24
Sep
இல்லறத்தின் இன்பம்
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள் தேடி
கண்ணெதிர் அழிவைக் கண்டாயோ?
காற்றைப் பையில் அடைப்பதற்கு
கனவு காண்பது சாத்தியமா?
அளவோடு பகிரும் நல்மனமே
வளமோடு வாழத்தரும் அருளே
ஆசையை அடக்கக் கற்றுக்கொள் -இந்த
அகிலமே உனக்குச் சொந்தமாகும்
பேராசை விலங்கை உடைத்தால்,
பேரின்ப வாழ்க்கை வசந்தமாகும்.
இயற்கை கொடையை இரசித்து -நீ
இன்பத்தைக் காணக் கற்றுக்கொள்,
இல்லையேல் பேராசைக் காட்டுத்தீயில்
இறுதிவரை ஆயுளை எரித்துக்கொள்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.