இராசையா கௌரிபாலா

பரவசம்
————

பழகிப் பார்க்கப் பருவங்கள் பரவசம்
சுழலும் பூமிதனில் சுற்றிடப் பரவசம்
நிழலும் தொடருதே நிசத்தின் பரவசம்
மழலை மொழியில் மயங்கிடும் பரவசம்

பூக்கள் எல்லாம் புலர்ந்திடப் பரவசம்
ஏக்கம் தொலைந்த இரவும் பரவசம்
ஆக்கம் ஊக்கம் அளித்திடும் பரவசம்
பாக்கள் இனித்திடும் புரிதலில் பரவசம்

எல்லாம் பரவசம் எதிலும் பரவசம்
நல்லவராய் அவனியில் நாளும் பரவசம்
வல்லமை தந்து வானுயரப் பரவசம்
இல்லாப் பிறப்பை இனிதாக்கும் பரவசமே.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading