World Sports News

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார விஞ்ஞானம் மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று, இன்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் அந்த வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. 20 வயதுடைய ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
oooooooooooooooooooooooo
குறிப்பிட்ட விலங்கை இறைச்சிக்காக வெட்டும் போது, இஸ்லாமிய சட்டம் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அளிக்கும் சான்று, ஹலால் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹலால் முறைக்கு மாற்றாக, ‘மல்ஹார்’ சான்று வழங்கும் நடைமுறையை மஹாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், மல்ஹார் சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இருமொழி கொள்கையை வலியுறுத்தியும் தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், ‘சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியதாலேயே, சோவியத் யூனியன் சிதைவடைந்து, 15க்கும் மேற்பட்ட நாடுகளாக பிரிந்தது’ என்று, குறிப்பிட்டிருக்கிறார்.
தி.மு.க., நம் அனைவரையும் ஏமாற்றிவிட்டது. வரும் 2026 தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை மாற்றுவோம் என்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் வருகையாகும்.
குவைத்தில் புனித ரமழான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரமழான் மாதத்தில் யாசகம் பெற்றுச் சிக்கிய வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனி முழுவதும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாரிய பணி பகிஷ்கரிப்பின் ஒரு பகுதியாக விமான ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஞாயிற்றுக்கிழமை ஹம்பர்க் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இந்த பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் ஜேர்மனியின் வர்த்தகத் தொழிற்சங்கமான வெர்டி விடுக்கவில்லை.
காலை வேளை 10 விமானங்கள் சென்ற பின்னர் விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததாக ஹம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பினால் விமாநிலையத்திற்கு வருகை தரவிருந்த 144 விமானங்களும், புறப்படவிருந்த 139 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஸ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
ஹீத்ரோ விமான நிலைய சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலைய சுரங்கப்பாதையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் வேகமான காற்று மற்றும் புயல் போன்ற அனர்த்தங்கள் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
கோடைக்கால பயணங்களுக்கான OUIGO பயணசிட்டைகள் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
குளிர்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த பருவகாலத்தை எதிர்கொள்ள நாடு தயாராகிறது. ஆண்டுதோறும் இடம்பெறும் நேரமாற்றமும் இடம்பெற உள்ளது.
இம்மாதம் மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவு இந்த நேர மாற்றம் பதிவாகிறது. அதிகாலை 2.00 மணிக்கு நேரத்தினை ஒருமணிநேரம் அதிகமாக 3.00 என மாற்ற வேண்டும்.
இந்த நடைமுறை ஜேர்மனி, இங்கிலாந்தின் பின்னர் பிரான்சில் முதன்முற்சியாக 1916 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
குளிர்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த பருவகாலத்தை எதிர்கொள்ள நாடு தயாராகிறது. ஆண்டுதோறும் இடம்பெறும் நேரமாற்றமும் இடம்பெற உள்ளது.
இம்மாதம் மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவு இந்த நேர மாற்றம் பதிவாகிறது. அதிகாலை 2.00 மணிக்கு நேரத்தினை ஒருமணிநேரம் அதிகமாக 3.00 என மாற்ற வேண்டும்.
இந்த நடைமுறை ஜேர்மனி, இங்கிலாந்தின் பின்னர் பிரான்சில் முதன்முற்சியாக 1916 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
ooooooooooooo
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒலிம்பிக்கில் ஆட வேண்டும் என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும், அதிக ரன்கள் குவித்து விராட் கோலி கோல்டன் பேட் வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
முன்னதாக, இந்திய அணியின் தலைவரான ரோஹித் ஷர்மா நாணயத்தை சுழற்றினார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார்.
நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) நாணய சுழற்சியில் தொடர்ச்சியாக தோற்பது 12வது முறையாகும்.