்.
நானும் அம்மா சொன்னா சரிதான் என்று நம்பி கொஞ்ச நேரத்தில நித்திரையாகி விடுவேன்.
இது மாதிரியே தொடர்ந்தது…
எங்களுக்காக வேண்டிய தொட்டிலும்
ஆச்சியின் வெள்ளைச்சேலையினால் கட்டிய ஏணையும் இன்றும் என் கண்களில்……
நினைக்க வைத்த பாமுகத்திற்க்கு கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽
தர்ஜினி சண்❤️🙏🏽
15.03.2025
பெற்றோரே தெய்வம்
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
அப்போ அம்மா சொல்லுவார் காத்து இப்போ குட்டான் வீட்ட போட்டுது என்று…வந்ததும் விசுக்கிறேன் என்பார்.
நானும் அம்மா சொன்னா சரிதான் என்று நம்பி கொஞ்ச நேரத்தில நித்திரையாகி விடுவேன்.
இது மாதிரியே தொடர்ந்தது…
எங்களுக்காக வேண்டிய தொட்டிலும்
ஆச்சியின் வெள்ளைச்சேலையினால் கட்டிய ஏணையும் இன்றும் என் கண்களில்……
நினைக்க வைத்த பாமுகத்திற்க்கு கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽
தர்ஜினி சண்❤️🙏🏽
15.03.2025
பெற்றோரே தெய்வம் வரிகள்
இரவில் தூங்க வைக்கும் தந்திரங்கள். பாட்டு கதை சொல்லி தூங்க வைப்பார் அம்மா. காகம் நரி கதை.
புறா பாம்புக்கதை இப்படியான கதைகள் சொல்லுவா.
அதிகமாக ஆராரோ ஆரிவரோ
இந்தப் பாடல் இன்றும்
நினைவாக உள்ளது.
என் சகோதரர்களுக்கு பாடியபோது
நானும் சேர்ந்து பாடுவேன். இன்று நினைக்கும்போது
அந்த நாட்களின்
ஆனந்தமாக மறக்க மறக்கமுடியாத நினைவாக உள்ளது
இனிய காலை வணக்கம்
பெற்றோரே தெய்வம்
09-03-2025
எங்கள் வீட்டில் ஆளுமை அதிகாரம் கட்டுப்பாடு எல்லாமே அம்மா தான்.
அப்பா கொழும்பில் கெப்பிட்டல் தியேட்டரில் வேலை, ஊருக்கு வந்தால் அன்பாக எங்களுடன் நேரத்தை செலவளிப்பார்.
பின்னர் நிறைய தோட்டங்கள், வயல்கள் ஆட்களை வைத்தும் செய்து கொண்டிருப்பார். அப்பா, அம்மா இருவருக்கும் நாங்கள் நல்லா படிக்கவேண்டும், நல்ல வேலை செய்ய வேண்டுமென்பது தான் விருப்பு. சிறிய வயதில் ஊரில் படித்த காலத்தில், எனக்கு பரீட்சை என நான்கு மணிக்கு எழும்பினாலும் அம்மா நான்கு மணிக்கே எழும்பி தேநீர் போட்டுத் தருவா. அருகிலிருந்து ஏதாவது பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருப்பா. அல்லது சமையல் வேலை என தொடங்கி விடுவா. சிறிய வயதில் அம்மா சமைக்கும் போது அருகிலிருந்தால் வாய்பாடு. சொல்லித்தருவா, வாசிக்க விடுவா, ஏதாவது பாடசாலை பற்றி கேள்வி கேட்டு நல்ல தோழி போல் கதைப்பா. இருவரும் எங்களை அடித்தோ, கண்டித்தோ திருத்தவில்லை, அன்பாலும், இப்படி வாழ வேண்டுமெனவும் சொல்லித் தான் திருத்துவார்கள்.
அவர்களிடம் கற்றுக்கொண்டது போல், நானும் தொடர்கின்றேன். பிள்ளைகள் படிக்கும் போது அருகிலிருந்து நானும் ஏதோ கிறுக்கல்கள் செய்வேன். வேலையில்லையென்றால், படுக்கலாம் தானே என்பார்கள். ( இதெல்லாம் என் அம்மா வேறு வேலைகளுடன் என்னைக் கவனித்திருக்கிறா என்பது புரியுது.)
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
ஐயாவின் உழைப்பு ,அம்மாவின் திறமை, இரண்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
ஐயா தரும் பணத்தில் அம்மா
கணக்குப் பார்த்து செலவு செய்து மீதிப் பணத்தை உண்டியலில போட்டு சேமித்து
வீட்டுத் தேவைகளை கச்சிதமாக செய்து முடிப்பார்.
அதில் ஐயா சந்தோசப் படுவார்.ஐயாவின் கட்டுப் பாட்டில் அம்மாவின் ஆளுமையில்அழகாக நடந்தது நான் கண்ட என் குடும்பம்…
வீட்டுத் தலைவர்களை மதித்து
ஆளுமை கொண்ட பெண்களாக எம் தாய்மார்
இருந்தது பெண்களுக்குப். பெருமையே….
நன்றி.
பெற்றோரே
தெய்வம்
குடும்ப பொறுப்பு அம்மா கையில் தான் எல்லோரையும் வழிநடத்தல் சரியாக செய்வார் ….
ஆளுமை ஐயா விடம்
கட்டுபாடு கண்டிப்பு அத்தனையும் ஐயா தான் செய்வார் …
நிர்வாகம் வழிநடத்தல் அம்மா
பொருளாளர்
அம்மா மிக மிக கச்சிதமாக செய்வார்!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
எங்கள் பெற்றோருடன்
வாழும் காலத்தில்
பொருளாதார ரீதியில்
பலம் அப்பாவிடமே!!
ஆனால் அதனை கொண்டு குடும்பத்தை நிர்வகித்த திறன் அம்மாவிடம்!!
வீட்டில், வளவில் கிடைக்கின்ற
மா, புளி, இலுப்பை , தென்னை…… போன்ற
வளங்களை பெருக்கி
அவற்றையும் பணமாக்கிய பெருமை
அம்மாவின் கைங்கரியமே!!!
அப்பாவின் தொனி
மேலோங்கி இருந்தமையால்
வெளித்தோற்றத்தில்
அவரே எங்கள் வீட்டின் ஆளுமை.🙏
சாந்தினி துரையரங்கன்.
வணக்கம்
பெற்றோரே தெய்வம் எங்கள் வீட்டில் நிர்வாகப் பொறுப்பில், பிள்ளைகள் வளர்ப்பில் அம்மாவே , ஆற்றலுடன் ஆளுமையுடன், பாசம், நேசப்பகிர்வுடன் கட்டியம் கூறி வாழ்வின் முதன்மை தாயிடமே. நாமும் பொறுப்புள்ள வாழ்வின் பற்றை பார்த்து வளர்ந்திட எம்மையறியாமலே எமக்குள் ஊடுருவியுள்ளது எனலாம். தந்தை தொழில் நிமித்தம் வேறிடம் என்பதால் பெற்றோர் நிர்வாக அதிகாரம் அம்மாவிடமே.
நன்றி
பெற்றோரே தெய்வம்.
அம்மா, அப்பா கார் வைத்திருந்தார். ரொலி எடுத்து நட்டப் பட்டார். கடன் கூட அப்போது தான் அம்மா சீட்டு போட்டு கடனை அடைத்தார்.
நிர்வாகம் தன் கைக்கு வந்தது. வேலையிடத்தில் வீடு கட்ட பணம் கடன் பட்டார் அப்பா. அவரின் வருமானம் மாதமாதம் கழித்து விடுவார்கள்.
அம்மா பால்,தேங்காய், மாங்காய் மற்றும் கிடுகுபின்னி விற்று
வீட்டு வீட்டு நிர்வாகம் பாத்தார். முக்கிய தேவைகளையும் செய்தார் . சாப்பாடை தவித்து மற்றையதை பாத்து செய்வதும் சிறப்பு. சிறுதுளி சேமிப்பும் முண்டு. இவற்றை பாத்து வியந்ததும் உண்டு.
எங்களுக்கு கூறுவா உழைப்பில் முதல் உணவு அத்தியாவசிய தேவைகள் பயணம் பின்னர் மிச்சம் மிச்சம் கொஞ்சம் பிடிக்க வேனும் கடன் படக்கூடாது என்று கூறுவார். எத்தனை படங்கள் கெக்கன் சோ படம் பாக்க கூட்டி சென்றார்கள் காரணம் பெண் பிள்ளைகள் என்று.
கோவில் திருவிழா , கீரிமலை குளிக்க மறக்க முடியாத அனுபவங்கள்.
நாம் 50% தான் அப்படி வாழமுடிகிறது. கடன் இல்லாமல் வாழ்வதை எண்ணி மகிழ்கிறேன்.
பெற்றோரை எப்போதும் எண்ணி பெருமை கொள்கிறேன்.
நினைவு கூர்ந்த மைக்கு நன்றி.
அவற்றை கேட்டு மகிழ்ச்சி ஒருபுறம், மறுபுறம் கவலையும் படுவதுண்டு .
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எனது பாடசாலை நாட்களில்
புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்ட ஞாபகம்
இன்னும் பசுமையாக
என் மனதில்
கடைகளில்உறை போடுவதற்க்கென பேப்பர்கள் விற்பனையி்ல்இருந்தது்
வாங்கிபோடுவோம்
சீமேந்து வரும் பேப்பரிலும்போட் டிருக்கிறேன்.வேப்ப மரத்தில்
பட்டை சீவி வடிந்திருக்கும்
பிசினால் ஒட்டியிருக்க்கிறேன்
சிறிய வெள்ளைப் பேப்பரில்
பெயர் எழுதி முன்பகுதியில்
ஒட்டுவோம். நன்றி்.
“பெற்றோரே தெய்வம்”
பாடசாலை தொடங்கப் போகிறது என்று புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்டு அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஒட்டி பெயர் எத்தினையாம் வகுப்பு என்று எழுதுவதும் அழகே. மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதும் பிடிக்கும்.நானும் மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்து விட்டு ஒவ்வொரு நாளும் பார்த்து ஏமாந்ததுதான். இரவில் படிக்கும் போது அம்புலிமாமா புத்தகம் வைத்து கதை வாசிப்பேன், அம்மா வரும்போது கொப்பிக்குக் கீழ் வைத்துவிடுவேன்.பயம்தான்.
றாஜினி.அல்போன்ஸ்
பெற்றோரே தெய்வம்….
அன்று சிறு வயது பள்ளிக்காலங்களில்…
சிறிவயதில் அம்மா தான் கொப்பிகளுக்கு அழகாய் உறை போட்டுத்தருவார்.
அந்த உறை அப்பா சவுதியில் இருந்து பொருட்களுடன் பெட்டி அனுப்புவார்.
அதனுள் மிக அழகான காட்சி படங்கள் உள்ள கலண்டர் அதையும் அதனுள் வைத்து அனுப்புவார்.
அதனைத்தான் அம்மா எங்கள் கொப்பிகளுக்கு உறை போட்டுத்தருவார்.
அப்போ எனக்கு அது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
கல்வியங்காட்டில் ஆடியபாதம் வீதியில் படக்கடை பலா அண்ணா இவருடைய கடை நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிரே…
அவரிடம் தான் எங்களுக்கு தேவையான கொப்பி,பிறவுண் உறை,குட்டிக்குட்டி ஸ்ரிக்கர் எல்லாம் வேண்டி மிக அழகாய் ஒட்டி எங்கள் கொப்பிகளை அழகு பார்ப்போம்.
இன்றும் கூட என்னிடம் என் சிறு வயது கொப்பியின்
முன் மட்டை ஒன்றை வைத்து பாதுகாத்து வருகிறேன்.
நானும் மயிலிறகு குட்டி போடும் எனவும் அதற்க்கு வாசமான பவுடர் கொஞ்சம் தூவி தினம் தினம் தொட்டுப்பார்க்கவும் தவறமாட்டேன்.
நினைவுகளை மீட்டிப்பார்த்திலும் மிக மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி பாமுகம்…
நன்றி
தர்ஜினி சண்
02.03.2025
02/03 ஞாயிறு :
“சமூக ஒருங்கிசைவை வலியுறுத்தும் ஆண்டு 2025” :
“மூத்தோர் மாண்பு போற்றும் சிறப்பு மாதம் மார்ச் 2025” :
Fatvtamil.com
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
[ பெற்றோருடன் வாழ்ந்த காலங்களூடாக, அவர்களை நன்றியோடூ உயிரூட்டுவோம்…]
பாராட்டுகள்