அழகொளிரும் ஐப்பசி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2041!!

ஐப்பசி அழகொளிரும்..!!

சக்கரமாய்ச் சுழலும் திங்கள்
சரித்திரமாய் பதியும் எங்கும்
ஐப்பசியும் அழகு சிந்தும்
அளவான மழையும் பொழியும்

இருள் வந்து விரைந்து கௌவும்
இளங்காற்று முதிர்ச்சி கொள்ளும்
பகல் நேரம் சுருங்கிச் செல்லும்
முன் பனியும் மூசியே பெய்யும்

எழுச்சிப் பெண்கள் நாளும் வரும்
ஏனைய சிறப்பு நாளும் வரும்
என் தந்தையின் நினைவு கொஞ்சும்
துயரினால் விழிகள் கெஞ்சும்

பழுத்து உதிரும் இலைகள் எழில்
பார்வை முழுதும் மஞ்சள் அதில்
பருவ கால மாற்றம் விழிகளில்
பாரினில் உணர்வீர் பலதும் இதில்..

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading