குதூகலம்

செல்வி நித்தியானந்தன்
குதூகலம்

கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில் மேனியும்
நறுமணம் குளித்திட

திருவிழாகொண்டாட்டம்
அணியாய் வகுத்திட
திரளாய் மக்களும்
அழகுடன். அசைந்திட
விடுமுறை மக்களும்
இணைவாய்சேர்ந்திட
வீட்டிலும் சத்தமும்
மகிழ்வில் நனைந்திட

உறவுகள் கூடியே
உணவும் நிறைந்திட
உண்டு மகிழ்ந்து
உல்லாசம் கழித்திட
விழித்து விளையாடி
விடுமுறை சிறந்திட
விழியும் கலங்கிட
வியப்பாய் குதூகலம்

செல்வி நித்தியானந்தன்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading