சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொங்குவாய்

அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை பேசுவார்கள் பலவாய்

உண்மையின் மகனாக எழுவாய்
தன்னலம் அகற்றி தெளிவாய்
கடவுளை நம்பியே தொழுவாய்
நடப்பவை நடந்திடும் வலுவாய்

உலக நடப்பினை அறிவாய்
பழுதான மனிதரை புரிவாய்
நடிப்பவர் வேடத்தை உரிவாய்
விடிவொன்று வரட்டுமே முடிவாய்

தொடங்கியே போராட்டத்தை தொடர்வாய்
அடங்கிடும் அநியாயம் அதுவாய்
மாற்றங்கள் நிகழ்ந்திடும் மெதுவாய்
சேற்றுக்குள்ளும் செந்தாமரையாய் தெரிவாய்

ஜெயம்
19-12-2025

Author: