15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின் படியே காசினி உயர்வே
காலத்தை வென்று சாதனை படைப்போம்.
வினாக்கள் எழுகையில் விடைகளை நாடி
விழுகின்ற போது முயற்சியைத் தேடி
கனவுகள் யாவும் நனவாக மாற
கற்றலின் படியே காசினி உயர்வோம்.
இருளெனும் மனத்தினை இன்றே அகற்றி
இனிவரும் காலத்தில் அறிவொளி பரப்பி
தடைகளைத் தாண்டித் தனித்துவம் பெற்று,
தரணியில் உயர்வோம் தன்னம்பிக்கையோடு.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.