மாறிடும் காலநிலை

கவி இலக்கம் 780 மாறிடும் காலநிலை வெயிலின் தாக்கம் மாறிடும் காலம் வெப்பம் தணிந்து கொட்டிய மழையாய் இரண்டு நாளாய் காலை மழையும் இடையிடை...

Continue reading

இயற்கை அழகினிலே..!!

🌿 இயற்கையின் அழகில் 🌿
வியாழன் கவி-2394
நீல வானமும்,
நீலக் கடலும்
கொள்ளை கொள்ளும் மனதை;
நித்தம் பூக்கும் பூவின் வண்ணம்
நினைவில் நின்றிடுமே!

பச்சை போர்த்திய புல்லின் மேனி,
பனிகள் தாங்கிய அழகின் காட்சி,
பார்வைகளை ஈர்க்கும் கோலம் —
என்றும் கவிதை புனையுமே!

விரிந்த வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரப் பிள்ளைகள்,
இருளின் மேனியில்
ஒளித் தூறலாய்
இரவைக் கட்டிப்போடும்!

பறவைகளின் இசையும்,
பட்டாம்பூச்சியின் சிறகடிப்பும்,
அலைகளின் ஓசையும்,
ஆலய மணியின் கீதமும்
என்றும் மனதைப் பண்படுத்துமே!

சிவதர்சனி ராகவன்
சுவிட்சர்லாந்திலிருந்து
23/9/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading