திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்…
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில் ஒளியான மாவீரம்

உலகியல் நடப்புகள் ஏராளம்
உணர்விலே எரியுது பலகோலம்
அழிவியல் நோக்கிய புதுவேகம்
அர்த்தங்கள் சுமப்பின்
வாழ்வாகும்

கனவுகள் மெய்படும் புதுத்திருப்பம்
கடினத்தின் முயற்சியே கலிகாலம்
எத்தனம் ஏற்றிடும் தீபத்தில்
என்றுமே பிரகாச ஒளிக்கோலம்

கடந்தவை நடந்தவை அனுபவமாய்
கற்பவை அனுதினப் பட்டறிவாய்
தீட்டிடும் புத்தியே கூர்மைபடும்
திசையெங்கும் ஒளியாகி
மிளிர்வாகும்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading