ஒளவை

பூமித்தாய்
…………………
அழகிய பூமியில்
அனைத்துமே அழகு
பழகிடும் தன்மையில்
பாசத்தைக் காட்டும்
வழங்குதே இன்பங்கள்
வள்ளலாய் எமக்கு
இழந்திட வேண்டாம்
இன்னல்கள் புரிந்து

மண்ணிற்கும் மனது
மறைவாய் உண்டு
எண்ணத்தைப் புரிந்தால்
ஏற்றங்கள் தருமே
கண்ணாய் நம்மைக்
காத்திடும் பூமியை
பண்பாய் நடத்திப்
பெருமை கொள்வோம்

வானும் நிலவும்
வளியும் நமக்கு
வாரி வழங்கி
வசந்தம் பெருக்க
ஈனப் பிறப்பாய்
இருக்கும் நாமோ
மானங் கெட்டு
மறந்தோம் அன்பை

காலம் என்றும்
கடமையைச் செய்யும்
ஞாலம் நம்மை
நட்பாய் அணைக்கும்
வாதம் புரிதல்
வன்மம் அன்றோ
பாதம் பணிந்தால்
பாரில் இன்பமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading