கலவரம்

செல்வி நித்தியானந்தன்
கலவரம்

நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின் சத்தம்

ஆட்சி ஆளுமை
வைக்கும் சட்டம்
அராஜகம் பண்ணி
அழிக்கும் திட்டம்
அண்டை நாட்டை
பழிவாங்கும் கட்டம்
அரசியல் ஆட்டமும்
ஆகுதே நட்டம்

உளவினைப் பார்க்க
சுழழுதே வேவு
உச்சம் கொள்வதால்
அதிகரிக்கும் சாவு
உயிர்களை காக்க
இரங்கணும் இறைமை
உலகமே திரும்பி
உதவனும் முறைமை

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading